யாழில் பனையில் 25 அடி உயரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அசோகபதியின் சடலம் மீட்பு!
பனைமரத்தின் 25 அடி உயரத்தில் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் 7 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவத்தில் கொற்றாவத்தை பொலிகண்டி வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த 7 பிள்ளைகளின் தந்தையான கந்தசாமி அசோகபதி (வயது 54) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பனை சீவல் தொழிலாழியான இவர் நேற்று சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் பனை மரத்தில் சுமார் 25 அடி உயரத்தில் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக மரண விசாரணை அதிகாரி வேலுப்பிள்ளை பாஸ்கரன் அவர்கள் சடலத்தை பார்வையிட்டு பிரேதப் பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
0 comments:
Post a Comment