நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, September 25, 2024

அர்ச்சுனாவிற்கு சாவச்சேரி நீதிமன்றால் விளக்கமறியல்


பிணை நிபந்தனை மீறியமை ஆதாரங்களை வழங்காத குற்றச்சாட்டிற்கு வைத்தியர் அர்ச்சுனாவிற்கு சாவச்சேரி நீதிமன்றால் விளக்கமறியல்
26.09.2024

வைத்தியர் #அர்ச்சுனாவுக்கு #விளக்கமறியல்!

யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்நாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு சாவகச்சேரி நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு எதிராக சாவகச்சேரி பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கடந்த மாதம் அவர் கைது செய்யப்பட்டு, நிபந்தனைகளின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது வழக்கானது இன்றையதினம் சாவகச்சேரி நீதிமன்றத்தில் நீதிவான் அ. யூட்சன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன்போது சட்ட வைத்திய அதிகாரிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் சமர்ப்பிக்காமை, பிணையாளிகளை அவதூறுபடுத்தியமை, பிணையின் நிபந்தனைகளை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் அவரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

0 comments:

Post a Comment