கிளிநொச்சி கணித ஆசிரியர் துபாரகன் புளியங்குளத்தில் பலி!! நடந்தது என்ன?
புளியங்குளம் பகுதியில் இன்று அதிகாலை (27) இடம்பெற்ற விபத்தில், இளம் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சியைச் சேர்ந்த 24 வயதுடைய ஜெயசீலன் துபாகரன் எனும் கணிதபாட ஆசிரியரே உயிரிழந்தவர் ஆவார்.
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
இன்று அதிகாலை 12.15 மணியளவில், உந்துருளியில் பயணித்த போது அவரது உந்துருளி கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த ஆசிரியர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment