கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அர்ச்சுனா தனது பேஸ்புக் மற்றும் கைத்தொலைபேசிகளை நிறுத்திவிட்டு நிறை வெறியில் சாவகச்சேரி வைத்தசாலையில் படுத்திருந்த போது, அவருக்கு ஏதாவது ஆபத்து வந்துவிட்டதோ என நினைத்து அங்கு ஓடிச் சென்று கத்திக் குளறிய தம்பி என்று அழைக்கப்படும் தம்பிராசா பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆயர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
அவருக்கு அடுத்த நாளும் பிணை கேட்கப்பட்டு பிணை நிராகரிக்கப்பட்டிருந்தது. இன்று அர்ச்சுனாவின் பரம எதிரியாக உள்ள சட்டத்தரணி சயந்தன் தம்பிராசாவின் வழக்கை மீளவும் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது நீதவான் தம்பிராசாவை ஒரு ஆள் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.
அர்ச்சுனாவின் முதல் மனைவி ஆர்ச்சுனாவை விட்டுப் பிரிந்த பின் அர்ச்சுனா தனது பிள்ளையுடன் மனைவியின் மீசாலை வேம்பிராய் பகுதியில் உள்ள சீதன வீட்டிலேயே தங்கியருந்தார். இதனால் கொதிப்படைந்த மனைவியின் சகோதரனான பாலமயூரன், சட்டத்தரணி சயந்தன் மற்றும் அவரது ஆதரவாளர்களின் துணையுடன் சென்று அர்ச்சுனாவை சீதன வீட்டில் இருந்து துரத்தியமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment