தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு ஆதரவளித்த விரிவுரையாளர்களை விமர்சித்து யாழ். பல்கலையில் சுவரொட்டி ஒட்டி வைப்பு
தமிழர் உரிமைகளுக்கு எதிராக தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்ட 15 விரிவுரையாளர்களின் செயலை விமர்சித்து யாழ். (Jaffna) பல்கலைக்கழக வளாகத்தில் ஏனைய விரிவுரையாளர்களினால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
குறித்த 15 விரிவுரையாளர்களும், இணைந்து நேற்றைய தினம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
வெளியிட்ட அறிக்கை
அந்த அறிக்கையில், "தமிழ்த் தேசிய அரசியலினை மாத்திரம் முன்னிறுத்தி, சர்வதேச கவனத்தினை ஈர்ப்பதனை நோக்கமாகக் கொண்டு தேர்தலிலே வாக்குக் கோருவது, அரசியல் ரீதியில் தமிழ் மக்களுக்குப் பின்னடைவினை ஏற்படுத்தக் கூடும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், "தற்போதைய ஆட்சியாளர்களை நிராகரித்து, பொருளாதார மீட்சி மற்றும் 2022 இல் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது எழுச்சியுற்ற முற்போக்கான அரசியற் பொருளாதார மாற்றங்களுக்கான கோசங்கள் உள்ளிட்ட விடயங்களை பொதுமக்கள் கருதி வாக்களிக்க வேண்டும்" எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
அதேவேளை,யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நேற்றைய தினம் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் வகையில் ஊடக சந்திப்பும் நடத்தப்பட்டது.
இந்நிலையில், இன்றைய தினம், குறிப்பிட்ட 15 விரிவுரையாளர்களும் தென்னிலங்கை வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளதாக பல்கலைக்கழக வளாகத்தில் சுவாரட்டி ஒன்று ஒட்டப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment