நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Sunday, July 6, 2025

மட்டக்களப்பில் பரிதாபமாக பலியான மூன்று சிறுவர்கள்: தொடரும் விசாரணை !



மட்டக்களப்பில் பரிதாபமாக பலியான மூன்று சிறுவர்கள்: தொடரும் விசாரணை
மட்டக்களப்பு, வாகரை, பனிச்சங்கேணி வாவிக்கு நீராடச்சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வாகரை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று(07) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

மரணமடைந்த மூவரில் ஒரு சிறுவனும் இரண்டு சிறுமிகளும் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை

உயிரிழந்த மூவரும் 10 மற்றும் 11 வயதுடையவர்கள் என காவல்துறை கூறியுள்ளதோடு, மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் வாகரை காவல் நிலைய பொறுப்பதிகாரி ஜி.பி.எச். சில்வா தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.  

0 comments:

Post a Comment