யாழில் இளம் குடும்பப் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
வடலியடைப்பு, பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வசித்து வருகின்றார்.
இந்நிலையில் அந்த பெண், அடகு வைத்த நகைகளை மீட்கும் நிதி நிறுவனம் ஒன்றிடம் ஒரு தொகை பணத்தை பெற்றுக்கொண்டு, நகையை மீட்பதற்காக சென்றுள்ளார்.
இருப்பினும் குறித்த பெண்ணின் தொலைபேசி இயங்காத நிலையில் அந்த நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் குறித்த பெண்ணின் வீட்டுக்கு சென்று பார்த்தவேளை அவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்ததை அவதானித்துள்ளனர்.
அதேவேளை, அங்கு வந்த அயலவர்கள், நிதி நிறுவன ஊழியர்களின் நெருக்கடியால் தான் குறித்த பெண் தவறான முடிவெடுத்து உயிரிழந்ததாக நினைத்து நிதி நிறுவன ஊழியர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த ஒரு ஊழியர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
குறித்த பெண்ணின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.
அதேவேளை உயிரிழந்த குடும்பப் பெண்ணின் மரணத்திற்கான காரணம் என்ன என இதுவரை தெரியவரவில்லை.
0 comments:
Post a Comment