சுவிஸ்லாந்திலிருந்து யாழ் வந்து கடந்த 7ம் திகதி திருமணம் முடித்த 32 வயதானவர் மனைவியை விவாகரத்துச் செய்யும் முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரியவருகின்றது. 26 வயதான சாவகச்சேரிப் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு ஏற்கனவே காதலன் இருந்துள்ளதாக திருமணத்தின் பின்னர் மாப்பிளைக்கு யாரோ AI மூலம் சித்தரித்து பெறப்பட்ட புகைப்படங்களுடன் கூடிய தகவலை அவரது வட்சப் எண்ணுக்கு அனுப்பியுள்ளார்கள். அதனால் மனைவியுடன் சந்தேகப்பட்டு மனைவியை தாக்கியதுடன் மனைவிக்கு அடிவயிற்றுபு் பகுதியில் சத்திரசிகிச்சை செய்ததற்கான தளம்பு உள்ளதாகவும் அத்துடன் கற்பும் பறிபோயுள்ளதாகவும், அது தொடர்பாக தான் திருமணத்தின் அன்று இரவு அறிந்து சந்தேகப்பட்டு மனைவியைக் கேட்டதாகவும், அதற்கு வயிற்றுக் குத்து காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை செய்த போது உடனடியாக சத்திரசிகிச்சை மேற்கொண்டதாக மனைவி கூறி சமாளித்தாகவும் தெரிவித்து சண்டையில் இறங்கியுள்ளார். இதனையடுத்து மனைவியின் பெற்றோர் மற்றும் உறவுகள் 2017ம் ஆண்டு யாழ் போதனா வைத்தியசாலையில் “அப்பண்டிஸ்” என்ற நோய்த் தாக்கத்திற்காக அறுவைச்சிகிச்சை செய்த ஆவணங்களை மாப்பிள்ளைக்கு காட்டி நிரூபித்தும், அதே வேளை அந்தப் புகைப்படங்கள் போலியானது என கூறி அதையும் நிரூபித்தும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாக மணமகன் உடனடியாக மனைவியை விட்டுப் பிரிந்து கொழும்பு சென்றுள்ளதாகவும் தற்போது விவாகரத்துக்கு ஆயத்தப்படுத்தி வருவதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
குறி்தத முட்டாள் மாப்பிளையின் பெயர், விபரங்கள் மற்றும் புகைப்படங்கள், அவனின் பெற்றோர் மற்றும் சகோதரிகளின் புகைப்படங்கள் போன்றவை எமக்கு மாப்பிளையி்ன் உறவினர் ஒருவரால் அனுப்பப்பட்டுள்ளது. பெண்ணின் மருத்துவ சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை மாப்பிளை வைத்தியநிபுணர் ஒருவரிடம் கேட்டு ஆலோசனை பெறாது முட்டாள் தனமாக விவாகரத்துக்கு விண்ணப்பித்தால் அவரின் சகல விபரங்களையும் நாம் வெளியிடுவோம்.
0 comments:
Post a Comment