முன்னாள் யாழ் எம்.பி விக்னேஸ்வரனின் திருவிளையாடல்!! இளம் பெண் தனுசாவுக்கு சாராய பார் பெமிட் வழங்கியது ஏன்?!!
கிளிநொச்சி நகரப்பகுதியில் இயங்கும் சாராயக்கடை ஒன்றின் அனுமதிப் பத்திரம் தமிழ்மக்கள் கூட்டணியின் தலைவரான முன்னாள் யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களால் நடராசா தனுசா என்ற யுவதிக்கு வழங்கியுள்ளமை அம்பலமாகியுள்ளது. அவருக்குரிய கோட்டாவில் குறித்த சாராய அனுமதிப்பத்திம் யுவதிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
எதற்காக சாராய அனுமதிப்பத்திரத்தை குறித்த யுவதிக்கு வழங்கினீர்கள் என்று கேட்ட போது குறித்த யுவதிக்கு அம்மா, அப்பா இல்லை என்ற காரணத்தால் சாராய அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொடுத்தேன் என விக்னேஸ்வன் கூறியுள்ளார். 2024.02.09 ம் திகதி ரணில் விக்ரமசிங்காவுக்கு கடிதம் எழுதி தனக்கான சாராய பார் கோட்டாவிற்கான உரிமத்தை குறித்த யுவதிக்கு கொடுக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதே போல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெருமளவானவர்கள் தங்களது பினாமிகளுக்கு இவ்வாறான சாராய பெமிட்களை பெற்றுக் கொடுத்துள்ளது அம்பலமாகியுள்ளது. சி.வி.விக்னேஸ்வரன் பாராளுமன்றத் தேர்தலிலில் இருந்து ஒதுங்குகின்றேன் என்று கூறியது இந்த திருவிளையாடல்களை நடாத்திமுடித்திருப்பதே காரணமாகும். சாராய பார் அனுமதி பெற்று பினாமிகள் பெயரில் நடாத்தும் ஏனைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இனிவரும் தேர்தலில் போட்டியிடாது ஒதுங்குவார்களா?? அல்லது பொதுமக்களால் ஒதுக்கப்படுவார்களா??
0 comments:
Post a Comment