Sunday, November 5, 2023
குவைத்தில் திருமணமாகாத புலம்பெயர்ந்த இளைஞர்களை பாதிக்கும் புதிய சட்டம்!
குவைத்தில் பூர்வீகக் குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் திருமணமாகாத புலம்பெயர்ந்த இளைஞர்கள் ஒரு புதிய வீட்டுவசதி சட்டத்தால் பெரும் பின்னடைவைச் சந்திக்கின்றனர்.
ஒரு சட்டம் குடியுரிமை இல்லாத திருமணமாகாத புலம்பெயர்ந்த இளைஞர்கள் குடும்ப குடியிருப்பு மற்றும் தனியார் குடியிருப்பு பகுதிகளில் வசிப்பதை தடை செய்கிறது. அப்படிப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வீட்டுவசதி சட்டம் தொடர்பான முன்மொழிவு அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மாநகர விவகார அமைச்சர் ஃபஹத் அல் ஷுலா, அமைச்சரவை ஒப்புதலுக்காக வரைவு சட்டத்தை சமர்ப்பித்தார். முன்னதாக, இந்த சட்டத்திற்கு ஃபத்வா மற்றும் சட்டத் துறை ஒப்புதல் அளித்தது.
5000 தினார் வரை அபராதம்
இந்தச் சட்டம் அமுலுக்கு வருவதன் மூலம், குவைத்தில் உள்ள அனைத்து பூர்வீக குடியிருப்புப் பகுதிகளையும் தங்கள் குடும்பத்திற்கு வெளியே வசிக்கும் வெளிநாட்டினர் காலி செய்ய வேண்டும். சட்டத்தை மீறுபவர்களுக்கு குறைந்தபட்சம் 1000 தினார் முதல் 5000 தினார் வரை அபராதம் விதிக்கப்படும்.
இந்த குடியுரிமைத் தடையானது, வேலை வாய்ப்புகளை சுதேசிமயமாக்குவதால் பின்னடைவைச் சந்தித்த புலம்பெயர்ந்த சமூகத்தின் மீதும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஆறு வளைகுடா நாடுகளுக்கு ஒருங்கிணைந்த சுற்றுலா விசா
அதேநேரம், ஒரே விசாவில் ஆறு வளைகுடா நாடுகளுக்கு வருபவர்களை அனுமதிக்கும் ஒருங்கிணைந்த சுற்றுலா விசா விரைவில் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முடிவு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமுலுக்கு வரலாம்.
முன்னதாக, ஜி.சி.சி நாடுகளின் சுற்றுலா அமைச்சர்களின் கூட்டம் இந்த திட்டத்திற்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், பஹ்ரைன் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுக்கு ஒரே விசாவில் செல்லலாம். இந்த வசதி விரைவில் அமலுக்கு வரும்.
Kuwait, Kuwait strict housing regulations, Kuwait new resisential rule, Kuwait strict housing rules, Kuwait housing rules for expat bachelors
Saturday, November 4, 2023
முல்லைத்தீவு விசுவமடுவில் நுட்பமான முறையில் பணத்தை பறிக்கும் கொள்ளையர்கள்!! மக்களே அவதானம்!!
முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவடு கிழக்கு பகுதியில் இன்றைய தினம் இனந்தெரியாத இருவர் சிலரது வீடுகளுக்கு சென்று உங்களுக்கான அஸ்வதா கொடுப்பனவும் 80,000 உங்களது கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் அதை பெறுவதற்கு 30 ஆயிரம் ரூபாய் தற்பொழுது தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீங்கள் ஒப்படைத்த பணம் மீண்டும் உங்களது கணக்கில் வைப்பிலிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இப்பகுதியில் சமுத்தி உத்தியோகத்தர் வேலப்பழு அதிகம் காணப்படுவதால் இன்றே கணக்கினை முடிக்கவேண்டும் எனவும் என்னை இப்பகுதியில் மக்களிடம் காசை அறவிடவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
சமுத்தி உத்தியோகத்தரின் கட்டளைக்கமைவாகவே தான் இப்பகுதியில் மக்களின் காசுகளை பெற்று வருவதாக தெரிவித்ததை அடுத்து வீட்டு உரிமையாளர் தன்னிடம் தற்பொழுது பணம் இல்லை என தெரிவித்தார்.
சமுர்த்தி உத்தியோகஸ்த்தரிடம் கதைத்துவிட்டு சொல்கிறேன் என தொலைபோசியில் உரையாடுவது போல் பாசாங்கு செய்துள்ளார்.
மீண்டும் அவரிடம் வந்து அம்மா சரி உங்களிடம் இருக்கின்ற 5000 ரூபாய் பணத்தை தாருங்கள் மிகுதி பணத்தை சமூர்தியில் எடுத்து நாளைக்கு தந்தால் மாத்திரமே உங்களது 80 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற முடியும் என தெரிவித்துள்ளார்.
அந்த வீட்டில் இருந்த முதியவரும் சரி நாளைக்கு உங்களது பணத்தை பெற்று தருவதாக தெரிவித்து 5000 ரூபாய் பணத்தை ஒப்படைத்துள்ளார்.
இது போன்று இவர் பலரிடம் பணம் வசூலித்து சென்று உள்ளார் இது தொடர்பாக சமுர்த்தி உத்தியோகிரிடம் கேட்ட போது இது தொடர்பாக தமக்கு எந்தவித தகவலும் தெரியாது. இது தொடர்பாக தமக்கு எந்தவித தகவலும் இப்படி வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார் எனவே மக்கள் அவதாரத்துடன் விழிப்புடன் செயல்பட வருமாறு பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
கனேடிய இராணுவ ஹெலிகாப்டருக்கு முன்னால் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக பறந்த சீனப் போர் விமானம்; கனடா சீற்றம்!
கனேடிய இராணுவ ஹெலிகாப்டருக்கு முன்னால் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக பறந்த சீனப் போர் விமானம்; கனடா சீற்றம்!
கனேடிய இராணுவ ஹெலிகாப்டருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக சீனப் போர் விமானம் பறந்தது கனடாவின் கோபத்தைத் தூண்டியுள்ளது.
கனடாவின் HMCS Ottawa இராணுவத்திற்கு சொந்தமான CH-148 Cyclone ஹெலிகாப்டருக்கு முன்னால் சீனாவின் J-11s போர் விமானம் ஆபத்தான முறையில் பறந்தது ஆத்திரமூட்டலைத் தூண்டியதாக கனடாவின் தேசிய பாதுகாப்பு துறை (Department of National Defence) தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தென் சீனக் கடலில் Paracel தீவுக்கு அருகில் சர்வதேச எல்லையில் பயணித்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஹெலிகாப்டர் மீது சீன விமானம் சுட்டதாக கனேடிய பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேயர் (Bill Blair) தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மீண்டும் ஒருமுறை அதே ஹெலிகாப்டரை சீன போர் விமானம் தக்க முயன்றதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த சம்பவம் குறித்து தனது கவலையை சீனாவிடம் தெரிவிப்பதாகவும் பிளேயர் கூறினார். ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகக்கூடிய ஒரு சம்பவம் இது என்றும் அவர் கூறினார்.
சீன விமானப்படையின் ஆபத்தான இந்த நடத்தை இரண்டாவது முறையாக நடந்துள்ளது. கடந்த மாதம், ஒரு சீன ஜெட் விமானம் ஐநா பணியின் ஒரு பகுதியாக இயங்கிய கனடாவின் கண்காணிப்பு விமானம் ஒன்றின் 16 அடிக்குள் வந்ததாக, பிளேயர் கூறினார்.
Canadian military helicopter, South China Sea, Chinese fighter jets, Department of National DefenceCanadian Armed Forces/Combat Camera
அன்ரி தெய்வீகக் காதல்!! இளைஞனின் தாய் தற்கொலை முயற்சி!!
மட்டக்களப்பு கல்முனையைச் சேர்ந்த 20 வயது இளைஞனுடன் காதல் லீலைகளில் ஈடுபடும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த இந்த அன்ரியின் வயது 40.
இவர்கள் இருவரும் தற்போது மத்தியகிழக்க நாடு ஒன்றிலிருந்து தங்களது காதல் தெய்வீகக் காதல் என கூறி
இவர்கள் இருவரும் தாம் ஒன்றாக லீலைகள் புரியும் காட்சிகளை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த இளைஞனின் தாயார் இவர்களின் இந்த செயற்பாட்டினால் தற்கொலைக்கு முயன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சமூகவலைத்தளங்களில கருத்துகள் வெளியாகியுள்ளது.
பாலாவியில் வீட்டுக்குள் புகுந்து திருடன் நடாத்திய திருவிளையாடல்!! சேலை உடுத்து பிடிபட்டது எப்படி?
பாலாவி – முல்லை ஸ்கீம் கிராமத்தில் யாருமே இல்லாத வீடொன்றில் திருட வந்த திருடன் அந்த வீட்டில் படுத்துறங்கிய பின், தனது உடம்பை தாவாணியால் மறைத்த நிலையில் தப்பியோடிய விசித்திரமான சம்பவம் ஒன்று இன்று (04) பதிவானது.
இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
இன்று அதிகாலை 3 மணிக்கும் 4 மணிக்கும் இடையில் 35 வயது மதிக்கத்தக்க திருடன் ஒருவன் முல்லை ஸ்கீம் கிராமத்திற்கு வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, இரவு நேரப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நடமாடும் பொலிஸ் வாகனம் ஒன்று அந்தப் பகுதியால் வருகை தந்ததை அவதானித்த குறித்த திருடன், முல்லை ஸ்கீம் கிராமத்தில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
குறித்த திருடன் திடீரென புகுந்த வீட்டிற்குள் யாருமே இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு யாருமே இல்லாத வீட்டிற்குள் சமயலறை ஊடாக நுழைந்த குறித்த திருடன், அந்த வீட்டின் சமயலறையில் இருந்த குப்பி விளக்கொன்றினை ஏற்றி வெளிச்சத்தை வரவைத்துள்ளார்.
பின்னர், அந்த வீட்டில் இருந்த நுளம்பு வலையை எடுத்து தூங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். அந்த வீட்டில் இருந்த துணிகளை எடுத்து தலையணைக்காகவும் பயன்படுத்தியுள்ளார்.
மேலும், பீடிகளை புகைத்துள்ள அந்த திருடன், ஐஸ் போதைப் பொருளும் பாவித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இன்று காலை 8 மணியளவில் திருடன் தங்கியிருந்த வீட்டில் சத்தம் ஒன்று கேட்டபோது, யாமில்லாத வீட்டிலிருந்து சத்தம் வருவது எப்படி என்று நினைத்து அந்த வீட்டிற்கு பக்கத்திலுள்ளவர் அவதானித்துள்ளனர்.
எனினும் அங்கு நபர் ஒருவர் இருப்பதை கண்ட பக்கத்துவீட்டார் இதுபற்றி வீட்டின் உரிமையாளருக்கு தொலைபேசி ஊடாக தகவல் வழங்கியுள்ளதுடன், ஏனையோருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும், அந்த வீட்டிலிருந்த திருடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தான் அணிந்து வந்த ஆடைகளை கழற்றி தங்கியிருந்த வீட்டின் சமயலறையில் வைத்துவிட்டு, அந்த வீட்டிலிருந்த பெண்கள் அணியும் தாவாணி ஒன்றை அணிந்த நிலையிலேயே அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இவ்வாறு தாவாணி அணிந்த நிலையில் தப்பிச் செல்லும் காட்சிகள் அந்தக் கிராமத்தின் சில வீடுகளில் பொருத்தப்பட்ட சீ.சி.டி.வி கமராக்களில் பதிவாகியுள்ளன.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட முல்லை ஸ்கீம் இளைஞர்களும் ஊர்மக்களும் ஒன்று சேர்ந்து தப்பியோடிய குறித்த திருடனை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், பெண்கள் அணியும் தாவாணியோடு தப்பியோடியதாக கூறப்படும் குறித்த திருடன், அந்த கிராமத்தின் பற்றைக்குள் பதுங்கியிருந்த நிலையில் ஊர் மக்களால் பிடக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த திருடன் பல திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர் என்றும், நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் இவர் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புத்தளம் – பாலாவி அல்காசிமி சிட்டி கிராமத்தில் இவ்வாறு நூதனமான முறையில் அடிக்கடி பல திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக அக்கிராம மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை: வெளியாகிய அறிவிப்பு..! | Sri Lanka School Third Term Holiday
நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை விடுமுறை நாட்களை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் அதனை கூறியுள்ளார்.
அதன்படி, மூன்றாம் தவணைக்கான பாடசாலை விடுமுறைகள் டிசம்பர் 22, 2023 முதல் பெப்ரவரி 2, 2024 வரை இருக்கும் என தெரிவித்துள்ளார்.
உயர்தர பரீட்சை
2023 (2024) உயர்தரப் பரீட்சை 2024 ஜனவரி 04 முதல் ஜனவரி 31 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த பரீட்சைக்கான விடுமுறையும் மூன்றாம் தவணை விடுமுறையும் இணைத்தே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Friday, November 3, 2023
வட கிழக்கு மாகாணங்களில் பலத்த காற்று..! இடியுடன் கூடிய மழை: பொதுமக்களுக்கு வெளியாகிய எச்சரிக்கை | Weather Today Sri Lanka
மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை
ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யக் கூடும் எனவும், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் பனிமூட்டமான நிலை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Weather Today Sri Lanka
கடல் பகுதிகள்
கொழும்பில் இருந்து புத்தளம் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில், குறிப்பாக பிற்பகல் அல்லது இரவு வேளையில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
காற்று தென்கிழக்கு அல்லது திசையில் மாறுபடும் மற்றும் காற்றின் வேகம் மணிக்கு 20-30 கி.மீ. தீவைச் சுற்றியுள்ள கடற்பரப்புகள் சிறிதளவு காணப்படும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலின் அபாயத்தைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
யாழ் பொலிகண்டியில் திடீரென காணாமல் போன கிணறு!!
பொலிகண்டி பகுதியில் உள்ள கிணறு ஒன்று இடிந்து கீழ் இறங்கியுள்ளமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொலிகண்டி வீரபத்திரர் கோவில் பகுதியில் உள்ள கிணறு ஒன்றே இவ்வாறு இடிந்து கீழ் இறங்கியுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள கிணற்றின் சுற்று சுவர் இன்று (03) வெள்ளிக்கிழமை காலை இடிந்து கீழ் இறங்கி உள்ளது. அத்துடன் கிணற்றுக்கு அருகில் உள்ள நிலப்பரப்பும் வெடிப்பு ஏற்பட்டு காணப்படுகின்றது.
கிணறு இடிந்ததற்கான காரணங்கள் எதுவும் உடனடியாக தெரியவராத நிலையிலும் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக கிணறு இடிந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
பிரான்சில் 20 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மாணவர்கள் வெளியேற்றம் | Bomb Threat To 20 Schools In France
பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள 20 யூத பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று, வாரத்தின் முதல் நாள் திங்கட்கிழமை, பள்ளிகள் திறந்த நிலையில், பாரீஸில் உள்ள 20 யூத பள்ளிகளில் வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறும் என அநாமதேய தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததைத் தொடர்ந்து,
பொலிசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் அந்த பள்ளிகளில் சோதனை மேற்கொண்டார்கள்.
Bomb Threat To 20 Schools In France
மாணவர்கள் வெளியேற்றம்
வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து மாணவர்கள் பள்ளிகளிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். தங்கள் பிள்ளைகளை உடனடியாக வீட்டுக்கு அழைத்துச் செல்ல பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், எந்த பள்ளியிலும் இதுவரை வெடிப்பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. பொலிசார் தொடர்ந்து சோதனைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
பிரித்தானியாவை தாக்கிய சியாரன் புயல்; தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கம்., 88 வெள்ள எச்சரிக்கைகள்!
பிரித்தானியாவின் டர்ஹாம் கவுண்டியில் 1.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை ஒரு மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை பிரிட்டிஷ் புவியியல் ஆய்வு மையம் பதிவு செய்துள்ளது.
டர்ஹாம் கவுண்டியில் உள்ள குவாக்கிங் ஹவுஸ் என்ற சிறிய கிராமத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 1.3 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது.
UK earthquake, Britain hit by tremors, Storm Ciaran, Yellow Rain Warning, Flood warning in UK, UK Rains, UK WeatherPA
சியாரன் புயல் பாதிப்புகள்
இதற்கிடையில், இங்கிலாந்தை சியாரன் புயல் தாக்கியது. மணிக்கு 104 மைல் வேகத்தில் காற்று வீசியது. புயலால் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
டெவோன், கார்ன்வால், சசெக்ஸ் மற்றும் சர்ரே உள்ளிட்ட தெற்கு இங்கிலாந்தில் சியாரன் புயல் பேரழிவை ஏற்படுத்தியது. இந்த இடங்களில் 300க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டன.
கடும் வெள்ளம் காரணமாக பல இடங்களில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. சில பகுதிகளில் புயலால் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
தெற்கு இங்கிலாந்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மோசமான வானிலை காரணமாக ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில் ஆபரேட்டர்கள் அறிவித்துள்ளனர்.
UK earthquake, Britain hit by tremors, Storm Ciaran, Yellow Rain Warning, Flood warning in UK, UK Rains, UK WeatherPA
மழைக்கு வாய்ப்பு., மஞ்சள் எச்சரிக்கை
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை நீக்கியுள்ளது ஆனால் தெற்கு இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் இன்று நள்ளிரவு வரை காற்று மற்றும் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
வெள்ளிக்கிழமை வடகிழக்கு ஸ்காட்லாந்திற்கும், சனிக்கிழமையன்று தென்கிழக்கு இங்கிலாந்திற்கும் மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை உள்ளது.
அத்துடன் 88 வெள்ள எச்சரிக்கைகள் இங்கிலாந்தின் தெற்கில் பரவலாக உள்ளன, மேலும் 220 வெள்ள எச்சரிக்கைகள் (சாத்தியமான வெள்ளம்) நாடு முழுவதும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job