சிறிதர் தியேட்டருக்குள் டக்ளசுடன் யோகேஸ்வரியும் கௌரியும் ஜல்சா!! உறுப்பினர்கள் நடுத்தெருவில்!! 6 மாதம் சம்பளம் இல்லையாம்!!
டக்ளஸ் தேவானந்தாவுடன் மிக நெருங்கிச் செயற்பட்ட பல மூத்த போராளிகள் தற்போது செத்த மாட்டிலிருந்து உண்ணி கழருவது போல் கழன்று சென்றுவிட்டார்கள். பருத்திதுறை சிறிரங்கன் மற்றும் கோப்பாய் ஐங்கரன் போன்றவர்கள் உட்பட பலர் தற்போது கட்சியை விட்டு விலகிவிட்டதாகத் தெரியவருகின்றது.
டக்ளசுடன் தற்போது இருபதுக்கும் உட்பட்டவர்களே அடியாட்களாக ஒட்டிக் கொண்டு திரிகின்றார்களாம். அவர்களுக்கும் கடந்த நாடாளுமன்றத் தேர்தல்களின் பின்னர் சம்பளம் வழக்கப்படவில்லை என அவர்கள் பலருடனும் கதைக்கும் போதும் கவலை தெரிவிக்கின்றார்களாம். ஆனாலும் டக்ளஸ் அமைச்சராக இருந்தபோது அவரது தனிப்பட்ட செயலாளராக இருந்த கௌரியும் அவருடன் நெருக்கமாக செயற்பட்ட முன்னாள் மாநகரசபை மேயர் யோகேஸ்வரியும் தற்போதும் சிறிதர் தியேட்டருக்குள் ஆட்சி செலுத்தி வருவதாக உறுப்பினர்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.
தமக்கு 50 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. இனிமேல் நாங்கள் எங்கு வேலைக்குப் போவது? எங்களை யார் வேலைக்கு சேர்ப்பார்கள்? எங்கள் குடும்பத்தை யார் இனிமேல் காப்பாற்றுவது என டக்ளசின் உறுப்பினர்கள் மிகுந்த கவலையுடன் இருக்கின்றார்களாம். தங்களையும் தன்னை விட்டு செல்லுமாறு கூறாமல் கூறும் செயற்பாடாக சம்பளம் தராமல் டக்ளஸ் உள்ளாரா? எனவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றார்கள்.
டக்ளஸ் குடிப்பழக்கம் அற்றவர், பொம்பிளைச் சேட்டை இல்லாதவர் என பலரும் தெரிவித்திருந்தாலும் யோகேஸ்வரி மற்றம் கௌரியின் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது அவரைச் சந்தேகப்படவேண்டி இருப்பதாகவும் அவருடன் நெருக்கமான பலர் தெரிவிக்கின்றார்கள்.
1996ம் ஆண்டு காலப்பகுதியில் டக்ளஸ் கலந்து கொண்ட பார்ட்டி ஒன்றில் சாராயத்திற்குள் சயனைட் கலந்து டக்ளசைக் கொல்ல முற்பட்ட போது குடிப்பழக்கம் இல்லாத காரணத்தால் டக்ளஸ் தப்பியதாக அந்த நேரத்தில் இலங்கை வானொலி செய்தி வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
டக்ளசின் தம்பியார் டக்ளசிற்கு நேர்மாறானவர் எனவும் காசு மற்றும் பொம்பிளை விடயத்தில் அஜால் குஜால் செயற்பாடுகள் கொண்டவர் எனவும் கட்சி வட்டாரங்களின் மூலம் அறிய வருகின்றது.
1992ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து இராணுவத்தின் துணைப்படை சம்பளம் பெற்று வந்த டக்ளசின் அடியாட்களின் துணைப்படைச் சம்பளம் யுத்தம் முடிவடைந்த பின்னர் நல்லாட்சி காலத்தில் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment