Wednesday, October 25, 2023
டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் : இன்றைய நாணயமாற்று வீதம் | Dollar Exchange Rate At Banks Today
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (25) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 321 ரூபா 70 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 332 ரூபா 56 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 390 ரூபா 58 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 406 ரூபா 30 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 339 ரூபா 75 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 354 ரூபா 44 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232 ரூபா 58 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 243 ரூபா 62 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 203 ரூபா 96 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 214 ரூபா 28 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 234 ரூபா 01 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 244 ரூபா 68 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கொள்முதல் பெறுமதி
அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 318.62 ரூபாயிலிருந்து 320.91 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 331.91 ரூபாயிலிருந்து 333.18 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் : இன்றைய நாணயமாற்று வீதம் | Dollar Exchange Rate At Banks Today
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 319.50 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 330.50 ரூபாயாகவும் மாறாமலுள்ளது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 321 ரூபாயிலிருந்து 322 ரூபாய் மற்றும் 331 ரூபாயிலிருந்து 332 ரூபாயாகவும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tuesday, October 24, 2023
யாழ் ஊர்காவற்துறை பாடசாலை பெண் அதிபரின் அந்்தரங்கம்!! வங்கிக் கணக்கில் மில்லியன் கணக்கான பணம்!!
தீவக கல்வி வலயத்தின் பிரபல ஊர்காவற்றுறை பெண்கள் பாடசாலையின் அதிபரின் தனிநபர் வங்கிக்கணக்கு மோசடியை மூடிமறைக்க முயல்வதாக பெற்றோர் தரப்பால் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் தீவகம் ஊர் புனித மரியாள் றோ.க மகளிர் வித்தியாலயத்தின் 2022ஆம் ஆண்டு 150ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு உள்நாட்டு, வெளிநாட்டு நண்பர்களிடமிருந்து பல மில்லியன் ரூபா நிதியினை அதிபர் தனிநபர் வங்கிக் கணக்கின் ஊடாக மேற்கொண்டுள்ளார் .இது தொடர்பாக ஆண்டுவிழா வாசிப்பின்போது கணக்கறிக்கை முறைகேடுகள் தொடர்பாக பெற்றோரால் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில், குறித்த பாடசாலை அதிபர் நிதி விடயம் தொடர்பில் உரிய பதில் வழங்கவில்லை.
குறித்த முறைகேடு தொடர்பில் வட மாகாண ஆளுநர் கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு எழுத்து மூலமாக கடிதம் அனுப்பப்பட்ட நிலையில் உரிய பதில் இதுவரை வழங்கப்படவில்லை.
இந்நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக தீவக வலயக் கல்வி அலுவலக தகவல் வழங்கும் அலுவலரிடம் பாடசாலையின் 150ஆவது ஆண்டுவிழா கணக்கறிக்கைகள் தொடர்பான தகவல்களை முறைப்பாட்டாளர் கோரி விண்ணப்பித்தார்.
பதில் வழங்கிய தீவக கல்விவலய தகவல் வழங்கும் அலுவலர் தங்களால் கோரப்பட்ட ஆவணங்கள் தனிப்பட்ட நபர்களின் வங்கிக் கணக்கு பெயர்களினூடாக மேற்கொள்ளப்பட்டமையால் இது தொடர்பான தகவல்களை வழங்கமுடியாதுள்ளது என உறுதிப்படுத்தியது.
பாடசாலை நிகழ்வுக்காக தனிப்பட்ட வங்கிக் கணக்கில் பணம் சேகரித்த அதிபருக்கு எதிராக வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் ஏன் நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றது என பெற்றோர் தரப்பால் சந்தேகம் வெளியிடப்படுகிறது.
நோர்வே நாட்டில் ஈழத்து பெண் விமானியாக சாதனை! Achievement Of Elamite Woman Pilot In Norway
யாழ். குருநகரில் இருந்து புலம்பெயர்ந்து நோர்வே சென்ற ஈழத்துப் பெண்ணான ஷெர்லி செபஸ்தியாம்பிள்ளை அந் நாட்டின் தமிழ் பெண் விமானியாக பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்ளுக்கு முன் தனது விமான கல்வியை ஆரம்பித்து தனது ஆரம்ப பயிற்சியை Taxas அமெரிக்காவில் நிறைவு செய்து பின் மீண்டும் நோர்வேயில் கல்வியை தொடர்ந்து விமானத்தை ஓட்டும் பரீட்சையில் சித்தியடைந்து விமானியாக பட்டம் பெற்றுள்ளார்.
வாழ்த்து செய்தி
இவர் விமானத்தை பழுதுபார்க்கும் படிப்பை நோர்வேயில் நிறைவுசெய்து 12 ஆண்டுகள் விமானங்களை பழுதுபார்பவராக பணிபுரிந்துள்ளார்.
தனது தந்தையின் 50 வருட கனவிற்காக பல கஷ்டங்கள்,சிரமங்கள், தடைகளையும் தாண்டி சாதித்து காட்டியுள்ளார்.
மனைவியை கொலை செய்து வீட்டின் பின்புறம் புதைத்த கணவன் கைது; முள்ளியவளையில் சம்பவம்
முல்லைத்தீவு - முள்ளியவளையில் மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவாகியதாக சந்தேகிக்கப்படும் நபர் பொலிஸாரால் இன்று (24) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை நாளை நீதிமன்றில் ஆஜர்படுத்த நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் தாயார் செய்த முறைப்பாட்டிற்கு அமைய, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
முள்ளியவளை - நீராவிப்பிட்டியில் வசித்த தனது மகள், மருமகனை தொடர்புகொள்ள முடியாதிருந்த மகளின் தாயார், அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு சென்றுள்ளார்.
எனினும், எவ்வித தகவலும் கிடைக்காததால் குறித்த தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதற்கமைய, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் உயிரிழந்த பெண்ணின் கணவரை வெல்லம்பிட்டிய பகுதியில் இன்று காலை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அவர் தனது மனைவியை கொலை செய்தமை தெரியவந்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில், அவர்கள் வசித்த வீட்டின் பின்புறத்தில் புதைக்கப்பட்டிருந்த சடலம் இன்று மாலை தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக முள்ளியவளை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குடும்பத் தகராறு காரணமாக குறித்த பெண்ணை அவரது கணவர் கொலை செய்து புதைத்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ் பஸ் நிலையத்தில் கொடூரமாக “பேர்த்டே” கொண்டாடிய முக்கிய காவாலி டில்லு சிறையில் அடைக்கப்பட்டான்!!!
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக கூட்டம் கூட்டி பிறந்தநாளை கொண்டாடிய , பிறந்தநாளுக்கு உரிய பிரதான சந்தேக நபரான டில்லு என்ற ரவுடி யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரின் விசேட நடவடிக்கையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரை விசாரணைக்கு பின்னர், நேற்றைய தினம் யாழ்.நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்திய போது , சந்தேகநபரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் , யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து , அவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக, 50க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்த 150க்கும் மேற்பட்ட காவாலிகள் ஒன்று கூடி தங்களில் ஒருவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
அதனை டிக்டொக் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் உள்ளனர்.
பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்களின் செயற்பாடானது வீதியில் சென்ற மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்ததாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு தொலைபேசி ஊடாக அறிவிக்கப்பட்ட போதிலும் பொலிஸார் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவில்லை.
யாழ்.நகர் மத்தியில் சன நெருக்கடியான நேரத்தில் சட்டவிரோதமான முறையில் ஒன்று கூடி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்கள் அது தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்காதமை தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்து இருந்தனர்.
அதனை அடுத்து சட்டவிரோதமான முறையில் கூட்டம் கூடி பிறந்தநாள் கொண்டாடி , மக்களின் இயல்பு வாழ்வுக்கு இடையூறு ஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்க்ளை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் இது வரையில் பிறந்தநாளுக்கு உரிய நபர் , பிறந்தநாளை ஏற்பாடு செய்த இருவர் உள்ளிட்ட 08 பேர் கைது செய்யப்பட்டு யாழ்.நீதவான் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Monday, October 23, 2023
தனது கணவனை மயக்கி வைத்துள்ளார்!! யாழ் பிரபல பாடசாலை ரீச்சர் மீது கனடாவிலிருந்து மனைவி பொலிசில் புகார்!!
யாழ் வலிகாமம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் 39 வயதான ஆசிரியை மீது கனடாவிலிருந்து 41 வயதாக குடும்பப் பெண் ஒருவர் இலங்கையில் உள்ள வெளிளிநாட்டு முறைப்பாடுகளை கவனிக்கும் பொலிசாரிடம் முறையிட்டுள்ளார். அதன் விபரங்கள் மற்றும ஆசிரியையின் புகைப்படங்கள் உட்பட பல ஆதாரங்களை ஊடகங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
யாழ் வலிகாமம் பகுதியைச் சேர்ந்த குறித்த ஆசிரியை திருமணமாகி 2 பிள்ளைகளின் தாய். இவரது கணவர் 2016ம் ஆண்டளவில் வெளிநாடு சென்ற போது தொடர்பில்லாது காணாமல் போய் விட்டாராம்.
இந் நிலையில் பேஸ்புக் மூலமாக தனது 44 வயதான கணவருடன் அறிமுகமாகி தற்போது தன்னிடமிருந்து கணவரை பிரித்து வைத்துள்ளது மட்டுமல்லாது பெருமளவு பணத்தையும் குறித்த ஆசிரியைக்கு கொடுத்துள்ளதாக முறையிட்டுள்ளார் கனடா குடும்பப் பெண். யாழ்ப்பாணம் சென்ற தனது கணவன் ஒரு வருடமாகியும் மீளவும கனடா வராது குறித்த ஆசிரியையுடன் தங்கியுள்ளாராம். அத்துடன கணவனை மீளவும் கனடா செல்லுமாறு கூறச் செல்லும் தனது உறவுகள் மீது தாக்குதல் நடாத்துவதுடன் அவர்களை யாழ்ப்பாணத்தில் உள்ள ரவுடிகள் மூலம் அச்சுறுத்தி வருவதாகவும் பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்.
கனடாவிலிருந்து யாழ் வரும் போது தன்னிடமிருந்த 75 பவுண் நகைகளை தனக்கு தெரியாது இலங்கைக்கு கொண்டு சென்றதுடன் ஒரு லட்சம் கனேடிய டொலர்களுக்கு மேலாக வங்கியிலிருந்து இலங்கைக்கு மாற்றியுள்ளதாகவும் கனடா குடும்பப் பெண் ஆதாரங்களுடன் பொலிசாருக்கு முறையிட்டுள்ளார். இவரது இந்த நடவடிக்கையால் தானும் தனது 15, 12 வயதாக இரு பெண் பிள்ளைகளும் நிர்க்கதியான நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருத்தரங்கிற்கு தடை விதித்த தமிழக அரசு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்த கருத்தரங்கை தமிழக அரசு தடை செய்துள்ளதையடுத்து அதன் பிரதமர் உருத்திரகுமாரன் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். “மலையகத் தமிழர்களின் 200 வருட துயரம்” என்ற தலைப்பிலான கருத்தரங்கிற்கு அனுமதியை மறுத்த இந்தியாவின் தமிழ்நாடு அரசாங்கத்தின் நடவடிக்கை கண்டிப்புக்குரியது என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருத்தரங்கிற்கு தடை விதித்த தமிழக அரசு | Former Ltte Negotiator Slams Tamil Nadu Government நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழ்நாட்டு உறுப்பினர்களால் ஒழுங்கமைக்கப்பட்டு கடந்த 15.10.2023 ஆம் திகதி நடைபெறவிருந்த “இலங்கைத்தீவில் மலையகத் தமிழர்களின் 200 ஆண்டுகள்துயரம்” எனத் தலைப்பிடப்பட்ட கருத்தரங்கிற்கு தமிழ்நாடு அரசின் அனுமதி மறுப்பை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டிக்கிறது. பேச்சு சுதந்திரம் அத்தியாவசியம் இந்த ஜனநாயகப் பண்பற்றசெயலானது, பேச்சுச் சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரம் ஆகிய உரிமைகளையும் மீறுகிறது. மகாத்மா காந்தி குறிப்பிட்டது போன்று.“மனிதன் ஒருவனது சுதந்திரத்திற்கு, சுவாசிப்பதற்கு ஒக்சிசனைப் போன்று, பேச்சுச் சுதந்திரம் அத்தியாவசியமானது.” இந்த கருத்தரங்கிற்கு அனுமதி மறுத்த தமிழக அதிகாரிகள், ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் எழுத்துப்பூர்வமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிய அனுமதி மறுப்புக்கான எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை என தெரிவித்துள்ளார். மலையகத் தமிழர்களின் 200 ஆண்டுகள் துயரம்” கருத்தரங்கு மீதான தமிழ்நாடு அரசின் அனுமதி மறுப்பை, இந்திய நீதித்துறையில் சட்ட ரீதியாக சவாலுக்குட்படுத்துவதற்கான தயார்ப்படுத்தல்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழ்நாடு உறுப்பினர்கள், த.தமிழினியன், த.முகேஷ், கோ.பாவேந்தன், பேராசிரியர் சரஸ்வதி ஆகியோர் மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருத்தரங்கிற்கு தடை விதித்த தமிழக அரசு
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்த கருத்தரங்கை தமிழக அரசு தடை செய்துள்ளதையடுத்து அதன் பிரதமர் உருத்திரகுமாரன் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
“மலையகத் தமிழர்களின் 200 வருட துயரம்” என்ற தலைப்பிலான கருத்தரங்கிற்கு அனுமதியை மறுத்த இந்தியாவின் தமிழ்நாடு அரசாங்கத்தின் நடவடிக்கை கண்டிப்புக்குரியது என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
Former Ltte Negotiator Slams Tamil Nadu Government
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழ்நாட்டு உறுப்பினர்களால் ஒழுங்கமைக்கப்பட்டு கடந்த 15.10.2023 ஆம் திகதி நடைபெறவிருந்த “இலங்கைத்தீவில் மலையகத் தமிழர்களின் 200 ஆண்டுகள்துயரம்” எனத் தலைப்பிடப்பட்ட கருத்தரங்கிற்கு தமிழ்நாடு அரசின் அனுமதி மறுப்பை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டிக்கிறது.
பேச்சு சுதந்திரம் அத்தியாவசியம்
இந்த ஜனநாயகப் பண்பற்றசெயலானது, பேச்சுச் சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரம் ஆகிய உரிமைகளையும் மீறுகிறது. மகாத்மா காந்தி குறிப்பிட்டது போன்று.“மனிதன் ஒருவனது சுதந்திரத்திற்கு, சுவாசிப்பதற்கு ஒக்சிசனைப் போன்று, பேச்சுச் சுதந்திரம் அத்தியாவசியமானது.”
இந்த கருத்தரங்கிற்கு அனுமதி மறுத்த தமிழக அதிகாரிகள், ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் எழுத்துப்பூர்வமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிய அனுமதி மறுப்புக்கான எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
மலையகத் தமிழர்களின் 200 ஆண்டுகள் துயரம்” கருத்தரங்கு மீதான தமிழ்நாடு அரசின் அனுமதி மறுப்பை, இந்திய நீதித்துறையில் சட்ட ரீதியாக சவாலுக்குட்படுத்துவதற்கான தயார்ப்படுத்தல்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழ்நாடு உறுப்பினர்கள், த.தமிழினியன், த.முகேஷ், கோ.பாவேந்தன், பேராசிரியர் சரஸ்வதி ஆகியோர் மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
காரில் வந்த குழுவினரால் அதிகாலைவேளை கடத்தப்பட்டார் பெண் | Woman Was Abducted Early In The Morning
காரில் வந்த குழு ஒன்றினால் குடும்ப பெண் ஒருவர் இன்று அதிகாலை கடத்தப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கற்பிட்டி, பள்ளிவாசல்துறை பிரதேசத்தில் குறித்த சம்பவம் நேற்று (23) அதிகாலை இடம்பெற்றது. இதில். 49 வயதுடைய பெண் ஒருவரே கடத்தப்பட்டவராவார்.
சந்தேகநபரும் காரும் பிடிபட்டன
குறித்த பெண்ணை கடத்தியதாக தெரிவிக்கப்படும் சந்தேகநபர் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் சொகுசு கார் ஒன்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
Woman Was Abducted Early In The Morning
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பாலாவி ஊடாக ஆனமடுவை நோக்கி பயணிப்பதாக கற்பிட்டி காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, அந்த காரை தடுத்து நிறுத்துமாறு கற்பிட்டி காவல்துறையினர் ஏனைய காவல் நிலையங்களுக்கு அறிவித்துள்ளனர்.
காரில் இருந்து குதித்து தப்பிய பெண்
இந்த நிலையில் குறித்த காரை ஆனமடுவ காவல்துறையினர் மீட்டுள்ளனர். இதன்போது, காரில் இருந்த ஒருவர் தப்பியோடிய நிலையில், காரை ஓட்டிய சாரதியை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதேவேளை, ஆனமடுவ, வதத்த பிரதேசத்தில் காரின் வேகம் குறைந்த போது கடத்தப்பட்டதாக கூறப்படும் கற்பிட்டியைச் சேர்ந்த வர்த்தகப் பெண் காரில் இருந்து குதித்துள்ளதாக தெரியவந்துள்ளது. காரில் இருந்து தப்பிய பெண் மறைந்திருந்த நிலையில் பிரதேசவாசிகளால் கண்டுபிடிக்கப்பட்டு அவர் ஆனமடுவ காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இவர் கடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் தெரியவராத நிலையில், கைது செய்யப்பட்ட நபரையும், காவல்துறையினரின் காவலில் வைக்கப்பட்ட பெண்ணையும் மேலதிக விசாரணைகளுக்காக கற்பிட்டி காவல்துறையினரிடம் ஒப்படைக்கவுள்ளதாக ஆனமடுவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
பிரித்தானிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்! | Woman Left Blind In One Eye After Bath
நீச்சல் குளம் ஒன்றில் குளிக்கச் சென்ற பெண் ஒருவர், ஒரு கண்ணில் பார்வையை இழந்த சம்பமொன்று இங்கிலாந்தில் இடம்பெற்றுள்ளது.
பயங்கர நோய்க்கிருமி ஒன்றின் தொற்றுக்கு ஆளாகியே ஒரு கண்ணில் பார்வை இழக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இங்கிலாந்திலுள்ள Crayford என்ற இடத்தைச் சேர்ந்த ஷெரீன் (Shereen-Fay Griffin,) என்ற 38 வயதுடைய பெண்ணே குறித்த நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.
Woman Left Blind In One Eye After Bath
நோய்த்தொற்று
நீச்சல் குளம் ஒன்றில் குளிக்கச் சென்றபோது, அவரது கண்ணில் நோய்த்தொற்று உருவாகியுள்ளது.
இதன் பின்னர் மருத்துவமனைக்கு, சென்று பரிசோதித்துள்ளார்.அவரை பரிசோதித்து விட்டு மருத்துவர்கள் சில மருந்துகளைக் கொடுத்துவிட்டு, மீண்டும் அழைப்பதாகக் கூறியுள்ளார்கள்.
ஆனால், 10 வாரங்களாகியும் ஷெரீனுக்கு மருத்துவமனையிலிருந்து அழைப்பு வரவில்லை .
பார்வை இல்லை
அடுத்த நாள் கண் விழித்து பார்த்த போது அவர் தனக்கு ஒரு கண்ணில் பார்வை இல்லை என்பதை உணர்திருக்கிறார்.
உடனடியாக ஷெரீன் மருத்துவமனைக்கு சென்ற போது தான் அவருக்கு Acanthamoeba keratitis என்னும் கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளதை மருத்துவர் கண்டுபிடித்துள்ளார்.
ஆனாலும் ஷெரீனின் கண் பார்வையை மீட்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மற்றொரு பெரிய மருத்துவமனைக்கு ஷெரீன் செல்ல அவர்கள் ஏற்கனவே கொடுக்கப்பட்ட தவறான சிகிச்சையின் காரணமாக அவரது நிலை மோசமாகி விட்டதாக தெரிவித்துள்ளனர்.
எனவே அவர் ஒரு கண்ணில் பார்வை இழந்தது இழந்தது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இணைய கடன் வழங்கும் இலங்கை கும்பலின் மிரட்டலால் தற்கொலை செய்த இந்திய குடும்பம்!
இந்தியாவின் கேரள மாநிலத்தில் நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், இலங்கையிலிருந்து இணையத்தில் உடனடி கடன் வழங்கும் குழுவொன்றின் மீது கவனம் செலுத்தியுள்ளனர்.
கடந்த செப்டம்பர் 12 ஆம் திகதி, 39 வயதான நிஜோ, அவரது மனைவி ஷில்பா (32) மற்றும் அவர்களது குழந்தைகளான எபல் (7), ஆரோன் (5) ஆகியோர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவர்களது உடல்கள் வீட்டில் கண்டெடுக்கப்பட்டன. இறந்தவர்களில் ஒருவரின் ஆபாசப் படங்களை அவரது உறவினர்களுக்கு அனுப்பப் பயன்படுத்திய எண்ணை போலீஸார் கண்டறிந்ததும் விசாரணை வேறு திருப்பத்தை எடுத்தது.
விசாரணையின் போது, ஆன்லைன் கடன் வழங்கும் நிறுவனங்களில் ஷில்பா கடன் வாங்கியிருப்பதை நாங்கள் உணர்ந்தோம். அவற்றை திருப்பிச் செலுத்துவதில் அவருக்கு சிரமம் உள்ளது. பின்னர், இந்த நிறுவனங்கள் ஷில்பா மற்றும் அவர்களது உறவினர்களுக்கு ஆபாசமான செய்திகளை அனுப்பியது. அந்த கையடக்கத் தொலைபேசி எண்ணைப் பார்த்தபோது அது இலங்கையைச் சேர்ந்த ஒன்று என்பதை உணர்ந்தோம். உண்மையில், அந்த குழுக்கள் இலங்கையில் இருந்து இயங்கி வருகின்றன” என்று இந்திய காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job