பொதுவாகவே உதவி கேட்பவர்கள் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் வரும் பதிவுகளை நாம் பிரசுரிப்பதில்லை. மிகவும் மோசடியான செயற்பாடுகள் அவற்றில் நிறைந்துள்ள காரணத்தால் நாம் அவற்றை பிரசுரிப்பதை தவிர்த்து வருகின்றோம். ஆனால் jaffnahero என்ற சமூகவலைத்தளத்தில் வந்த இந்தப்பதிவு எம்மை கொஞ்சம் சிந்திக்க வைத்துள்ளது. நீங்களும் வாசித்து, பாா்த்து அறிந்து கொள்ளுங்கள்.
1996ம் ஆண்டு செம்மணியில் வைத்து கணவனின் முன் படையினரால் கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டு பின்னர் கணவனையும் மனைவியையும் ஒரே நேரத்தில் மண்வெட்டியால் அடித்துக் கொன்று ஒரே புதை குழியில் புதைக்கப்பட்ட 2 குழந்தைகளின் சொந்தக்காரர்களான சுரேஸ்வரன், மனைவி சுமதி ஆகியோரின் பிள்ளைகளின் தற்போதைய நிலையை கொல்லப்பட்ட சுமதி சொர்க்கத்தில் எழுதும் கடிதம் என்ற தலைப்பில் வெளியாகிய பதிவினை அப்படியே நாம் தந்துள்ளோம்….
செம்மணி புதைகுழிகளை தோண்டி எடுத்து எலும்புக்குவியலுக்குள் நின்று உலகத்தின் கவனத்தை ஈர்ப்பவர்களே!! ஜனநாயகத்தின் 4 வது துாணாகிய ஊடகவியலாளர்களே!! சமூகவலைத்தளப் பதிவாளர்களே!! எனது குழந்தைகளையும் உலகின் கவனத்தின் முன் கொண்டு வாருங்கள்…கும்பிட்டுக் கேட்கின்றோம். அவர்களுக்கு ஏதாவது வழி வகை செய்யுங்கள்.
நான் அழகானவள் என்ற காரணத்தால் கொல்லப்பட்டேனா? எனது கூந்தல் நீளமானது என எனது கணவன் அடிக்கடி வர்ணிப்பாரே! அதனால் கொல்லப்பட்டேனா? இலங்கையைப் பெண் ஒருவர் அரசாண்டுகொண்டிருந்த காலத்தில் பயங்கரவாதத்திலிருந்து எம்மை மீட்கவே போர் செய்கின்றோம் என கூறிக் கூறி மீட்க வந்த படையினரே அரியாலையில் கணவன் சுரேஸ்வரனுடன் சந்தோசமாக வாழ்ந்து வந்த என்னை, என் பெண்மையை என் கணவன் முன்னாடியே குதுகலித்துச் சூறையாடி என்னையும் எனது கணவனையும் கொன்று புதைகுழியில் தள்ளிவிட்டார்கள். 23 வயதில் எனது குடும்பக் கனவை சிதைத்து, எனது முத்தான இரு பிள்ளைகளையும் அநாதைகளாக்கி எமது வாழ்க்கையையே சிதைத்துவிட்டார்கள். பறவாயில்லை… நானும் கணவனும் சொர்க்கத்தில் இருக்கின்றோம். ஆனால் எனது 2 பிள்ளைகளும் என்ன நிலையில் உள்ளார்கள் தெரியுமா?
மூத்த மகள் 1991ல் பிறந்த போது உன்னைப் போல் வெள்ளையாக இல்லையென்றாலும் என்னைப் போல் முத்தாய் ஜொலிக்கின்றாள் என கணவன்அடிக்கடி கூறுவான். தற்போது அவனும் மகளின் துன்பத்தைப் பார்த்து சொர்க்கத்தில் அழுகின்றான்.
கணவனும் நானும் அரச படைகளால் கொல்லப்பட்டதற்காக எந்தவித நட்ட ஈடும் என் பிள்ளைகளுக்கு கொடுக்கவில்லை. எனது மகனைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அவன் ஆண்பிள்ளை. எப்படியோ பிழைத்துக் கொள்வான். ஆனால் எனது மகள்? எனது உறவுகளும் பணக்காரர்களாக இல்லை. நினைத்துப் பாருங்கள் நாங்கள் புதைக்கப்பட்ட பின்பு இரு பாலகர்களும் என்னவெல்லாம் துன்பப்பட்டிருப்பார்கள். எனது மகள் எத்தனை சிக்கல்களை எதிர்நோக்கியிருப்பாள். எவ்வாளவு சங்கடங்களை சகித்துக் கொண்டிருந்திருப்பாள். தற்போது திருமணமாகியும் அவள் துன்பத்திலேயே இருக்கிறாள் என நினைக்கும் போது எப்படி என்னால் நிம்மதியாக இருக்க முடியும்.
கணவன் பிரிந்த பின்னரும் தற்போதும் கூலி வேலைக்குப் போய் யாரையும் எதிர்பார்க்கது வைராக்கியத்துடன் தனது இரு குழந்தைகளையும் வளர்த்து வரும் அவளைப் பார்க்க எனக்கு நிம்மதியாக இருக்க முடியவில்லை. அவளது கைகளைப் பாருங்கள். அவளது நகங்கள் கிழியக் கிழிய வெங்காயத் தோட்டத்திற்குள் புல் பிடுங்கி உழைத்து வரும் பணத்திலேயே அவள் தன் வாழ்க்கையை ஓட்டுகின்றாள்.
சொந்தமாக காணி உண்டு. வீடு இல்லை. நகைகள் இல்லை. சிமாட் போன் இல்லை. ரீவி இல்லை. மோட்டார்சைக்களில் இல்லை. . ஏழ்மையே உள்ளது. எந்தவித சொகுசும் இல்லாத ஏழ்மையாக வாழ்கின்ற எனது மகளை கவனிக்கமாட்டீர்களா? நாங்கள் கொல்லப்பட்ட பின் 35 வருடங்களாக துன்பத்தில் துவண்டு கொண்டிருக்கும் எனது பிள்ளைகளை உங்கள் பிள்ளைகளாக நினைத்து அவர்களை நிமிர்த்தி விடுவீர்களா?
புலம்பெயர் தமிழர்களே… எதிரிகள் அடிக்க அடிக்க மீண்டும் மீண்டும் எமது இனம் எழுந்து நின்றது உங்களால்தான் என்பது எமக்குத் தெரியும். ஏழ்மையில் விழுந்துகிடக்கும் எனது மகளை எழுந்து நிற்கச் செய்வீர்களா? உங்களில் ஒருவர் நினைத்தால் கூட என் மகளை எழுந்து நிற்கச் செய்யலாம். யாழ்ப்பாணத்தில், கோவில்களில் குடியிருக்கும் கடவுள்களுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து குடமுழுக்கு செய்துள்ளீர்கள்… எனது மகளும் ஒரு வீட்டில் குடியிருக்க உங்களால் உதவி புரிய முடியாதா? அவள் சுயமாக உழைத்து வாழ உங்களால் உதவி செய்ய முடியாதா?
எனது மகள் தற்போது கோப்பாய் பிரதேசசெயலர் பிரிவில் அச்செழுப்பகுதியில் வாழ்ந்து வருகின்றாள். எனது மகளின் பெயர் -சுரேஸ்வரன் தஜீவா ( sureshwaran.thageeva) தொலைபேசி இலக்கம் (+94770744148) , வங்கிக் கணக்கிலக்கம் ( இலங்கை வங்கி யாழ்ப்பாணம். 91342873) என்பவற்றை நான் தந்துள்ளேன். ஒரு பெண்ணின் தொலைபேசி இலக்கத்தை கண்டவுடன் அதனை வைத்து கேவலப்படுத்தும் செயற்பாடுகள் எனக்குத் தெரியும். தயவு செய்து அவ்வாறான செயற்பாடுகளை எனது மகளுக்கு செய்யவேண்டாம். தயவு செய்து உதவி செய்யும் மனப்பாங்கு உள்ளவர்கள் மாத்திரம் அவளுடன் தொடர்பு கொள்ளுங்கள். அவளின் தேவைகளை அறிந்து அவளுக்கு உதவுங்கள். உங்களுக்கு நான் கூறுவதில் நம்பிக்கை இல்லாதுவிடின் கோப்பாய் பிரதேசசெயலக அதிகாரிகளிடம் விசாரியுங்கள். எனது மகளின் பிரதேசத்தில் நீண்டகாலம் கடமையாற்றிய கிராமசேவகரான திருமதி.குலலோஜினி கருணஜீவாவிடம் அறிந்து கொள்ளுங்கள். அவரது தொலைபேசி இலக்கத்தையும் தந்துள்ளேன். (+94778512379) அவர் ஊடாகவும் நீங்கள் எனது மகளை அணுகி அவளுக்கு உதவிகள் புரியலாம்.
அன்பான உறவுகளே… 35 வருடங்களாக துன்பத்திலேயே வாழும் எனது மகளையும் 2 பேரக்குழந்தைகளையும் உங்கள் உறவுகளாக நினைத்து உயர்த்திவிடுங்கள்…. எனதும் எனது கணவனினதும் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு கிடைத்துக் கொண்டேயிருக்கும்.
0 comments:
Post a Comment