நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Tuesday, July 1, 2025

செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட பெண்களின் செருப்பு.!


செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட பெண்களின் செருப்பு.!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வின்போது, நீல நிற ‘யுனிசெவ்’ புத்தகப் பையோடு அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிக்குக் கீழே பாதணி ஒன்றும் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் ஐந்தாம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது.

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 33 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்தன. அவற்றை முழுமையாக அகழ்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளே நேற்று மேற்கொள்ளப்பட்டன.

முன்னர் அடையாளம் காணப்பட்டிருந்த இரண்டு சிறுவர்களின் என்புத் தொகுதிகள் நேற்று புதைகுழியில் இருந்து அகழ்ந்தெடுத்து ஆய்வுக்காகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் அகழ்வின்போது ஆங்கில எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நீல நிற ‘யுனிசெவ்’ புத்தகப் பையோடு நேற்று முன்தினம் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிக்குக் கீழே பாதணி (சாண்டில்ஸ்) ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த என்புத் தொகுதியைச் சூழ ஆடை மற்றும் நீல நிற ‘யுனிசெவ்’ புத்தகப் பை, கண்ணாடி வளையல் என்பன முன்னைய அகழ்வின்போது அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளுடன் ஆடைகளோ, வேறு வகையான பொருட்களோ மீட்கப்படாத நிலையில் குறித்த என்புத் தொகுதிக்கு அருகில் மாத்திரமே வேறு வகையான பொருட்கள் கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில், துறைசார் நிபுணரும் பேராசிரியருமான சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி ஞா.ரனித்தா, சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினரும் அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment