பொத்துவில் கடற்கரையில் நிர்வா ணமாக சென்ற தாய்லாந்து யுவதி!! வீடியோ
மேலாடையின்றி வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் பொத்துவில் பொலிஸ் நிலைய மகளிர் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் பீச் ஹட் ஹோட்டலில் இருந்து ஓஷன் ஸ்கை ஹோட்டலின் நுழைவாயில் வரை நிர்வா ணமாக நடந்து சென்றுள்ளார். இந்தப் பெண் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் என பொத்துவில் பொலிஸ் நிலைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொத்துவில் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பெண் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று சென்று அந்தப் பெண்ணைக் கைது செய்து பொத்துவில் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
வெளிநாட்டுப் பெண் தனது காதலனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இவ்வாறு செயற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட வெளிநாட்டுப் பெண் பொத்துவில் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வாரங்கள் மற்றும் ஒருமாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment