Saturday, July 5, 2025
குருவிட்ட பகுதியில் 25 வயது யுவதியுடன் உறவு கொள்ள ஆசைப்பட்ட 17 வயது காவாலி!! யுவதி மறுத்ததால் கொலை!! “செபி” மோப்பம் பிடித்தது எப்படி?
குருவிட்ட பகுதியில் 25 வயது யுவதியுடன் உறவு கொள்ள ஆசைப்பட்ட 17 வயது காவாலி!! யுவதி மறுத்ததால் கொலை!! “செபி” மோப்பம் பிடித்தது எப்படி?
குருவிட்ட பகுதியில் நேற்று முன்தினம் (03) இருபத்தைந்து வயது யுவதியின் கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பதினேழு வயது இளைஞரை குருவிட்ட பொலிசார் கைது செய்தனர். தனியார் நிறுவனத்தில்பணிபுரிந்த இந்த யுவதியின் கொலையில் தொடர்புடைய சந்தேக நபர், ‘செபி’ என்ற பொலிஸ் நாய் வழங்கிய துப்பின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கொலை செய்யப்பட்ட யுவதியின் உடலுக்கு அருகில் காணப்பட்ட ஒரு தடித் துண்டை ‘செபி’ என்ற அதிகாரப்பூர்வ நாய் மோப்பம் பிடிக்க வைத்த பிறகு, அந்த நாய் சம்பவ இடத்தில் கூடியிருந்த பொதுமக்களிடம் செலுத்தப்பட்டது. கூட்டத்தில் இருந்த பதினேழு வயது இளைஞனை ‘செபி’ அணுகியபோது, அது அவரது கால்களை நக்கி, அவருக்கு அருகில் படுத்துக் கொண்டது. இது பொலிசாரின் கவனத்தை ஈர்த்தது.
பின்னர் சந்தேக நபர் குழுவிலிருந்து பிரிக்கப்பட்டு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் வைக்கப்பட்டார்.
இரண்டாவது மற்றும் மூன்றாவது முறையாக பொலிசார் அந்த தடித்துண்டை நாயிடம் மோப்பம் பிடிக்க கொடுத்த போது, அது முச்சக்கர வண்டிக்குச் சென்று சந்தேக நபரை சரியாக அடையாளம் கண்டது. இந்த அடையாளத்தைத் தொடர்ந்து, சந்தேக நபர் குருவிட்ட காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் இளம் பெண்ணைப் பார்த்த சந்தேக நபர், அவருடன் காதல் உறவு கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார். யுவதி அதை உறுதியாக நிராகரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 17 வயது இளைஞன், யுவதி கொன்றது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலைக்குப் பிறகு, சந்தேக நபர் யுவதி அணிந்திருந்த தங்க நெக்லஸைத் திருடி தப்பிச் சென்றுள்ளார், மேலும் அவரது மொபைல் போன் அருகிலுள்ள பள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
Friday, July 4, 2025
குப்பை தொட்டிக்குள் இளம் வர்த்தகரின் உடலம் – பொலிஸார் அதிர்ச்சி
குப்பை தொட்டிக்குள் இளம் வர்த்தகரின் உடலம் – பொலிஸார் அதிர்ச்சி
மாரவில பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர், பல நாட்களாக காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் வென்னப்புவ பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக அவரது நண்பர் ஒருவர் வென்னப்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
30ஆம் திகதி முதல் காணாமல் போனதாக முறைப்பாடு
மாரவில, கட்டுநேரிய பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஸ்ரீஜித் ஜயஷன் என்ற இந்த வர்த்தகர், கடந்த 30ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்ததாக வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி நடத்தப்பட்ட விசாரணையில், நேற்று (03) மாலை வென்னப்புவ பகுதியில் உள்ள வர்த்தகரின் நண்பரின் வீட்டில் அவரது மோட்டார் வாகனம் கண்டெடுக்கப்பட்டது.
பின்னர், அந்த நண்பரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வென்னப்புவ சிரிகம்பொல பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் குப்பைத் தொட்டியில் காணாமல் போன வர்த்தகரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
கடந்த 30ஆம் திகதி இரவு, வர்த்தகர் தனது ஐந்து நண்பர்களுடன் மது அருந்தியதாகவும், அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, வர்த்தகர் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு, குப்பை தொட்டியில் வீசப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழாவில் பயங்கரம்!! தேரின் கலசம் விழுந்து ஒருவர் பலி!! பலர் படுகயாம்!!
முல்லைத்தீவு பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழாவில் பயங்கரம்!! தேரின் கலசம் விழுந்து ஒருவர் பலி!! பலர் படுகயாம்!!
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழாவில் தேரிலுள்ள கலசம் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவமானது இன்றையதினம் (4) இடம்பெற்றுள்ளது.
தேரிலுள்ள கலசத்தில் மின்வடம் தட்டுப்பட்டு கலசம் கீழ் விழுந்ததாக தெரியவந்துள்ளது.கலசம் சுமார் 50 கிலோ எடையிருக்கும் என கூறப்பட்டுள்ளது.இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Thursday, July 3, 2025
கந்தானை துப்பாக்கிச் சூடு தொடர்பில் வௌியான திடுக்கிடும் தகவல்கள்.!
கந்தானை துப்பாக்கிச் சூடு தொடர்பில் வௌியான திடுக்கிடும் தகவல்கள்.!
இன்று (03) காலை 10 மணியளவில், கந்தானை பொது சந்தை அருகே அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் மோட்டார் சைக்கிளில் வந்து, T-56 துப்பாக்கியைப் பயன்படுத்தி கார் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர்.
இந்தத் தாக்குதலின் இலக்கு, காரில் பயணித்த சமீர மனஹர என்பவர் என பொலிஸார் தெரிவித்தனர். இவர் மறைந்த அமைச்சர் மங்கள சமரவீரவின் முன்னாள் பிரத்தியேக செயலாளராக பணியாற்றியவர் ஆவார்.
துப்பாக்கிச் சூட்டில் காரில் பயணித்த இருவர் காயமடைந்து ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சமீர மனஹரவின் முதுகில் குண்டு காயம் ஏற்பட்ட போதிலும், அவரது நிலை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
உயிரிழந்த நபரான உபாலி அமுனுவில, சமீர மனஹரவின் மைத்துனன் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் நடந்தபோது, இருவரும் உடற்பயிற்சி மையத்தில் இருந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதையடுத்து, சாரதி காரை பின்னால் செலுத்திய போது, அது அருகிலுள்ள மின் கம்பத்தில் கார் மோதியது. இதில் ஒரு பாதசாரி காயமடைந்தார். மேலும், அருகில் இருந்த பெண்ணின் ஒருவரின் கழுத்தில் கார் மீது பட்ட தோட்டா தாக்கியதில் அவர் காயமடைந்துள்ளார், ஆனால் அவரது நிலையும் கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்பட்டது.
இதன்போது, 30 தோட்டாக்கள் கொண்ட T-56 மெகசினில் இருந்து 23 தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் துப்பாக்கிச் சூடு, சமீர மனஹரவிற்கும், துபாயில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளியான கந்தானே கொண்ட ரஞ்சி மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளியான சூட்டி மல்லி ஆகியோருக்கு இடையேயான மோதலின் விளைவாக நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சமீர மனஹர, மங்கள சமரவீரவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றியபோது, போதைப்பொருள் வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். உயிரிழந்த உபாலி குலவர்தனவின் மீதும் இதேபோன்ற வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இருப்பினும், துப்பாக்கிச் சூட்டுக்கான உறுதியான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை.
இச்சம்பவம் தொடர்பில், மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு உள்ளிட்ட பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து, பொலிஸாரினால் தற்காலிக வீதித் தடைகள் அமைக்கப்பட்டு, சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
வயம்ப பல்கலைக்கழக மாணவிக்கு தனது குஞ்சுமணியின் வீடியோக்கள அனுப்பிய றைவர் கைது!!
வயம்ப பல்கலைக்கழக மாணவிக்கு தனது குஞ்சுமணியின் வீடியோக்கள அனுப்பிய றைவர் கைது!!
வயம்ப பல்கலைக்கழக மாணவி ஒருவரின் கையடக்க தொலைபேசிக்கு நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி மிரட்டியதாகக் கூறப்படும் ஒரு ஓட்டுநர். வடமேற்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால், புதன்கிழமை (02) அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹாவ, பலல்ல, அமுனுகோலேவைச் சேர்ந்த 24 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநாகலைச் சேர்ந்த மாணவி, வடமேற்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அளித்த புகாரைத் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டனர்.
சந்தேக நபர், போலியான பேஸ்புக் கணக்கைப் பயன்படுத்தி, மாணவியின் பேஸ்புக் கணக்கிற்கு ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி, தன்னுடன் உடலுறவு கொள்ளுமாறு மிரட்டியுள்ளார், இல்லையெனில் அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் பேஸ்புக்கில் வெளியிடப்படும் என்று மிரட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கனடாவிலிருந்து யாழ் வந்து ஆசையாக சைக்கிள் ஓடிய சுமதி வாகனம் மோதிப் பலி!!
கனடாவிலிருந்து யாழ் வந்து ஆசையாக சைக்கிள் ஓடிய சுமதி வாகனம் மோதிப் பலி!!
கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண்ணொருவர் பட்டா ரக வாகனம் மோதியதால் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.கண்டி வீதி, மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற குறித்த விபத்தில் சுமதி இராஜரட்ணம் (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண் கடந்த 27ஆம் திகதி பாண் வாங்குவதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்றபோது வீதியால் சென்ற பட்டா ரக வாகனம் அவர் மீது மோதியது. இந்நிலையில் அவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி வின்சன் அன்ரலா மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Wednesday, July 2, 2025
பெண்களுடன் லீலை!! சமூகவிரோதிகளுடன் நெருக்கம்!! ஒட்டிசுட்டான் பொலிஸ் OIC உட்பட அதிகாரிகளின் துஸ்பி ரயோகம்!!
பெண்களுடன் லீலை!! சமூகவிரோதிகளுடன் நெருக்கம்!! ஒட்டிசுட்டான் பொலிஸ் OIC உட்பட அதிகாரிகளின் துஸ்பி ரயோகம்!!
ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய OIC ரஞ்சித் வவுணுசிங்க மற்றும் குறித்த பொலிஸ் நிலையத்தில் சிவில் உடையில் பணிபுரியும் உதவிப் பொலிஸ் பரிசோதகர் சாமரை, பொலிஸ் ரொட்றிக்கோ (pc 96644) ஆகியோர் இணைந்து பல மதங்களாக அப் பிரதேச மக்களை சித் திரவதைக்குட்படுத்தி வருகின்றனர்.
அதாவது ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் 6 மணிக்குப் பின்னர் வீதியால் செல்லும் போது அவர்களை சந்தேகம் எனும் பெயரில் பொய்யாக குற்றம்சாட்டி குறித்த பொலிஸ் அதிகாரிகள் கைது செய்கின்றனர்.
அதன் பின்னர் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டவர்களை கைவிலங்கிட்டு மோட்டர் சைக்கிளில் அழைத்துச் சென்று சிறையில் அடைக்கிறார்கள்.
இவ்வாறு தினமும் 5 இற்கும் மேற்பட்டவர்களை கைது செய்து அவர்களின் கைவிரல் அடையாளங்களைப் பெற்று அதனை கொழும்புக்கு அனுப்புகிறார்கள்.
இதனையடுத்து, காலை வேளையில் குறித்த நபர்கள் மீது கசிப்பு காய்ச்சியவர்கள் போன்ற பல குற்றச்சாட்டுக்களை சுமத்தி பொய்யாக வழக்கு போட்டு நீதிமன்றத்துக்கு அனுப்புகிறார்கள்.
அதன்பின்னர் குற்றவாளிகள் என குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தில் குற்றப்பணம் கட்டிய பின்னர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்படுகின்றனர்.
கடந்த 6 மாத காலத்திற்கும் மேலாக இப் பிரதேச மக்கள் OIC ரஞ்சித் வவுணுசிங்க, உதவிப் பொலிஸ் பரிசோதகர் சாமரை, பொலிஸ் ரொட்றிக்கோ ஆகியோரால் கடும் சித் திரவதைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
அத்துடன் குறித்த பொலிஸ் அதிகாரிகள் இலஞ்சம் மற்றும் பெ ண்களை பாலி யல் துஷ்பி ரயோகம் செய்தல் போன்ற பல்வேறு குற்றச் செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை நாட்டிற்கு அம்பலப்படுத்தி அவர்களுக்குரிய தண்டனைகளை பெற்றுக் கொடுப்பதுடன் குற்றமற்ற நாட்டை உருவாக்குவோம்.
தனது 14 வயது மகளுடன் உறவு கொண்ட தாய் கைது! நடந்தது என்ன?
தனது 14 வயது மகளுடன் உறவு கொண்ட தாய் கைது! நடந்தது என்ன?
தனது 14 வயது மகளுடன் ஓ ரினச் சேர்க்கையில் ஈடுபட்ட தாய் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இடம்பெற்றுள்ளது.
அங்கு 38 வயது பெண் வசித்து வருகிறார். இவருக்கு 14 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அந்த பெண்ணின் கணவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அவரை பிரிந்து சென்றுவிட்டார். இதனால் அந்த பெண், தனது மகளுடன் தனியாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அவரது மகள் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் பாடசாலையில் தற்போது 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் அவரது பாடசாலையில் பாலி யல் வ ன் கொ டுமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அதில் அந்த மாணவி பங்கேற்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டாள். அதாவது கடந்த 6 ஆண்டுகளாக தன்னை தனது தாயே பா லி யல் வ ன்கொ டுமைக்கு உட்படுத்தி வருவதாக தெரிவித்தாள். இதைக்கேட்டு ஆசிரியைகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுபற்றி பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலமாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் பாடசாலைக்கு வந்த பொலிஸார் அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி கதறி அழுதாள். இதையடுத்து பொலிஸார் அந்த மாணவியின் தாயை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், திருமணத்துக்கு பிறகு கணவனுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று தான் தனது மகளுக்கு கற்றுக்கொடுத்ததாக பகீர் வாக்குமூலம் அளித்தார்.
அதையடுத்து பொலிஸார் அந்த சிறுமியின் தாயை கைது செய்தனர். தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து பொலிஸார் விசாரித்து வருகிறார்கள். மகளுடன், தாய் ஓ ரின ச்சேர்க்கையில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tuesday, July 1, 2025
ஏமாற்றிய காதலியை பொது இடத்தில் கொடூரமாக கொன்ற காதலன்
இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் நர்சிங்பூர் மாவட்டத்தில், மாவட்ட மருத்துவமனைக்குள் 12 ஆம் வகுப்பு மாணவி சந்தியா சவுத்ரி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை தொடர்பான சிசிரிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் ஜூன் 27 அன்று நடந்தது. அவரது ஏமாற்றப்பட்ட காதலரான அபிஷேக் கோஷ்டியால் இது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மருத்துவமனையின் ட்ராமா சென்டருக்கு வெளியே அமர்ந்திருந்தபோது சந்தியா தாக்கப்பட்டார்.
பல உதவியாளர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் இருந்தபோதிலும், யாரும் இதில் தலையிடவில்லை.
இந்த காட்சிகளில், முன்னாள் காதலன் அபிஷேக் சந்தியாவை எதிர்கொள்கிறார். இருவரும் ஏதோ ஓரிரு வார்த்தை பேசுகிறார்கள். பின்னர் அவளை உடல் ரீதியாக தாக்குகிறார், கத்தியால் அவரது கழுத்தை வெட்டுகிறார்.
மோட்டார் சைக்கிளில் வளாகத்தை விட்டு தப்பிச் செல்வதற்கு முன்பு அவர் தனக்குத்தானே தீங்கு விளைவிக்க முயன்றார்.
நிகழ்வை நேரில் பார்த்த ஒரு நர்சிங் அதிகாரி, ஊழியர்கள் தலையிட முயன்றபோது அபிஷேக் தன்னை மிரட்டியதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். “தலையிட வேண்டாம் என்று அவர் என்னை எச்சரித்தார், இல்லையெனில் அவர் என்னையும் கொன்றுவிடுவார்” என்று அதிகாரி கூறினார்.
நரசிங்பூரில் உள்ள படேல் வார்டில் வசிக்கும் ஹிராலால் சவுத்ரியின் மகள் சந்தியா, மகப்பேறு வார்டில் அனுமதிக்கப்பட்ட ஒரு அறிமுகமானவரைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்திருந்தார்.
பின்னர் அவர் தாக்குதல் நடந்த அதிர்ச்சி மையத்தின் 22வது எண் அறைக்கு வெளியே அமர்ந்திருந்த போது கொல்லப்பட்டார்.
ஜூன் 27 ஆம் தேதி நண்பகல் முதல் கோஷ்டி மருத்துவமனைக்கு அடிக்கடி வந்து செல்வதாக போலீசார் தெரிவித்தனர்.
சுமார் மதியம் 2:30 மணியளவில், அவர் சந்தியாவைப் பார்த்தார். அவருடன் சிறிது நேரம் பேசினார். மேலும் அதிர்ச்சி மையத்திற்கு அவரைப் பின்தொடர்ந்தார்.
மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு காவலர்கள் இருந்தபோதிலும், அவர் தாக்குதலை நடத்தி தப்பினார். அதிக இரத்தப்போக்கு காரணமாக சந்தியா சம்பவ இடத்திலேயே இறந்தார்.
சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே காவல்துறை மற்றும் தடயவியல் குழுக்கள் வந்தன. விசாரணையின் போது சந்தியாவின் உடல் பல மணி நேரம் அந்த இடத்திலேயே இருந்தது.
தகவல் கிடைத்ததும், அவரது குடும்பத்தினர் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். மூத்த அதிகாரிகள் முழுமையான விசாரணை நடத்துவதாக உறுதியளித்ததை அடுத்து, அன்றிரவு போராட்டம் கைவிடப்பட்டது.
சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்திற்குள் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டதாக நர்சிங்பூர் எஸ்பி மிருகாகி தேகா உறுதிப்படுத்தினார்.
சாத்தியமான நோக்கம் குறித்து, எஸ்பி கூறுகையில், “குற்றம் சாட்டப்பட்டவரின் அறிக்கையின்படி, , சமூக ஊடக நட்பில் தொடங்கி அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவரையொருவர் அறிந்திருந்தனர். இந்த ஆண்டு ஜனவரி முதல், அவர் வேறு யாரையோ காதலிக்கிறார் என்று சந்தேகித்து, சந்தியா ‘தன்னை ஏமாற்றுகிறார்’ என்று கூறினார். சந்தியாவைக் கொன்று தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டதாக அவர் ஒப்புக்கொண்டார். தாக்குதலுக்குப் பிறகு அவர் தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ள முயன்றார், ஆனால் தோல்வியடைந்தார்.”
சம்பவம் நடந்த நேரத்தில், அதிர்ச்சி மையத்திற்கு வெளியே இரண்டு காவலர்கள் நிறுத்தப்பட்டனர். இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவர் மருத்துவமனை வளாகத்திலிருந்து தப்பிக்க முடிந்தது.
அமெரிக்காவில் வானில் இருந்து கொட்டிய டொலர் மழை : போட்டி போட்டு அள்ளிய மக்கள் | People Catch Dollars Falling From The Sky In Us
அமெரிக்காவில் வானில் இருந்து கொட்டிய டொலர் மழை : போட்டி போட்டு அள்ளிய மக்கள்!
அமெரிக்காவில் உயிரிழந்த ஒருவரின் கடைசி ஆசை காரணமாக உலங்கு வானூர்தியிலிருந்து பெருந்தொகை டொலர் நிலத்தில் கொட்டப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறு கொட்டப்பட்ட இந்த டொலரை எடுப்பதற்காக மக்கள் முண்டியடித்தமையால் சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மரணமடைந்தவரின் இறுதி ஆசை
அண்மையில் காலமான உள்ளூர் கார் கழுவும் நிறுவன (car wash) உரிமையாளரான தோமஸ் என்பவரின் கடைசி விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக இவ்வாறு நடைபெற்றதாக கூறப்படுகிறது,
காலமாகிய தோமஸ் என்பவர் உள்ளூர் மக்களிடம் இருந்து தான் சம்பாதித்த பணத்தை தான் இறந்த பிறகு திரும்ப அவர்களுக்கே செலுத்த வேண்டும் என கோரிக்கை வைத்ததாகவும் இதனையடுத்து அவர் சம்பாதித்த பணம் இவ்வாறு உலங்கு வானூர்தியிலிருந்து கொட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இராணுவத்தினரால் கொன்று புதைக்கப்பட்ட அப்பாவி பெண்கள்: தலைமறைவான முக்கிய புள்ளிகள்!
இராணுவத்தினரால் கொன்று புதைக்கப்பட்ட அப்பாவி பெண்கள்: தலைமறைவான முக்கிய புள்ளிகள்!
நீதிக்கான போர் என்ற சாயலில் பல தமிழ் பெண்கள் கொடூரமாக இராணுவத்தினரால் வேட்டையாடப்பட்டு, சீரழிக்கப்பட்டு அந்த கொடூரத்தை மறைக்க மண்ணுக்குள் கொன்று புதைக்கப்பட்டனர்.
இந்த கொடுமைகள் ஒரு இன அழிப்பின் கருப்பொருளாக விளங்கினாலும் அவர்களுக்கு உரிய நீதி இன்றுவரை வழங்கப்படாமலே மறுக்கப்பட்டு மற்றும் மறைக்கப்பட்டு வருகின்றது.
செம்மணி வழக்கு காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் பெண்களின் கண்ணீர் சாட்சியங்களின் பெரும் தொகுப்பாகும்.
1996 முதல் 1998 வரை இடம்பெற்ற இந்த கொடூரங்களில் இராணுவத்தின் வெட்கி தலை குனியும் செயலும் அரசியல் அமைப்பின் கூட்டு மறைப்பும் இணைந்து இன்னும் நீதி கிடைக்காத தன்மையுடன் தொடர்கின்றது.
குறித்த கொடுமைகளை நிகழ்த்தியவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய அரசே, காலம் காலமாய் அதே இராணுவத்தினரைக் காப்பாற்றும் கடமையை ஏற்று வருகின்றது.
கண்காணிப்பு சாவடியில் நிறுத்தி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொன்று புதைக்கும் அந்த இராணுவத்திற்கு எதிராக சாட்சிகள் பேசினாலும், சட்டம் முடங்கி மௌனமாய் தொடர்கின்றது.
அதிகாரிகள் கைது செய்யப்பட்டாலும் சிலர் தண்டனைக் கோபுரங்களின் பின்னால் ஒளிந்திருக்க சிலர் அரசியல் களத்திலும் பாதுகாப்புப் பிரிவுகளிலும் இன்னும் உயர்ந்த பதவிகளில் அமர்ந்துள்ளனர்.
இராணுவம் செய்த கொடூரங்களைப் பற்றி பல ஆயிரக்கணக்கான உறவுகள் இன்னும் சாட்சிகளை தங்களது கண்ணீரோடு சுமந்து கொண்டிருக்கின்றனர்.
இருப்பினும், அதிகார அமைப்பு இன்று வரை அவற்றை வெளிக்கொணர மறுப்பதுடன் மனித உரிமை அமைப்புகள் எத்தனை தடவை சத்தம் எழுப்பினாலும், நீதிக்கான அந்த கதவு திறக்க மறுக்கப்படுகின்றது.
செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட பெண்களின் செருப்பு.!
செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட பெண்களின் செருப்பு.!
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வின்போது, நீல நிற ‘யுனிசெவ்’ புத்தகப் பையோடு அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிக்குக் கீழே பாதணி ஒன்றும் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் ஐந்தாம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது.
செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 33 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்தன. அவற்றை முழுமையாக அகழ்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளே நேற்று மேற்கொள்ளப்பட்டன.
முன்னர் அடையாளம் காணப்பட்டிருந்த இரண்டு சிறுவர்களின் என்புத் தொகுதிகள் நேற்று புதைகுழியில் இருந்து அகழ்ந்தெடுத்து ஆய்வுக்காகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் அகழ்வின்போது ஆங்கில எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நீல நிற ‘யுனிசெவ்’ புத்தகப் பையோடு நேற்று முன்தினம் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிக்குக் கீழே பாதணி (சாண்டில்ஸ்) ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த என்புத் தொகுதியைச் சூழ ஆடை மற்றும் நீல நிற ‘யுனிசெவ்’ புத்தகப் பை, கண்ணாடி வளையல் என்பன முன்னைய அகழ்வின்போது அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதுவரை மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளுடன் ஆடைகளோ, வேறு வகையான பொருட்களோ மீட்கப்படாத நிலையில் குறித்த என்புத் தொகுதிக்கு அருகில் மாத்திரமே வேறு வகையான பொருட்கள் கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில், துறைசார் நிபுணரும் பேராசிரியருமான சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி ஞா.ரனித்தா, சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினரும் அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job