யாழில் 48 வயதான முன்னாள் காதலிக்கு கலியாணம்! கடுப்பில் அவளது 100 மேற்பட்ட அந்தரங்க வீடியோக்களை பகிர முற்பட்ட 30 வயது காதலன் கைது!!
யாழ்ப்பாணத்தில் 48 வயது முன்னாள் காதலியின் திருமண மோதிரத்தை பறித்ததுடன், இருவரும் உல்லாசமாக இருந்த அந்தரங்க புகைப்படங்களை வெளியிடவுள்ளதாக மிரட்டிய 30 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் மானிப்பாய் பொலிஸ் பிரிவில் இந்த சம்பவம் நடந்தது.
வடமராட்சி, பருத்தித்துறையை சேர்ந்த இளைஞன் மானிப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்ட பின்னர், நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைதான இளைஞனும், பெண்ணும் சில காலமாக காதல் வசப்பட்டு இருந்துள்ளனர். அப்போது இருவரும் பல முறை உல்லாசமாக இருந்துள்ளனர். இதை இளைஞன் தனது கையடக்க தொலைபேசியில் புகைப்படம், வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளார்.
அண்மையில் அந்த பெண்ணுக்கு வேறொரு ஆணுடன் பதிவுத்திருமணம் நடந்தது.
48 வயது காதலி தன்னை கழற்றி விட்டதால் மனமுடைந்த காதலன், தன்னை திருமணம் முடிக்குமாறு அந்த பெண்ணை வற்புறுத்தி வந்தார்.
கடந்த வாரம், மானிப்பாய் பொலிஸ பிரிவிற்குட்பட்ட பகுதியில் அந்தப் பெண் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது, அவரை வழிமறித்த இளைஞன், அந்த பெண் அணிந்திருந்த பதிவுத்திருமண மோதிரத்தை பறித்தெடுத்துடன், பதிவுத்திருமணம் செய்தவரை பிரிந்து தன்னுடன் வராவிட்டால், இருவரும் உல்லாசமாக இருந்த போது எடுத்த புகைப்படம், வீடியோக்களை வெளியிடப் போவதாக மிரட்டல் விடுத்தார்.
இது தொடர்பில் அந்தப் பெண் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார். மானிப்பாய் பொலிசார் அந்த இளைஞனை கைது செய்து மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.
இளைஞனும், அந்த பெண்ணும் உல்லாசமாக இருந்த போது எடுத்த வீடியோ, புகைப்படங்கள் சுமார் நூறு வரையில் இளைஞனின் கையடக்க தொலைபேசியில் மீட்கப்பட்டிருந்தது.
இளைஞன் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment