யாழில் கள்ளக்காதல் சந்தேகம்!! நிறை வெறியில் மனைவியை உயிருடன் எரித்துக் கொன்ற கணவன் கைது!!
யாழ்ப்பாணம், வடமராட்சியில் கணவனால் தீமூட்டி எரிக்கப்பட்ட குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.வடமராட்சி துன்னாலை பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
கடந்த 17ஆம் திகதி 38 வயதான குடும்பப் பெண்ணொருவர் தீயில் எரிந்த நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவர் ஆபத்தான நிலையில் இருந்ததால் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அவர் பொலிசாரிடம் வழங்கிய வாக்குமூலத்தில், தனது கணவர் தன்னை எரித்ததாக தெரிவித்திருந்தார்.கசிப்பு குடித்து விட்டு வந்த கணவன், வேறொரு ஆணுடன் அந்த பெண்ணுக்கு தொடர்பிருப்பதாக குறிப்பிட்டு, தகராறில் ஈடுபட்ட பின்னர், அந்த பெண்ணை தீமூட்டி எரித்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்னி இன்று உயிரிழந்தார்.அவரது கணவர் நெல்லியடி பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
0 comments:
Post a Comment