நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Sunday, September 15, 2024

யாழில் நெகிழ்ச்சி சம்பவம் : வாத்தியங்கள் முழங்க நாயிற்க்கு இறுதிச் சடங்கு | A Dog Funeral In Jaffna


யாழில் நெகிழ்ச்சி சம்பவம் : வாத்தியங்கள் முழங்க நாயிற்க்கு இறுதிச் சடங்கு
யாழில் (Jaffna) மனிதர்களுக்கு இறுதிச் சடங்கினை செய்வது போல வளர்ப்பு நாய்க்கும் இறுதி சடங்கினை செய்த சம்பவம் அனைவரிடமும்  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

குறித்த சம்பவமானது யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை (Vaddukoddai) மாவடி (Mavadi) பகுதியில் இன்றையதினம் (15) இடம்பெற்றுள்ளது.

இந்தநிலையில், பைசா என்று அழைக்கப்படும் ரொட்வீலர் (Rottweiler) இன நாயானது  தனது 18 வயதை தாண்டிய நிலையில் நேற்றையதினம் (14) உயிரிழந்துள்ளது.

நாயின் உரிமையாளர்

உயிரிழந்த நாயின் உரிமையாளர், கடந்த பத்து வருடங்களாக தனக்கு பாதுகாப்பினை வழங்கிய நன்றிக் கடனுக்காக மனிதர்களுக்கு செய்கின்ற இறுதிச் சடங்கு போல குறித்த நாயிற்கும் இறுதிச் சடங்கினை நடத்தியுள்ளார்.

A Dog Funeral In Jaffna

இதனடிப்படையில், வாத்தியங்கள் முழங்க உயிரிழந்த நாயின் உடலம் வட்டுக்கோட்டை பகுதி எங்கும் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இதையடுத்து, உயிரிழந்த நாயின் உரிமையாளரின் காணியில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment