நாமலை கைது செய்ய பிடியாணை உத்தரவு..!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கொன்றில் அவர் நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியமையினால், அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இன்றைய தினம் (28) இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.அவர் தற்போது ஒரு தனியார் நிகழ்விற்காக மாலத்தீவில் உள்ளார் அவர் நாளை நாடு திரும்ப உள்ள நிலையில் விமான நிலையத்தில் வைத்து கைதாகலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை,
ஜனாதிபதியும் நாமல் ராஜபக்சவும் ஒரே விமானத்தில் மாலைதீவுக்கு பயணம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநயாக்கவும்,ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபகசவும், ஒரே விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.
ஜனாதிபதி திசாநாயக்க, மாலைதீவு ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் அதிகார விஜயமொன்றை மம்றகொண்டு மாலே நகருக்குச் சென்றுள்ளார். அதே நேரத்தில், நாமல் ராஜபக்ஷா, அங்கு நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்க மாலைதீவிற்கு சென்றுள்ளார். இவர்கள் இருவரும் கொழும்பு முதல் மாலே வரை பயணித்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL 101 இன் வணிக (Business Class) பிரிவில் இருந்தனர். இந்த தற்செயலான சந்திப்பு அரசியல் ஆர்வலர்களிடையே ஒரு ஆர்வத்தைக் கிளப்பியுள்ளது.
0 comments:
Post a Comment