நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, September 27, 2024

யாழில் காதலித்த யுவதி தன்னை கை விட்டு வெளிநாடு செல்ல ஆயத்தமானதால் வெலின்ரன் தற்கொலை!!


யாழில் காதலித்த யுவதி தன்னை கை விட்டு வெளிநாடு செல்ல ஆயத்தமானதால் வெலின்ரன் தற்கொலை!!

யாழ்ப்பாணத்தில் காதலித்த பெண் விட்டுச் சென்றதால் இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

இச்சம்பவத்தில் கச்சேரி, நல்லூர் வீதியை சேர்ந்த 24 வயதான திருநாவுக்கரசு வெலிற்றன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த இளைஞனும் யுவதியும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் குறித்த பெண் வெளிநாடு செல்வதற்காக இளைஞனுடனான தொடர்பை துண்டித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனால் மன விரக்தியடைந்த இளைஞன் இன்றையதினம் (27-09-2024) காலை தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துகொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

0 comments:

Post a Comment