நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, September 9, 2024

இனவாதி அநுரவுக்கு துரோகி சுமந்திரன் சார்பாக செயற்படுகிறார்: தம்பிராஜா ஆவேசம்! | Thambiraja Press Meet At Jaffna


இனவாதி அநுரவுக்கு துரோகி சுமந்திரன் சார்பாக செயற்படுகிறார்: தம்பிராஜா ஆவேசம்!
தமிழ் மக்களை இரத்தமும் சதையுமாக கொன்றொழித்த ஜேவிபி அநுரவுக்கு தமிழ் மக்களுக்கு எதிராக துரோகங்களை மேற்கொண்ட சுமந்திரன் ஆதரவு தெரிவிக்கிறார் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பிராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றையதினம்(09.09.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழ் மக்களின் வாக்களிப்பு

அவர் மேலும் தெரிவிக்கையில், 

“அண்மையில் யாழ்ப்பாணம் வருகை ஜேவிபி என்ற பெயர் மாற்றப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் தோழர் அநுர குமார தமிழ் மக்களை மிரட்டுகிறார் என யாழ்ப்பாணம் வருகை தந்த மற்றும் ஒரு வேட்பாளரான ரணில் விக்ரமசிங்க கூறியிருந்தார்.

இருவரைப் பொறுத்த வரையிலும் பழைய வரலாறுகளை தேடிப் பார்த்தால் இருவரும் தமிழ் மக்களுக்கு எதிராக செயல்பட்ட  இனவாதிகள்.

அவர்கள் தங்களுக்குள் யார் நல்லவர் என்பது தொடர்பில் அடிபட்டு கொள்ளட்டும், தமிழ் மக்களுக்கு அது பிரச்சனை அல்ல.

 ஜனாதிபதி வேட்பாளரான ரணில் விக்ரமசிங்க,  அநுரகுமார ஜே.வி.பி பானியில் வடக்கு மற்றும் தெற்கு மக்களை மிரட்டுகிறார் என கூறுகிறார்.

அநுர, தான் மிரட்டவில்லை. ரணில் தான் இனவாதத்தை கக்கி வாக்குகளை பெற முயற்சிக்கிறார் என கூறுகிறார்.

இது இவ்வாறு இருக்க தமிழரசு கட்சியை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தமிழ் மக்களுக்கு பல துரோகங்களை செய்தவர். அவர் அநுர அவ்வாறு மிரட்டவில்லை என சார்பாக பேசுகிறார்.

சுமந்திரன் தமிழ் மக்களுக்கு என்ன செய்தார் என்பது மக்களுக்குத் தெரியும். தற்போது தென் இலங்கை வேட்பாளருக்கு சார்பாக செயற்படுகிறார்.

ஆகவே, தமிழ் மக்கள் இனவாதிகளுக்கு வாக்களிக்காமல் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதோடு இனவாதிகளையும் துரோகிகளையும் தேர்தல் அரசியலில் இருந்து அகற்ற வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job