நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, September 13, 2024

திருகோணமலை மாவட்ட நீதிபதி பதவி நீக்கம்!! திருகோணமலைக்கு புதிய நீதிபதி மற்றும் நீதிவான்!!


திருகோணமலை மாவட்ட நீதிபதி பதவி நீக்கம்!! திருகோணமலைக்கு புதிய நீதிபதி மற்றும் நீதிவான்!!

திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக, நீதிபதி ஜனாப் ஃபயாஸ் ரசாக் (Fayas Rasak) அவர்களும், பிரதம நீதிவான் நீதிமன்ற நீதிவானாக நீதிவான் ஜீவராணி கருப்பையா அவர்களும் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். 

திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா நேற்றைய தினம் வியாழக்கிழமை உடன் அமுலுக்கு வரும் வகையில், நீதிச்சேவை ஆணைக்குழுவினால் பதவி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அந்நிலையில் மாவட்ட நீதிபதி மற்றும் நீதிவான் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்ட நிலையில் அவர்கள் இன்றைய தினம் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

புல்மோட்டை பகுதியில் கடந்த 04ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பிலான விசாரணைகளின் அடிப்படையிலையே நீதி சேவை ஆணைக்குழுவினால் திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் பதவி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

0 comments:

Post a Comment