This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

50% OFFICERS 👇👇🔴👇👇

50% OFFICERS 👇👇🔴👇👇
I found this great deal on Daraz! Check it out! Product Name: Classic Turkish Lucky Evil Eye Bracelets for Men Women Blue Evil Eye Palm Butterfly Pendant Beads Bangles Handmade Charm Jewelry Product Price: Rs.640 Discount Price: Rs.320

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, September 30, 2024

யாழ் சிறைக்குள் வைத்தியர் அர்ச்சுனா மீது கடும் தாக்குதல்? சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா காரணமா?


யாழ் சிறைக்குள் வைத்தியர் அர்ச்சுனா மீது கடும் தாக்குதல்? சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா காரணமா?

யாழ் சிறைச்சாலைக்குள் வைத்து சாவகச்சேரி முன்னாள் வைத்திய அதிகாரி அர்ச்சுனா மீது கடும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளது.இந் நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளால் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அர்ச்சுனா சற்று முன் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் குறித்த பதிவுகளிலிருந்து தெரியவருகின்றது.

குறித்த தாக்குதலுக்கு யாழ் போதனாவைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரியின் திட்டமிட்ட செயற்பாடே காரணம் என அர்ச்சுனா சார்பான சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன. அர்ச்சுனா தாக்குதல் தொடர்பாக தற்போது சட்டவைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா அர்ச்சுனாவை தனது வைத்தியசாலைக்குள் வைத்து அச்சுறுத்துவதற்கு ஆயத்தமாகி வருவதாகவும் தனக்கு முன்னால் அர்ச்சுனாவை முட்டுக்காலில்இருத்தி வைக்கப் போறேன் என தனது வைத்தியத்துறை நண்பர்களுக்கு பிரணவன் கூறியுள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இந் நிலையில் இத் தகவல்களை உறுதிப்படுத்தும் முகமாக விசாரணை செய்த போது அர்ச்சுனா சற்று முன் யாழ் போதனாவைத்தியசாலைக்கு சிறை அதிகாரிகளுன் வந்துள்ளாதாக மட்டுமே எமது செய்தியாளர்களால் உறுதிப்படுத்த முடிந்தது.  அத்துடன் சிறைச்சாலை உத்தியோத்தர்களின் தகவல்களின் படி அர்ச்சுனா தொற்றா நோய்களுக்கான கிளினிக் சிகிச்சைக்காக பொது வைத்திய நிபுணரிடம் சிகிச்சை பெற வந்துள்ளதாக எமது செய்தியாளர் மூலம் தெரியவந்துள்ளது.

அநுரா தொடர்பாக வந்த தகவல்கள் அத்தனையும் லொஜக், மொஜக்கா? என்ன அநுரா இதெல்லாம்??


அதிகார மாற்றத்திற்கு பின்னர் முகநூலை இலக்கு வைத்து பரப்பப்படட பொய்கள்

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட சகல மதுபான உரிமை பத்திரங்களும் இரத்து செய்யப்பட்டதாக சொல்லப்படும் தகவல்கள் தவறானது

இன்றுவரை எந்த மதுபான உரிமை பத்திரங்களும் இரத்து செய்யப்படவில்லை

குறைந்தது 30 அரசியல் பிரமுகர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்கும் பட்டியல் சர்வதேச விமான நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்கிற தகவல்கள் தவறானது

ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான மீள் விசாரணை ஆரம்பிக்கப்பட்ட தகவல்கள் தவறானது

இன்று வரை அரச புலனாய்வு கட்டமைப்புகளில் கூட மாற்றம் செய்யப்படவில்லை

ஊழல் மோசடிகள் தொடர்பான பைல்கள் தூசு தட்டப்படுகின்றது மற்றும் வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் திருமதி சார்ள்ஸ் உட்பட பலர் கைது செய்யப்படுவார்கள் என்கிற தகவல் போலியானது

திருமதி சார்ள்ஸ் நாட்டை விட்டு வெளியேற முயற்சித்த போதுவிமான நிலையத்தில் திருப்பி அனுப்பப்பட்டார் என்கிற தகவல் உண்மைக்கு புறம்பானது

சபாநாயர் மற்றும் எதிர்கட்சி தலைவர் தவிர்ந்த பாராளமன்ற உறுப்பினர்களுக்கும் சகல பாதுகாப்பு விலக்க உத்தரவு என்கிற தகவல்கள் தவறானது.

திரு மஹிந்த ராஜபக்சே அவர்களுக்கான STF பாதுகாப்பு மீள அழைக்கப்பட்ட தகவல்களில் உண்மையில்லை

வெளிநாட்டு சேவையுள்ள அரசியல்வாதிகளின் உறவினர்கள் நாட்டுக்கு மீள அழைக்கப்பட்ட தகவல்களின் தொகுப்பை தகவல் திணைக்களம் கூட உறுதிப்படுத்த வில்லை

ஜனாதிபதி செயலகத்தில் முன்னாள் பணியாளர்கள் ஒப்படைத்த வாகனங்கள் ஏலமிடப்பட்டு வருவாய் அரச நிதியில் சேர்க்க உத்தரவு என்கிற தகவல் போலியானது

ஆட்சி மாற்றத்திற்கு பின் சகல உயர் அரச நியமனங்களும் பொறிமுறைகள் ஊடக தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று பரவும் தகவல்களில் உண்மையில்லை

Political gimmicks and stunts என்பன அரசியலின் பகுதி என்றாலும் அதை உண்மையென நம்பி உணர்ச்சி வசப்படுபவர்கள் குறைந்தது உண்மைகளை தெரிந்து கொண்டால் ஏமாற்றங்களை தவிர்க்கலாம்….

நன்றி

இனமொன்றின் குரல்

காமுக சுவாமி பிரேமானந்தாவின் பக்தையான விக்கியை சொக்க வைத்து ”பார் லைசன்ஸ்” வாங்கிய தனுசாவின் பின்னணி இதோ!!


காமுக சுவாமி பிரேமானந்தாவின் பக்தையான விக்கியை சொக்க வைத்து ”பார் லைசன்ஸ்” வாங்கிய தனுசாவின் பின்னணி இதோ!!

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்.

கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் “ஏ – 9 வைன் ஸ்ரோர்” எனும் மதுபானச்சாலை உரிமம் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் ஊடாகப் பெற்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சி.வி.விக்னேஸ்வரன் 2024.02.19 அன்று எழுத்து மூலம் வழங்கிய கடிதத்தின் அடிப்படையிலேயே இந்த மதுபான சாலைக்கான அனுமதி அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.

தனுசா நடராசா என்னும் பெயரில் இந்த மதுபானசாலைக்காக விக்னேஸ்வரன் பரிந்துரைத்துள்ளார்.

இத் தனுசா சுன்னாகத்தை பூர்வீகமாக கொண்டவர்.இத்தனுசாவின் தந்தை நடராசா பூபாலகிருஸ்ணா ஆச்சிரமம் என்றும் பெயரில் சுன்னாகத்தில் பிறேமானந்தாவின் ஆச்சிரமத்தை நடத்திவந்தவர். அந்தவகையில் பிரேமானந்தாவின் பக்தனான சி வி விக்கினேஸ்வரனுக்கும் தனுசாவின் தந்தைக்கும் இடையே நல்ல நட்புறவு நிலவி வந்தது.

தனுசா முதலில் 1997 – 2000 காலப்பகுதியில் சுன்னாகம் நகரத்திற்கு சிவில் நிர்வாகத்திற்கு பொறுப்பாக இராணுவ அதிகாரியான லெப்டினன்ட் கேரத் என்பவரை முதல் திருமணம் முடித்தவர். இதன் பயனாக இவருக்கு பெண்பிள்ளை உண்டு. பின்னார் இராணுவ அதிகாரியை விவாகரத்து செய்துவிட்டு பெருபான்மை இனத்தை சேர்ந்தவரை மறுமணம் முடித்தவர். பின்னர் அவரையும் கைவிட்டு விட்டு தற்பொழுது சமத்துவ கட்சியின் தலைவரும் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினருமாகிய முருகேசு சந்திரகுமாருடன் வாழ்ந்து வருகின்றார்.

தனுசாவிற்கு சொந்தாமான மதுபான சாலைகள் பின்வருமாறு

1>சுன்னாகம் சந்தியில் உள்ள  மதுபானசாலை

2>இணுவில் தியேட்டர் வீதியில் உள்ள  மதுபான சாலை

3>கனகபுரம் தனு மதுபான சாலை

“அந்த மதுபானசாலை அனுமதியை தாய் தந்தை அற்ற ஒரு பெண்மணிக்கே பெற்றுக்கொடுத்தேனே அன்றி நான் எடுக்கவில்லை.” விக்கினேஸ்வரன் கூறுவது நகைப்புக்குரிய விடயம்

ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் 172 மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டு அவை திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இடியுடன் கூடிய மழை : மக்களுக்கு வெளியான எச்சரிக்கை | Today Weather Alert Report Heavy Rain Warning


இடியுடன் கூடிய மழை : மக்களுக்கு வெளியான எச்சரிக்கை!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (01) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில்சில இடங்களில் 100 மில்லி மீற்றர் அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வெளியான எச்சரிக்கை

தென் மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் விலைகள் குறைந்தன


எரிபொருள் விலைகள் குறைந்தன

Petrol 92 - 21 ரூபாயினால் குறைக்கப்பட்டு புதிய விலை 311 ரூபாய்
Auto Diesel - 24 ரூபாயினால் குறைக்கப்பட்டு புதிய விலை 283 ரூபாய் 
Super Diesel - 33 ரூபாயினால் குறைக்கப்பட்டு புதிய விலை 319 ரூபாய்
மண்ணெய் - 19 ரூபாயினால் குறைக்கப்பட்டு புதிய விலை 183 ரூபாய் 

Petrol 95 - மாற்றமில்லை !

இன்று நள்ளிரவு முதல் வரும் இந்த எரிபொருள் விலைச்சீராக்கம் 

#SriLanka #fuelprices

Sunday, September 29, 2024

முன்னாள் யாழ் எம்.பி விக்னேஸ்வரனின் திருவிளையாடல்!! இளம் பெண் தனுசாவுக்கு சாராய பார் பெமிட் வழங்கியது ஏன்?!!


முன்னாள் யாழ் எம்.பி விக்னேஸ்வரனின் திருவிளையாடல்!! இளம் பெண் தனுசாவுக்கு சாராய பார் பெமிட் வழங்கியது ஏன்?!!

கிளிநொச்சி நகரப்பகுதியில் இயங்கும் சாராயக்கடை ஒன்றின் அனுமதிப் பத்திரம் தமிழ்மக்கள் கூட்டணியின் தலைவரான முன்னாள் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களால் நடராசா தனுசா என்ற யுவதிக்கு வழங்கியுள்ளமை அம்பலமாகியுள்ளது. அவருக்குரிய கோட்டாவில் குறித்த சாராய அனுமதிப்பத்திம் யுவதிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எதற்காக சாராய அனுமதிப்பத்திரத்தை குறித்த யுவதிக்கு வழங்கினீர்கள் என்று கேட்ட போது குறித்த யுவதிக்கு அம்மா, அப்பா இல்லை என்ற காரணத்தால் சாராய அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொடுத்தேன் என விக்னேஸ்வன் கூறியுள்ளார். 2024.02.09 ம் திகதி ரணில் விக்ரமசிங்காவுக்கு கடிதம் எழுதி தனக்கான சாராய பார் கோட்டாவிற்கான உரிமத்தை குறித்த யுவதிக்கு கொடுக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதே போல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெருமளவானவர்கள் தங்களது பினாமிகளுக்கு இவ்வாறான சாராய பெமிட்களை பெற்றுக் கொடுத்துள்ளது அம்பலமாகியுள்ளது. சி.வி.விக்னேஸ்வரன் பாராளுமன்றத் தேர்தலிலில் இருந்து ஒதுங்குகின்றேன் என்று கூறியது இந்த திருவிளையாடல்களை நடாத்திமுடித்திருப்பதே காரணமாகும். சாராய பார் அனுமதி பெற்று பினாமிகள் பெயரில் நடாத்தும் ஏனைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இனிவரும் தேர்தலில் போட்டியிடாது ஒதுங்குவார்களா?? அல்லது பொதுமக்களால் ஒதுக்கப்படுவார்களா??

அநுரவினால் கவரப்பட்டுவரும் தமிழ் இளைஞர்கள்! ஹக்கிமிடம் முழங்காலிட்டுக் கெஞ்சிய ‘சுமோ’


அநுரவினால் கவரப்பட்டுவரும் தமிழ் இளைஞர்கள்! ஹக்கிமிடம் முழங்காலிட்டுக் கெஞ்சிய ‘சுமோ’
அநுரவின் வெற்றி, இனவாதத்தைக் கக்காத அவரது தாழ்மையான பேச்சுக்கள், வெற்றியின் பின் அவரது ஆரம்ப செயற்பாடுகள் போன்றனவற்றினால் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் இளைஞர்கள் பெருமளவில் கவரப்பட்டு வருவதை சமூகவலைத்தளங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது.

இதேபோன்ற இளைஞர் தலைமைகள் வடக்கு கிழக்கில் உருவாக வேண்டும் என்கின்றதான கருத்துக்களும் தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக எழுப்பப்பட்டு வருகின்றது.

சாதரண மக்கள் மத்தியிலும் ஜே.வி.பி. பற்றி இருந்து வந்த அச்சம் கொஞ்சம் கொஞ்சமாக நீங்க ஆரம்பித்து வருவதையும் அவர்களது பேச்சுக்களிலும், பதிவுகளிலும் காணக் கூடியதாக இருக்கின்றது.

உடனடியாக ஏதாவது செய்யாவிட்டால் தமது மவுசு குறைந்துவிடும் என்று பயந்து, சில தமிழ் தலைவர்கள் விழுந்தடித்து ஓடித்திரிவதாக தெரியவருகின்றது.

‘சுமோ’ அடித்துப்பித்துக்கொண்டு ரவூப் ஹக்கீமைச் சந்தித்து உதவி கோரியிருக்கின்றார்.

‘this guy is more gangerous..’ என்று கூறியிருக்கின்றார்.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் எல்லாரும் சேர்ந்து போட்டிபோடுவோமா என்றும் கெஞ்சியிருக்கின்றார்.

 ‘கிழக்கு முஸ்லிம்கள் அதனை பெரிதாக விரும்பமாட்டார்களே..’ என்று ஹக்கிம் கொஞ்சம் இழுத்தடிக்க, ‘புலிப் பயங்கரவாதிகள் செய்த முஸ்லிம் விரோத செயல்களுக்குத்தான் நான் பகிரங்மாகக மன்னிப்பு கோரிவிட்டேனே.. ‘ என்றெல்லாம் கூறியிருக்கின்றார்.

கிழக்கின் ‘தமிழ் தேசியநீக்க மல்லியும்’ அதற்கு ரெடி என்றும் சமிஞ்ஞை காண்பித்திருக்கின்றார்.

முஸ்லிம் காங்கிரசின் 'மத்திய குழுவுடன்' பேசிவிட்டு திரும்பி வருகிறேன் என்று கூறியிருக்கின்றார் ஹக்கிம்.

அது சரி தமிழரசுக் கட்சியிலும் 'மத்திய குழு' என்று ஒன்று இருக்கின்றதே, அந்த 'மத்தியகுழுவுடன்' பேசிவிட்டுத்தான் இதுபோன்ற இணைப்பு விவகாரங்கள் பற்றி ஹக்கிமுடன் பேசவேண்டும் என்ற யதார்த்தம் ‘சுமோ’வுக்கு தெரியாதா?

மாவை போன்ற ‘மூன்று வாக்குச் செலுத்திய’ தலைமை இருக்கும் வரைக்கும் தமிழரசுக் கட்சியில் யார் அவரைக் கேள்விகேட்பது?

சுமந்திரன் அணியுடன் ஒற்றுமையை ஏற்படுத்த முடியாதாம்!! சிறீகாந்தா


சுமந்திரன் அணியுடன் ஒற்றுமையை ஏற்படுத்த முடியாதாம்!! சிறீகாந்தா

சுமந்திரன் தலைமையிலான அணியுடன் ஒருபோதும், ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது என தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் என். சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சந்திப்பிலேயே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து பல்வேறு காலகட்டங்களில் வெளியேறியவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என புன்முறுவலோடு சுமந்திரன் அழைப்பு விடுத்திருக்கிறார். அவருக்கு நாங்களும் புன்முறுவலோடு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளோம்.

அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் தமிழ் மக்களின் பிரதிநித்துவத்தை தக்கவைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழரசுக் கட்சியோடு இணைந்து கூட்டாக செயற்பட ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி தயாராக உள்ளது.

ஆனால் யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு ஆகிய தேர்தல் மாவட்டங்களில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதில் கொள்கை ரீதியாகவும், கடந்த கால அனுபவ ரீதியாகவும் பல மனஸ்தாபங்கள் உள்ளன.

எதற்காக இணையுமாறு அழைப்பு விடுக்க படுகிறது ? தமிழ்த் தேசியத்தை சிங்கள தேசியத்துடன் சமரசம் செய்துவைப்பதற்காவா? அல்லது இருக்கின்ற பதவிக் கதிரைகளை பறிபோகவிடாமல் தக்கவைப்பதற்காகவா? அல்லது கடந்தகாலம் போல் ஆட்சியாளர்களுடன் மறைமுக சமரசம் செய்வதற்காக? என்ற கேள்விகளை எழுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

ஒற்றுமை என்பது கொள்கையுடன், குறிக்கோளுடன் இருக்க வேண்டுமானால் நாங்கள் தமிழரசுக் கட்சியில் ஆதிக்கம் செலுத்துக்கின்ற சுமந்திரன் தலைமையிலான அணியுடன் ஒருபோதும் அந்த ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது, என்பதே தமிழ்த் தேசிய கட்சியின் முடிவு ஆகும்.

முதலிலே தமிழரசுக் கட்சிக்குள் ஒற்றுமைப்பட முடியாதவர்கள் ஒற்றுமைக்கான அழைப்பை புன்முறுவலோடு விடுப்பது ஒட்டுமொத்த தமிழர்களையும் ஏமாற்றும் செயலாகும்.

இலங்கை தமிழரசுக் கட்சியோடு இணைந்து வீட்டுச் சின்னத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக போட்டியிடுவதா இல்லையா என்பது குறித்த ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடி ஆராயவுள்ளோம். அதில் தமிழ்த் தேசிய கட்சியின் முடிவை உறுதியாக தெரிவிப்போம் எனத் தெரிவித்தார்.

யாழில் தனது சகோதரியின்காதலன் ஏமாற்றினான்!! 21 வயது லோஜினி தற்கொலை!!


யாழில் தனது சகோதரியின்காதலன் ஏமாற்றினான்!! 21 வயது லோஜினி தற்கொலை!!

யாழில், தனது சகோதரியை அவரது காதலன் விட்டுச் சென்றதால் மனவிரக்தியடைந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து இன்றைய தினம் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.

இதன் போது கோண்டாவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் லோஜினி என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் குறித்த யுவதியின் சகோதரி அவரது காதலனுடன் சென்றுள்ளார்.

பின்னர் நேற்றைய தினம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு வந்து, இருவரும் பிரிந்து செல்வதாக முடிவெடுத்து பிரிந்து சென்றனர்.

இந்நிலையில் பிரிந்து சென்ற சகோதரி நேற்றையதினம் மாத்திரைகளை உட்கொண்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தாயார், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மகளை பார்க்க சென்றவேளை, வீட்டில் இருந்த மகள் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

யாழில் 21 வயது லோஜினி தவறான முடிவால் மரணம்!!


யாழில் 21 வயது லோஜினி தவறான முடிவால் மரணம்!!

யாழ் பொன்னாலைப் பகுதியில் 21 வயதான யுவதி பா.லோஜினி தவறான முடிவெடுத்து மரணமடைந்துள்ளார். இச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த தற்கொலைச் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

சகல மாணவர்களுக்கும் சித்தி: தரம் 05 புலமை பரிசில் பரீட்சை சர்சைக்கு தீர்வு


சகல மாணவர்களுக்கும் சித்தி: தரம் 05 புலமை பரிசில் பரீட்சை சர்சைக்கு தீர்வு
இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு பரீட்சைக்கு முன்னர் கசிந்ததாக இனங்காணப்பட்ட மூன்று வினாக்களுக்கும் தோற்றிய சகல மாணவர்களுக்கும் சித்திகளை வழங்குவதே சிறந்த மாற்றாக முடிவாக எடுக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இந்த வருடம் மீண்டும் நடத்தப்படுமா? இல்லையா?  தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் ஆலோசனையின் பேரில் 07 பேர் கொண்ட குழுவொன்றை நியமித்து தீர்மானிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்த அறிக்கையை ஆய்வு செய்து எடுக்கப்பட வேண்டிய மிகவும் பொருத்தமான நடவடிக்கைகளை பரிந்துரைக்க கல்விக்கு பொறுப்பான பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

பொருத்தமான தெரிவு

அதன்படி, மீண்டும் தேர்வை நடத்துவது, 10 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு மன நிலையில் கடுமையான பாதிப்பையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தும் என்றும், அனைத்து மாணவர்களுக்கும் நீதி வழங்குவது இன்றியமையாதது என்றும் குழு பரிந்துரைத்துள்ளது.

மட்டு’வில் 16 வயது மாணவியை கர்ப்பமாக்கிய பக்கத்துவீட்டுச் சிறுவன் கைது!!


மட்டு’வில் 16 வயது மாணவியை கர்ப்பமாக்கிய பக்கத்துவீட்டுச் சிறுவன் கைது!!

மட்டக்களப்பு – காத்தான்குடி பகுதியில் பாடசாலை மாணவியை இரண்டு மாதம் கர்ப்பிணியாக்கிய பக்கத்து வீட்டைச் சேர்ந்த மாணவனை நேற்று முன்தினம் (27-09-2024) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பகுதியில் வசித்துவரும் 16 வயது சிறுமியின் தாயார் வெளிநாட்டில் வேலை செய்துவரும் நிலையில் அவரின் அம்மம்மாவின் பாதுகாப்பிலிருந்து வந்துள்ளார்.

இதன்படி, மாணவியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் 16 வயது மாணவனின் தந்தை உயிரிழந்துள்ள நிலையில், அவரின் தாயாரும் வெளிநாட்டில் வேலை வாய்ப்புக்காக சென்றுள்ளதுடன் அம்மம்மாவின் பாதுகாப்பில் சிறுவனும் இருந்து வந்துள்ளார்.

இவ்வாறான நிலையில், இருவரும் ஒரே வகுப்பில் கல்வி கற்று வந்துள்ள நிலையில், சிறுவனின் வீட்டிற்கு கல்வி கற்பதற்காக சிறுமி சென்று வந்துள்ளார்.

இதனையடுத்து சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதையிட்டு அவரை நேற்று வைத்தியசாலைக்கு அழைத்து சென்றபோது, சிறுமி 2 மாத கர்ப்பிணியாக உள்ளமை தெரியவந்ததையடுத்து வைத்தியர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

பின்னர் சிறுமியை கர்ப்பிணியாக்கிய 16 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Saturday, September 28, 2024

யாழ் இருபாலை தனியார் ரியூசன் சென்றர் ஆசிரியர் இந்திரஜித்தின் வெறித்தனம்!! பொலிஸ் விசாரணை!!!


யாழ் இருபாலை தனியார் ரியூசன் சென்றர் ஆசிரியர் இந்திரஜித்தின் வெறித்தனம்!! பொலிஸ் விசாரணை!!!

யாழ் இருபாலையில் இயங்கும் தனியார் கல்வி நிலையம்ஒன்றில் விஞ்ஞானபாட ஆசிரியராக கற்பிக்கும் இந்திரஜித் என்பவர் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

  குறித்த ஆசிரியர் மாணவர்களைக் கடுமையாகத் தாக்கி வருவதாகவும் இவரது தாக்குதல் காரணமாக கால்கள் வீங்கிய நிலையில் மாணவன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகின்றது. இந் நிலையிலேயே குறித்த ஆசிரியர் பொலிசாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது | Gce Ordinary Results 2023 Released


சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது!

2023 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளன.

பரீட்சசையில் தோற்றிய பரீட்சார்த்திகள் doenets.lk/examresults தளத்தில் சுட்டெண் உள்ளிட்ட விபரங்களை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும்.

பரீட்சை பெறுபேறுகள் 
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த மே மாதம் ஆறாம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை நடைபெற்றது.

மேலும், இதில் மொத்தம் 452,979 விண்ணப்பதாரர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கழுத்து அறுக்கப்பட்டு இருவர் படுகொலை!!


கழுத்து அறுக்கப்பட்டு இருவர் படுகொலை!!

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபரின் கழுத்தை அறுத்துவிட்டு மற்றைய நபர் தப்பிச் சென்றுள்ளார்.

இச்சம்பவம் கனேமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஹல யாகொட பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. இந்நிலையில், காயமடைந்த நபரை பிரதேச மக்கள் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எவ்வாறாயினும், குறித்த நபர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடிய நபரை பிரதேச மக்கள் தேடிச் சென்றபோது, அவரும் அருகில் உள்ள புதரில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கனேமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கள்ளக்காதலியை பார்க்க இரவு சென்ற காதலன்!! பதுங்கியிருந்து சுத்தியலால் மண்டையில் போட்டு கொலை செய்த கணவன்!! கள்ளன் என கூறி நடாத்திய நாடகம்!!


கள்ளக்காதலியை பார்க்க இரவு சென்ற காதலன்!! பதுங்கியிருந்து சுத்தியலால் மண்டையில் போட்டு கொலை செய்த கணவன்!! கள்ளன் என கூறி நடாத்திய நாடகம்!!

வாரியபொல வல்பாலுவ பிரதேசத்தில் வீடொன்றில் புகுந்த திருடன் பிடிபட்டதாக 119 தகவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (27) இரவு இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் சுந்தரகம, அவுலேகம பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் சந்தேகநபரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், உயிரிழந்தவர் சந்தேகநபரின் வீட்டிற்கு வந்த போது சந்தேகநபர் வீட்டில் மறைந்திருந்து சுத்தியலால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்படவுள்ளதுடன், 36 வயதுடைய சந்தேகநபர் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வந்த யோகேஸ்வரன் துாக்கில் தொங்கி பலி!!


பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வந்த யோகேஸ்வரன் துாக்கில் தொங்கி பலி!!

யாழில், மனவிரக்தியடைந்த குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து இன்றையதினம் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இருபாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த விஜயரட்ணம் யோகேஸ்வரன் (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இவர் நீண்ட காலத்திற்கு பின்னர் பிரான்ஸில் இருந்து ஊருக்கு வந்துள்ளார். இவரது 3 பிள்ளைகள் மூன்று வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். மன விரக்தியில் இருந்த இவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

Friday, September 27, 2024

வைத்தியர் அர்ச்சுனாவுடன் உடலால் இணைய ஆசைப்பட்ட புலம்பெயர் அன்ரி செய்த திருவிளையாடல்!!


வைத்தியர் அர்ச்சுனாவுடன் உடலால் இணைய ஆசைப்பட்ட புலம்பெயர் அன்ரி செய்த திருவிளையாடல்!!

சைாவகச்சுரி முன்னாள் வைத்திய அதிகாரி  இராமநாதன் அர்ச்சுனா தற்போது ஒக்டோபர் 10ம் திகதிவரை 15 நாள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி வைத்தியாசாலையின் குறைபாடுகள் மற்றும் வைத்தியர்களின் துஸ்பிரயோக நடவடிக்கைகள் தொடர்பாக அவர் தனது பேஸ்புக்கில் தெரிவித்த கருத்துக்கள் பெரும் அதிர்ச்சியையும் அவரது நடவடிக்கைக்கு பெரும் ஆதரவையும் கொடுத்தது.

  இந் நிலையில் குறித்த வைத்தியருக்கு ஆதரவாக பெருமளவு மக்கள் திரண்டு எழுந்தனர். குறிப்பாக புலம்பெயர் தமிழ்க் குடும்பப் பெண்கள் மற்றும் இளம் பெண்கள் அர்ச்சுனாவுக்காக பண உதவியும் செய்தார்கள். அர்ச்சுனாவின் வங்கிக் கணக்கில் தற்போது பல கோடி ரூபாக்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாவகச்சேரி வைத்தியசாலையிலிருந்து தன்னை அகற்றியதால் ஏற்பட்ட விரக்தியால் உண்டான மன அழுத்தம் காரணமாக, தவளையும் தன் வாயால் கெடும் என்ற பழமொழிக்கு ஏற்ப, நிறை வெறியில் தன்னை மறந்து பேஸ்புக்கில் கருத்துக்களை வெளியிடத் தொடங்கினார் அர்ச்சுனா….  

தனக்கு ஆதரவு கொடுத்து தோள் கொடுத்தவர்களைக் கூட சந்தேகப்பட்டு மது போதையில் அவர்களுக்கு எதிராகவும் தனது பேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்து வந்தார். இவ்வாறான நிலையில் அவரது ஆதரவாளர்களாக இருந்த ஏராளமானவர்கள் அவரது எதிரிகளாக மாறத் தொடங்கினர்.

இது இவ்வாறு இருக்க புலம்பெயர் தமிழ்ப் பெண் ஒருவர் அர்ச்சுனாவுடன் உரையாடும் ஒலிப்பதிவுயின் சில வினாடிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.  அதனை நாம் இங்கு தந்துள்ளோம்.

யாழில் 35 இளம்குடும்பப் பெண் பலி!! நிதிநிறுவன ஊழியர்களை எதற்காக மக்கள் நையப்புடைத்தனர்?


யாழில் 35 இளம்குடும்பப் பெண் பலி!! நிதிநிறுவன ஊழியர்களை எதற்காக மக்கள் நையப்புடைத்தனர்?

யாழில் இளம் குடும்பப் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

வடலியடைப்பு, பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வசித்து வருகின்றார்.

இந்நிலையில் அந்த பெண், அடகு வைத்த நகைகளை மீட்கும் நிதி நிறுவனம் ஒன்றிடம் ஒரு தொகை பணத்தை பெற்றுக்கொண்டு, நகையை மீட்பதற்காக சென்றுள்ளார்.

இருப்பினும் குறித்த பெண்ணின் தொலைபேசி இயங்காத நிலையில் அந்த நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் குறித்த பெண்ணின் வீட்டுக்கு சென்று பார்த்தவேளை அவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்ததை அவதானித்துள்ளனர்.

அதேவேளை, அங்கு வந்த அயலவர்கள், நிதி நிறுவன ஊழியர்களின் நெருக்கடியால் தான் குறித்த பெண் தவறான முடிவெடுத்து உயிரிழந்ததாக நினைத்து நிதி நிறுவன ஊழியர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த ஒரு ஊழியர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

குறித்த பெண்ணின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

அதேவேளை உயிரிழந்த குடும்பப் பெண்ணின் மரணத்திற்கான காரணம் என்ன என இதுவரை தெரியவரவில்லை.

யாழில் காதலித்த யுவதி தன்னை கை விட்டு வெளிநாடு செல்ல ஆயத்தமானதால் வெலின்ரன் தற்கொலை!!


யாழில் காதலித்த யுவதி தன்னை கை விட்டு வெளிநாடு செல்ல ஆயத்தமானதால் வெலின்ரன் தற்கொலை!!

யாழ்ப்பாணத்தில் காதலித்த பெண் விட்டுச் சென்றதால் இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

இச்சம்பவத்தில் கச்சேரி, நல்லூர் வீதியை சேர்ந்த 24 வயதான திருநாவுக்கரசு வெலிற்றன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த இளைஞனும் யுவதியும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் குறித்த பெண் வெளிநாடு செல்வதற்காக இளைஞனுடனான தொடர்பை துண்டித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனால் மன விரக்தியடைந்த இளைஞன் இன்றையதினம் (27-09-2024) காலை தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துகொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மெல்ல மெல்ல சந்திரமுகியாக மாறும் அங்கஜன் இராமநாதன்!! பலாலியை விட்டு ஆமியை ஓடச் சொல்கின்றார்!!


மெல்ல மெல்ல சந்திரமுகியாக மாறும் அங்கஜன் இராமநாதன்!! பலாலியை விட்டு ஆமியை ஓடச் சொல்கின்றார்!!

கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக அரசாங்கத்தின் செல்லப்பிள்ளையாக இருந்து செல்லங் கொஞ்சிய அங்கஜன் இராமநாதன் மெல்ல மெல்ல சந்திரமுகியாக மாறும் காட்சிகள் இங்கு தரப்பட்டுள்ளன.  அவரே கடிதம் எழுதி அந்தக் கடிதத்தை அவரது பேஸ்புக்கில் பதிவை இட்டு அதை வெளியிள்ளார். அந்தப் பதிவை அப்படியே நாம் இங்கு தந்துள்ளோம்…

வலி வடக்கு உயர்பாதுகாப்பு வலய வீதிகளையும் மக்கள் பாவனைக்காக திறப்பது நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு அங்கஜன் இராமநாதன் வேண்டுகோள்.

கொழும்பில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் மூடப்பட்டிருந்த இரண்டு வீதிகளை மீண்டும் மக்கள் பாவனைக்காக திறக்கப்படுவதற்கு ஜனாதிபதி உத்தரவிட்ட நிலையில்,  யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்குப் பகுதியில் பாதுகாப்பு வலயத்தில் உள்ள 4 வீதிகளையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கடிதமூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள போதிலும், பொதுமக்களின் வாழ்க்கைக்கு முக்கியமான பல வீதிகள்யாழ்ப்பாணத்தில் மூடப்பட்டுள்ளதால், இந்தப் பகுதிகளில் உள்ள மக்களின் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்து செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக,
1. யாழ்ப்பாணம் – பலாலி வீதி (கிழக்கு பக்கம்): வயாவிளான் மத்திய கல்லூரிக்கு அடுத்துள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் எஞ்சியுள்ள வீதி இராணுவ கட்டுப்பாடுகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். இந்த வீதி பருத்தித்துறை பொன்னாலை வீதியுடன் இணைவதுடன் உள்ளூர் போக்குவரத்திற்கு இன்றியமையாததாகும்.

2. அச்சுவேலி வயாவிளான் – தோளக்கட்டி வீதி:
இந்த முக்கிய வீதி மூடப்பட்டுள்ளதால், அப்பகுதியிலுள்ள முக்கியமான அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு செல்வதற்கு இடையூறாக உள்ளது.

3. வயாவிளான் யாழ் விமான நிலைய ஓடுபாதை பக்க வீதி:
கட்டுவன் சந்தி ஊடாக இந்த வீதியை திறப்பதன் மூலம் யாழ் சர்வதேச விமான நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கான தொடர்பை கணிசமாக மேம்படுத்த முடியும்.

4. காங்கேசன்துறை – கீரிமலை வீதி (ஜனாதிபதி அரண்மனை வீதி):
வரலாற்று மற்றும் கலாசார தளத்திற்கு இட்டுச் செல்லும் இந்த வீதி மீண்டும் திறக்கப்படுவதால், உள்ளூர் சமூகங்கள் பயனடைவதுடன், இப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும்.

ஆகவே  யாழ்ப்பாண மக்கள் அமைதி மற்றும் இயல்பு நிலைக்கான உறுதியையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ள சூழலில், இந்த வீதிகளை மீண்டும் திறக்க அனுமதிப்பதால் நல்லிணக்கம் மற்றும் பிரதேச வளர்ச்சி ஆகியன வலுவடைவதுடன், எமது மக்களின் நீண்டகால கவலையை நிவர்த்தி செய்து, அனைத்துப் பகுதிகளிலும் சமமான வளர்ச்சிக்கான உங்கள் நிர்வாகத்தின் அர்ப்பணிப்பையும் நிரூபிக்கும்.

ஆகவே இவ்வீதிகள் மீளத் திறப்பதால் யாழ்ப்பாண மக்களுக்குப் பெரிதும் பயனளிக்கும் என்பதோடு எமது தேசத்தின் அமைதியான வளமான எதிர்காலத்துக்கும் உறுதுணையாக அமையும் என்பதால், இந்த வேண்டுகோளுக்கு உங்களது கவனம் செலுத்தப்படும் என நான் நம்புகிறேன்.
என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்றரை கோடி பெறுமதியான சிறிதரன் எம்பி யின் வாகனம் எங்கே?


மூன்றரை கோடி பெறுமதியான சிறிதரன் எம்பி யின் வாகனம் எங்கே?

பேஸ்புக் பக்கத்தில் வந்த தகவலை அப்படியே இங்கே தந்துள்ளோம்.

3 கோடியே 34 இலட்சத்து 59 ஆயிரத்து 250 ரூபா பெறுமதியானது சிறிதரன் எம்பியின் வாகனம்

இதுவே Toyota land cruiser என்ற அதி சொகுசு வாகனம். 2016 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் சி் சிறிதரன் அவர்கள் இதனையே தெரிவு செய்துபெற்றுள்ளார் என சட்டத்தரணி என்.கொடித்துவக்கு தகவலை பெற்று வெளியிட்டுள்ளார்.

ஒவ்வொரு தடவையும் எம்பியாக தெரிவு செய்யப்படும் போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் அனுமதி பத்திரம் வழங்க்கப்படுகிறது. அந்த வகையில் சிறிதரன் எம்பிக்கும் இதுவரை இவ்வாறு இரண்டு வாகன அனுமதி பத்திரம் வழங்கப்பட்டிருக்கும்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன அனுமதி பத்திரம் வழங்கப்படுவதும் அதனை அவர்கள் கோடிக் கணக்கில் விற்பனை செய்வதும் ஒன்றும் ஆச்சரியமான விடயமோ, புதுவிடயமோ அல்ல. ஆனால் சிறிதரன் எம்பி தொடர்பில் மட்டும் ஏன் பேசப்படுகிறது?

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்!


மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்!

வவுனியா – பூவரசங்குளம் குருக்கலூர் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குருக்கலூர் பகுதியை சேர்ந்த செல்வகுமார் சர்மிளன் எனும் 30 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று (26) பிற்பகல் குறித்த விபத்து சம்பவம் பதிவாகியுள்ளது.

குருக்கலூர் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் இருந்த மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மோட்டார் சைக்கிளும் தீப்பற்றி முற்றிலும் எரிந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Thursday, September 26, 2024

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அழகான சிங்கள பெண் வைத்தியரால் மீண்டும் அலங்கோலம்!ரஜீவ் ராஜினமா!


சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அழகான சிங்கள பெண் வைத்தியரால் மீண்டும் அலங்கோலம்!ரஜீவ் ராஜினமா!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்று வந்த சிங்களப் பெண் வைத்தியரின் அழகில் மயங்கி மாகாண சுகாதாரப் பணிப்பாளர் அவரை தனது அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்துள்ளார். இதனால் கடுப்பான சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் தற்போதய வைத்தியஅதிகாரி ரஜீவ் உடனடியாக தனது ராஜினாமாக் கடிதத்தை வழங்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனைச் சமாளிக்கும் முயற்சியில் அரச பைத்திய அதிகாரிகள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.

இதே வேளை வைத்தியர் ரஜீவ் ஏற்கனவே மாகாண சுகாதாரப் பணிப்பாளரின் அலுவலகத்தில் திட்டமிடல் அதிகாரியாக கடமையாற்றிவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆகவே மாகாண சுகாதாரப் பணிப்பாளர் குறித்த சிங்களப் பெண் வைத்தியரை என்ன நோக்கத்திற்காக அங்கு எடுத்தார் என்பது ரஜீவுக்கு தெரிய வாய்ப்புள்ள அதே நேரத்தில் தனது அலுவலகத்தில் வேலை செய்த ரஜீவிடம் சாவகச்சேரியில் பணியாற்ற தனது சமூகப் பெண்ணை அனுப்பினால் ஏதாவது இசகு பிசகான செயற்பாடுகள் நடைபெற்று விடுமோ என மாகாணப் பணிப்பாளரும் சந்தேகிக்கலாம்…..

இதே வேளை வட பகுதியில் கடமையாற்றும் வைத்தியர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் போதை மருந்து மற்றும் மதுவுக்கும் மாதுவுக்கும் அடிமையாகியுள்ளார்கள் என உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

மதுபான அனுமதிப்பத்திரங்கள் பெற்றவர்களின் பெயர் பட்டியலை வெளியிடும் அரசாங்கம் | Bar Licenses List Of Names


மதுபான அனுமதிப்பத்திரங்கள் பெற்றவர்களின் பெயர் பட்டியலை வெளியிடும் அரசாங்கம்
மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொண்டவர்களின் பெயர் பட்டியல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

300 இலட்சம் ரூபாய் முதல் 400 இலட்சம் ரூபாவுக்கு மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை விற்பனை செய்தவர்கள் உள்ளனர்.அவர்களின் விபரங்கள் எம்மிடம் உள்ளன.

முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் 

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்கள் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டமை தொடர்பான விசாரணைகள் நடத்தப்படும்.

அத்துடன் அவ்வாறான சகல தரப்பினர் தொடர்பான விபரங்களும் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்படும் ” என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வடிவேலு பாணியில் என்னை மன்னித்துக் கொள்ளுங்கோ என நீதிமன்றில் கும்பிட்ட அர்ச்சுனா!! உள்ளே தள்ளிய நீதிபதி!! நடந்தது என்ன?


சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அதிகாரி இ.அர்ச்சுனாவை எதிர்வரும் ஒக்ரோபர் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு விசாரணையின் போது, நீதிபதியை பார்த்து கையெடுத்து கும்பிட்ட அர்ச்சுனா, தன்னை மன்னித்துக்கொள்ளுமாறும் கேட்டுள்ளார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட சமயத்தில், ஏனைய வைத்தியர்கள் சிலர் தொடர்பில் ஆதாரமற்ற அவதூறு பரப்பிய வழக்கில், இராமநாதன் அர்ச்சுனா இன்று சாவகச்சேரி நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

வழக்கு விசாரணையின் போது, தனது தரப்பு கருத்தை வெளிப்படுத்த விரும்புவதாக அர்ச்சுனா கோரியதையடுத்து, அவரை பேச நீதிபதி அனுமதித்தார்.

நீதிபதியை பார்த்து கையெடுத்து கும்பிட்ட அர்ச்சுனா, தான் ஒரு நல்ல வைத்தியர், ஆனால் சட்டம் தெரியாது, தான் பேசுவதில் தவறிருந்தால் மன்னிக்க வேண்டுமென்றார்.

அப்படி சொல்ல முடியாது என குறிப்பிட்ட நீதிபதி, சட்டம் படிப்பதாகவும், எல்லா சட்டமும் தெரியுமென நீங்கள்தானே பேஸ்புக்கில் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என்றார்.

பின்னர், அர்ச்சுனா பேஸ்புக்கில் எழுதுவதை போல சில விடயங்களை பேசினார்.

அவற்றை தவிர்த்து, அவர் பேஸ்புக்கில் வைத்தியர்கள் பற்றி வெளிப்படுத்திய கருத்துக்கள் தொடர்பான ஆதாரங்களை முன்வைக்குமாறு நீதிபதி குறிப்பிட்டார்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் தொடர்பில் அர்ச்சுனா பேச முற்பட, அதைப்பற்றி அல்ல, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி தொடர்பில் பரப்பப்பட்ட தகவல்களுக்கான ஆதாரங்களை முன்வைக்குமாறு நீதிபதி குறிப்பிட்டார்.

அந்த ஆதாரங்களை முன்வைக்க பயமான உள்ளது, நீங்கள் (நீதிபதி) வைத்தியர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடினீர்கள் என அர்ச்சுனா குறிப்பிட்டார்.

அர்ச்சுனா வெளிப்படுத்திய தகவல்கள் தொடர்பில் பொதுமக்கள் யாரும் தம்மிடம் முறைப்பாடு செய்யவில்லையென சாவகச்சேரி பொலிசாரும் தெரிவித்தனர்.

ஏற்கெனவே 4 தவணைகள் கடந்தும் முன்வைத்த தகவல்கள் தொடர்பில் எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லையென குறிப்பி்ட நீதிபதி, அதற்கு பதிலாக நீதிபதி, பிணையாளிகள், வழக்காளிகள் என அனைவர் மீதும் பேஸ்புக் ஊடாக சேறடிப்பையே மேற்கொள்வதாக தெரிவித்தார்.

அது தன்னுடைய பேஸ்புக் இல்லையென அர்ச்சுனா தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் சிரித்தனர்.

அர்ச்சுனாவை ஒக்ரோபர் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி உயர்வு | Today Usd Dollar Tariff Rate In Srilanka


டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி உயர்வு
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (26.09.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 295.80 ரூபாவாகவும், கொள்வனவு விலை 304.91 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. 

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 218.29 ரூபாவாகவும், கொள்வனவு விலை 227.94 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

நாணயமாற்று விகிதம்

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 327.99 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 341.46 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. 

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 393.05 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 408.13 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. 

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 200.57 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 210.68 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. 

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 227.95 ஆகவும் ரூபாவாகவும்,கொள்வனவு பெறுமதி 238.73 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. 

சுமந்திரனால் கம்பி எண்ணும் குடி வரவு குடியகல்வு திணைக்கள பணிப்பாளர்!


சுமந்திரனால் கம்பி எண்ணும் குடி வரவு குடியகல்வு திணைக்கள பணிப்பாளர்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது பேஸ்புக்கிலேயே தன்னால் கைது செய்யப்பட்ட ஒருவர் தொடர்பாக இவ்வாறு பதிவிட்டுள்ளார். அதனை அப்படியே தந்துள்ளோம்…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், பாட்டலி சம்பிக ரணவக்க ஆகியோரும் வேறு சிலரும் உயர் நீதி மன்றத்தில் ஈ வீசா மோசடி தொடர்பில் தொடுத்த அடிப்படை உரிமை மீறல் வழக்கில்

நீதிமன்றம் விதித்திருந்த இடைக் கால தடை உத்தரவை அமுல் படுத்த தவறியதனால் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக குடி வரவு குடியகல்வு திணைக்கள பணிப்பாளர் நாயகத்தை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 22ம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும் வரை விளக்க மறியலில் வைக்குமாறு உயர் நீதி மன்றம் இன்று (25) தீர்ப்பளித்தது.

கர்ப்பிணி ஆசிரியையும், அவரது கணவரும் விபத்தில் மரணம்!!


கர்ப்பிணி ஆசிரியையும், அவரது கணவரும் விபத்தில் மரணம்!!

அக்குரஸ்ஸ சியம்பலாகொட – பிடபெத்தர வீதியில் போபகொட சந்திக்கு அருகில் புதன்கிழமை (26) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை ஆசிரியை ஒருவரும் அவரது கணவரும் உயிரிழந்துள்ளதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிடபெத்தரை, மெதிரிபிட்டிய பாடசாலையில் கிடைத்த பரிசில்களுடன் மோட்டார் சைக்கிளில் மகதுரையில் உள்ள தமது வீட்டை நோக்கி கணவருடன் பயணித்துள்ளனர்.
பிடபெத்தரவை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தனது சொகுசு வேனில் அக்குரஸ்ஸ பகுதியிலிருந்து பிடபெத்தரை நோக்கி பயணித்த போது வேனை கவிழ்த்து அருகில் உள்ள மண்ணில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் மகடூர பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான பாக்யா பொரலஸ்ஸ மற்றும் அவரது கணவர் இந்திக்க சம்பத் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகத்திற்குரிய வர்த்தக சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர் மதுபோதையில் இருந்தாரா என்பதை கண்டறிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.பாக்யாவின் சடலம் அக்குரஸ்ஸ வைத்தியசாலைக்கும், இந்திகவின் சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த பாக்யா கர்ப்பமாக இருந்ததாக ​பொலிஸார் தெரிவித்தனர்.

சும்மா படம் காட்டாமல் முடிந்தால் செய்து காட்டுங்கோ பார்ப்போம்!! விமல்வீரவன்ச கொதிப்பு!!


சும்மா படம் காட்டாமல் முடிந்தால் செய்து காட்டுங்கோ பார்ப்போம்!! விமல்வீரவன்ச கொதிப்பு!!

ஆட்சிபீடம் ஏறியுள்ள அனுர குமார திசாநாயக்காவை வாழ்த்துகின்றேன் ஆனால் அவர்கள் எப்படிபட்டவர்கள் என்பது எனக்கு நன்று தெரியும்

அமெரிக்கர்களிடம் 3 வீட்டுக்கு ஒரு வாகனம் உள்ளது எனது நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும் வாகனம் இருக்கவேண்டும் அதுவும் குறைந்தவிலையில் 6 மாதத்துக்குள் அவ்வாகனத்தைக் கண்டுபிடித்து உருவாக்கியே ஆகவேண்டும் இல்லையென்றால் மரணதண்டனை வழங்கப்படும் என அறிவித்தார் ஹிட்லர்

அந்தநாட்டில் எல்லாவீட்டிலும் வாகனம் வந்தது இலங்கையில் தற்போது நடைபெறுவது வெறும் படம் இதற்கு முன் கோட்டாபாய வென்றதும் சித்திரம் கீறினார், தனிவாகனத்தில் பாராளுமன்றம் சென்றார் சில்லரைக்கடையில் அமர்ந்து பரிசீலனை செய்தார் 2 வருடத்துக்குள் ஓடிவிட்டார்

இதேபடத்தை வேறுவிதத்தில் வாகனம் என்ற பெயரில் அனுர முன்கொண்டு செல்லுகின்றார் என்பதை மக்கள் புரியாமலில்லை.

இலங்கையில் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் அனைத்து நகர்வுகளும் முறையான அனுமதியுடனும் ஆதாரத்துடனுமே நடைபெற்றுள்ளது அதில் இவர்களால் எந்தக்குறையும் ஒருநாளும் கண்டுபிடிக்கமுடியாது அது கால விரையமே

வித்தியாசம் வேண்டுமென்றால் எரிபொருளின் விலையை 100 ரூபாவாக்குங்கள் பால்மாவின் விலையை 300 ரூபாவாக்குங்கள் உங்கள் திறமையை மக்கள் கண்டுகொள்வார்கள்

இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்த 58 வீதமான மக்கள் உங்கள் செயற்பாட்டை பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள்

இதேபடம் தொடருமானால் பாராளுமன்றத்தில் 50 ஆசனங்களையாவது பெற்றுக்கொள்ள முடியாமல் போய்விடும் என நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

Wednesday, September 25, 2024

அர்ச்சுனாவிற்கு சாவச்சேரி நீதிமன்றால் விளக்கமறியல்


பிணை நிபந்தனை மீறியமை ஆதாரங்களை வழங்காத குற்றச்சாட்டிற்கு வைத்தியர் அர்ச்சுனாவிற்கு சாவச்சேரி நீதிமன்றால் விளக்கமறியல்
26.09.2024

வைத்தியர் #அர்ச்சுனாவுக்கு #விளக்கமறியல்!

யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்நாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு சாவகச்சேரி நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு எதிராக சாவகச்சேரி பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கடந்த மாதம் அவர் கைது செய்யப்பட்டு, நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது வழக்கானது இன்றையதினம் சாவகச்சேரி நீதிமன்றத்தில் நீதிவான் அ. யூட்சன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன்போது சட்ட வைத்திய அதிகாரிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் சமர்ப்பிக்காமை, பிணையாளிகளை அவதூறுபடுத்தியமை, பிணையின் நிபந்தனைகளை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் அவரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

யாழ் போதனா வைத்தியசாலை நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா விடுதிக்கு வருவதில்லை – தவிக்கும் நோயாளர்கள்!


யாழ் போதனா வைத்தியசாலை நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா விடுதிக்கு வருவதில்லை – தவிக்கும் நோயாளர்கள்!

 யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நரம்பியல் வைத்திய நிபுணரும் நொதேர்ன் தனியார் வைத்தியசாலையின் முதலாளியின் மனைவியுமான அஜந்தா கேசவராஜ் அவர்கள் கடந்த ஆறு நாட்களாக விடுதிக்கு வருகை தராமையினால் நோயாளிகள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த விடயம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரண்டு நரம்பியல் வைத்திய நிபுணர்கள் கடமையில் உள்ளார்கள். அந்தவகையில் வைத்திய நிபுணர் திருமதி. கவிதா மற்றும் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜ் ஆகியோர் கடமையில் உள்ளார்கள்.

வைத்திய நிபுணர் திருமதி. கவிதா அவர்கள் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களை கூட பாராமல் தினசரி வைத்தியசாலை விடுதிக்கு சென்று தனது நோயாளிகளை பார்வையிட்டு வருகின்றார். ஆனால் வைத்திய நிபுணர் அஜந்தா அவர்கள் சீராக வைத்தியசாலை விடுதிக்கு சென்று நேயாளர்களை பார்வையிடுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வைத்திய நிபுணர் அஜந்தா அவர்கள் கடந்த புதன்கிழமை (18.09.2024) அன்று இறுதியாக வைத்தியசாலை விடுதிக்கு வந்து, மிகவும் குறுகிய நேரம் நோயாளிகளை பார்வையிட்டு சென்றுள்ளார். அதற்கு பின்னர் கடந்த திங்கட்கிழமை வரை (23.09.2024) வைத்தியசாலை விடுதிக்கு வந்து நோயாளிகளை பார்வையிடவில்லை என நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த வைத்திய நிபுணரின் கண்காணிப்பின் கீழ் உள்ள நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை வழங்கப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஆகையால் நோயாளிகள் நோயின் வீரியத்தால் மிகவும் இன்னல்களை அனுபவிக்கின்றனர்.

குறித்த வைத்திய நிபுணர்  யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றின் இயக்குனராக கடமையாற்றி வருகின்றார். ஆகையால் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமை புரிய வேண்டிய நேரத்தில் தனது தனியார் மருத்துவமனையில் சேவை புரிகின்றாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

குறித்த வைத்திய நிபுணர் தமது தனியார் வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளிகளுக்கு கட்டணம் அறவிட்ட பின்னர் அவர்களை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி அங்கு வைத்து சிகிச்சை வழங்குவதாகவும், அவர்களுக்கு சிறப்பு கண்காணிப்பு வழங்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்களது வரிப்பணத்தில் சம்பளத்தினை பெறுகின்ற அரச அதிகாரிகள் இவ்வாறு தமது சேவையை துஷ்பிரயோகம் செய்வது கண்டிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். இந்த விடயங்கள் வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்திக்கு தெரிந்து நடக்கின்றனவா? அல்லது தெரியாமல் நடக்கின்றனவா? என மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

எனவே இவ்வாறான முறைகேடுகள் இடம்பெறாமல், மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையுமாக உள்ளது.
online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job