Sunday, June 30, 2024
இன்று முதல் நடைமுறையாகும் சில அரச ஊழியர்களின் 25,000 ரூபா கொடுப்பனவு | 25000 Special Allowance Gov Emplyees From Today
அரச சேவையின் நிர்வாக சேவை பிரிவு அதிகாரிகளுக்கு இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 25,000 ரூபா விசேட மாதாந்த கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதுவரை கால சேவையின் அடிப்படையில் வழங்கப்பட்ட விசேட கொடுப்பனவுக்குப் பதிலாக, சேவையின் கால அளவைப் பொருட்படுத்தாமல் 25,000 ரூபா விசேட மாதாந்த கொடுப்பனவாக வழங்குவதற்கு கடந்த (24ஆம் திகதி) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த கொடுப்பனவு இலங்கை பொறியியல் சேவை, இலங்கை கட்டிடக்கலை சேவை மற்றும் இலங்கை நில அளவையாளர் சேவை அதிகாரிகளுக்கும் கிடைக்கும்.
சுற்றறிக்கை விதிகள்
இது தொடர்பான சுற்றறிக்கை பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்னவின் கையொப்பத்துடன் அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
திறைசேரியின் ஒப்புதலுடன் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதுடன், இந்த சுற்றறிக்கையின் விதிகள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை அரசியலுக்கு ஒரு இழப்பு: சம்பந்தனுக்கு இரங்கல் வெளியிட்ட மகிந்த | Mahinda Rajapaksa Condoles R Sampanthan
மறைந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தனுக்கு (R. Sampanthan), முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) இரங்கல் வெளியிட்டுள்ளார்.
குறித்த இரங்கல் செய்தியை மகிந்த ராஜபக்ச தனது எக்ஸ் (X)கணக்கில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
இலங்கை அரசியலுக்கு இழப்பு
அவர் ஒரு பழைய நண்பர் மற்றும் சக ஊழியர், நாங்கள் பல நாட்கள் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம்.
அவரது மறைவு இலங்கை அரசியல் சகோதரத்துவத்திற்கு ஒரு இழப்பு மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இந்த சோக இழப்பை போக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.
காதலிக்கு பயம் காட்ட கயிறு மாட்டிய இளைஞன் பரிதாப மரணம்.. வவுனியாவில் சம்பவம்.!
வவுனியா – நந்திமித்திரகம பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் காதலிக்கு பயம் காட்ட க.ழுத்தில் கயிற்றை மாட்டிய நிலையில் அது இறுகியதால் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன் வவுனியா போகஸ்வேவ பகுதியைச் சேர்ந்த 17 வயது இளைஞன் ஒருவரை காணவில்லை என மாமடுப் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த இளைஞன் இன்றைய தினம் தூக்கிட்டு மரணித்த நிலையில் நந்திமித்திரகம பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டார்.
தனது 15 வயது காதலியை மிரட்டுவதற்காக கழுத்தில் கயிற்றை மாட்டிய நிலையில் குறித்த கயிறு இறுகி மரணித்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனையின் பின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாமடுவ பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பிரித்தானியாவில் வேலைக்கு சேர்ந்த 2 நாட்களில் இந்தியருக்கு நேர்ந்த சோகம்
பிரித்தானியாவில் நடந்த விபத்தில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பெரும்பாவூரைச் சேர்ந்த ரீகன் ஜோஸ் (36) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட விபத்தில் ஜோஸ் இறந்துவிட்டதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
தலையில் ஏற்பட்ட காயமே மரணத்திற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விபத்து குறித்த கூடுதல் தகவல்கள் எதுவும் தற்போது கிடைக்கவில்லை.
ஜோஸ் நான்கு மாதங்களுக்கு முன்பு பிரித்தானியாவிற்கு சென்றுள்ளார். அதுமட்டுமின்றி, விபத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் நிறுவனத்தில் சேர்ந்ததாக கூறப்படுகிறது.
ரீகன் ஜோஸின் மனைவியும் இங்கிலாந்தில் தான் செவிலியராகப் பணிபுரிகிறார். இவர்களுக்கு நான்கு வயதில் மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் தேசிய அரசியலின் மூத்த உறுப்பினர் சம்பந்தன் காலமானார் | Itak Sampanthan Died
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் (R. Sampanthan) சற்று முன்னர் காலமாகியுள்ளார்.
உடல் நலக் குறைவு காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் இன்று உயிரிழந்துள்ளார்.
இதன்படி,
தனது 91 ஆவது வயதில் இரா.சம்பந்தன் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சுகயீனம்
இதேவேளை, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக இரா.சம்பந்தனுக்கு 3 மாத கால விடுமுறை வழங்க நாடாளுமன்றில் முன்மொழியப்பட்டது.
அதன்போது, இரா.சம்பந்தன் சுகயீனமுற்றிருப்பதாகவும் விடுமுறை வழங்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்த நிலையிலேயே அந்த அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்பட்டது!
இன்று -30- நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 344 ரூபாவாக நிர்ணயிக்கப்படவுள்ளது.
ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 41 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.
ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 379 ரூபாவாக நிர்ணயிக்கப்படவுள்ளது.சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 22 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 355 ரூபாவாக நிர்ணயிக்கப்படவுள்ளது.
இன்று நள்ளிரவு எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம் | Srilanka Fuel Price
எரிபொருள் விலைகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான தீர்மானங்கள் இன்று இரவு இடம்பெறும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன் எரிபொருள் சூத்திரத்தின் அடிப்படையில் மாதாந்த எரிபொருள் திருத்தம் இடம்பெறும் எனவும் அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சரியான முறையைப் பின்பற்றாத காரணத்தினால் நாளை 5 வீதத்தால் பேருந்து கட்டணத்தை குறைக்கமுடியாதென இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலையை குறைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, எரிபொருள் விலை திருத்தம் இன்று (30ஆம் திகதி) இரவு இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இம்முறை எரிபொருள் விலையில் பாரிய திருத்தம் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
உலக சந்தையில் எரிபொருள் விலையில் மாற்றம்
கடந்த ஒரு மாதத்திற்குள் உலக சந்தையில் எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்ற அடிப்படையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 31ஆம் திகதி இறுதியாக எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2 கோடி ரூபா பெறுமதியான ஒரு கிலோ நகை அணிந்து வந்த யாழ்ப்பாண குடும்பஸ்தர் கட்டுநாயக்காவில் கைது
சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை அணிந்து வந்த இலங்கைப் பயணி ஒருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்துள்ளதாக சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 47 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, 995 கிராம் நிறையுடைய 24 கரட் தங்க நகைகளை அணிந்திருந்த நிலையில் குறித்த நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நயினாதீவு கப்பல்திருவிழாவில் வாள் வெட்டு!! கோண்டாவில் காவாலி கைது!!
யாழ்ப்பாணம் – நயினாதீவில் கப்பல் திருவிழா அன்று இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் காயம் அடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்தார்.
இந்த வாள்வெட்டின் பிரதான சந்தேகநபர்,
பல வாள்வெட்டுகளிலும் தொடர்புடையவர் என்ற ரீதியில் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலமையிலான மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால், கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றதடுப்பு பிரிவில் பாரப்படுத்தப்பட்ட பின்னர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தபட்டார்.
அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.நயினாதீவு கப்பல்திருவிழாவில் வாள் வெட்டு!! கோண்டாவில் காவாலி கைது!!
யாழ்ப்பாணம் – நயினாதீவில் கப்பல் திருவிழா அன்று இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் காயம் அடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்தார்.
இந்த வாள்வெட்டின் பிரதான சந்தேகநபர், பல வாள்வெட்டுகளிலும் தொடர்புடையவர் என்ற ரீதியில் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலமையிலான மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால், கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றதடுப்பு பிரிவில் பாரப்படுத்தப்பட்ட பின்னர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தபட்டார்.
அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
லண்டன் தமிழ் வர்த்தகர் தனது கண்ணுக்கு முன் மகளுடன் உறவு கொள்கிறார் என தாய் பொலிசாரிடம் முறைப்பாடு
லண்டனில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் வர்த்தகர் ஒருவர் மீது விவாகரத்தான பெண் ஒருவர் பா லியல் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளாா். குறித்த வர்த்தகரின் வர்த்தக நிலையத்தில் வேலை செய்யும் 21 வயதான தமிழ் யுவதி ஒருவருடன் குறித்த வர்த்தகர் இரகசிய உறவைப் பேணி வந்துள்ளார்.
இந் நிலையில் யுவதியின் தாயார் குறித்த வர்த்தகர் மீது பொலிசாரிடம் முறைப்பாடு கொடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது. 47 வயதான வர்த்தகர் தனது 21 வயது மகளைக் கட்டாயப்படுத்தி பா லியல் தொடர்பைப் பேணுவதாகவும் தனது வீட்டில் தனது கண்ணுக்கு முன்னாலேயே மகளுடன் வர்த்தகர் உறவு கொள்வதாகவும் அதனைத் தட்டிக் கேட்டால் தன்னை தனது மகள் தாக்க முற்படுவதாகவும் மகளுக்கும் மது போதைப் பழக்கத்தை வர்த்தகர் பழக்கியுள்ளதாகவும் குறித்த முறைப்பாட்டில் தாயார் பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக பொலிசார் மகள் மற்றும் வர்த்தகரை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது. பொலிசாருக்கு முறைப்பாடு கொடுத்த 48 வயதான மட்டக்களப்பைச் சொந்த இடமாகக் கொண்ட குறித்த குடும்பப் பெண் லண்டன் சென்று கணவனுடன் வாழ்ந்து வந்து பின்னர் விவாகரத்துப் பெற்றவர் என தெரியவருகின்றது.
மகளுடன் பா லியல் தொடர்பை பேணியதாக குற்றஞ்சாட்டிய வர்த்தகரின் வர்த்தக நிலையத்திலேயே குறித்த குடும்பப் பெண்ணும் வேலை செய்து வந்தவர் எனவும் வர்த்தகருடன் குறித்த பெண்ணும் பாலி யல் தொடர்பில் ஈடுபட்டதாக வர்த்தகரின் மனைவி குற்றஞ்சுமத்தி வர்த்தகரைப் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் லண்டன் தமிழ்த்தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
Saturday, June 29, 2024
3 வயதில் உலகின் அதிக ஞாபகத் திறன்: இலங்கை சிறுவனின் உலக சாதனை
இலங்கையைச் (srilanka) சேர்ந்த 3 வயது சிறுவனொருவன் சோழன் உலக சாதனைப் படைத்துள்ளார்.
1098 உருவப் படங்களை அடையாளம் காட்டி அவற்றின் பெயர்களை மனப்பாடம் செய்து கூறியே சிறுவன் இந்த சாதனைப் படைத்துள்ளார்.
வத்தளை - ஹுனுபிட்டிப் பகுதியைச் சேர்ந்த ஷம்லான் என்ற சிறுவனே இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
சோழன் உலக சாதனை
இதன்மூலமாக, இந்த சிறுவன் 03 வயதில் உலகின் அதிக ஞாபகத் திறன் கொண்ட சிறுவன் என்ற பெயரை ஷம்லான் பெற்றுள்ளார்.
இதற்கமைய சோழன் உலக சாதனைப் படைத்த இந்த சிறுவனுக்கு சான்றிதழ், தங்கப் பதக்கம் மற்றும் அடையாள அட்டை போன்றவை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
தமிழர் பகுதியில் குளத்தில் மூழ்கிய 14 வயது சிறுவன் மாயம் | 14 Year Old Boy Missing Drowned Iranimaduk Pond
Sri Lanka Police Kilinochchi Sri Lanka Police Investigation
கிளிநொச்சி (Kilinochchi) - இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேற்படி சிறுவன் அவரது சகோதரன் மற்றும் நண்பர்களுடன் நேற்று (29) முற்பகல் 11.30 மணியளவில் நீராடச் சென்றபோதே நீரில் மூழ்கிக் காணாமல்போயுள்ளார்.
காணாமல்போயுள்ள சிறுவன்
திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி கற்று வரும் முறிகண்டி - வசந்தநகர் பகுதியில் வசிக்கும் செல்வரத்தினம் ருஷாந்தன் எனும் சிறுவனே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
இந்நிலையில், காணாமல்போயுள்ள சிறுவனை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மாங்குளம் விபத்தில் கருணாகரன் உயிரிழப்பு!!
மாங்குளத்தில் அண்மையில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 48 வயதான கந்தசாமி கருணாகரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்தார்.
தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கத்துக்கான செயலகத்தின் (ONUR)பணிப்பாளர் சபை பிரதிநிதியாக கந்தசாமி கருணாகரன் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 25ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து திருத்த வேலை காரணமாக வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், பேருந்தின் மீது கனரக வாகனம் மோதி விபத்துக்கு உள்ளானது.
விபத்தில் சம்பவ இடத்திலையே மூவர் உயிரிழந்த நிலையில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதில் ஒருவரே நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சியில் சிறுமி சாருஜா விசர்நாய் கடித்து உயிழந்ததற்கு காரணம் சுகாதார தரப்பின் தவறா?? பரபரப்பு தகவல்!!
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட குமாரசாமிபுரம் பகுதியில் கடந்த 10.05.2024 அன்று நாய் கடிக்கு இலக்கான சிறுமி ஒருவர் உரிய சிகிச்சை பெறாத நிலையில் கடந்த 25,06.2024 அன்றைய தினம் வலிப்பு ஏற்பட்டதன் காரணமாக தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
தொடர்ந்து அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கடந்த 26 ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். தியாகரன் சாருஜா என்ற நான்கு வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்த நிலையில் இன்று (28) சடலம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மேலும் 4 பேர் குறித்த நாய்க் கடிக்கு இலக்கானதுடன் அவர்களுடன் சிறுமியின் பராமரிப்பில் தொடர்பு வைத்திருந்த 11 பேருக்கும் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்தியரின் ஆலோசனைகளுக்கு அமைவாக முற்பாதுகாப்பு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குடும்பத்தினரும், பாதிக்கப்பட்டவர்களும், பிரதேச மக்களும் சுகாதார தரப்பினர் மீது கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
நாய்க் கடிக்கு உள்ளான சிறுமியை சிகிச்சைக்காக அழைத்து சென்ற போது, குறித்த நாய்க்கு தடுப்பூசி போடப்பட்டதா என கேட்ட வைத்தியருக்கு ஆம் என்று அழைத்து சென்ற உறவினர் கூறியுள்ளார்.நாய்க்கு தடுப்பூசி போடப்பட்டதாலும், சிறுமிக்கு குழந்தையில் போடப்படும் தடுப்பூசி போடப்பட்டதாலும் மேற்கொண்டு விசர் நாய் தடுப்பு ஊசி போட வேண்டியதில்லை எனக் கூறி வைத்தியர் அனுப்பி வைத்துள்ளர்.
இதேவேளை, குறித்த நாய் கடித்ததாக 12, 14 வயதுடைய சிறுவர்களும் தர்மபுரம் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற போது, அதே பதிலை வைத்தியர் வழங்கியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் ஊடகங்களிற்கு தெரிவிக்கின்றனர்.நாய் கடித்த சம்பவம் தொடர்பில் சிகிச்சைக்காக செல்லும் போது, குறித்த நாய் தொடர்பில் அறிந்து கொள்வதுடன், நாய்க்கு செலுத்தப்படும் தடுப்பூசி அட்டையை பார்வையிட்ட பின் சிகிச்சை வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
2020ம் ஆண்டு குறித்த நாய்க்கு வழங்கப்பட்ட தடுப்பூசிக்கு பின்னர் எந்த தடுப்பூசியும் வழங்கப்படவில்லை என்பதை குறித்த நாய்க்கு வழங்கப்பட்டுள்ள தடுப்பூசி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த நிலையில், சுகாதார தரப்பினரின் கவனயீனமும் இந்த சிறுமியின் இறப்புக்கு காரணம் என சுட்டிக்காட்டப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் மரண விசாரணையின் போதே தமக்கு தெரிய வந்தது எனவும், தனது பிள்ளையின் மரணத்துக்கு சுகாதார தரப்பினரே காரணம் எனவும் சுட்டிக்காட்டும் உயிரிழந்த சிறுமியின் தந்தை, தனது பிள்ளைக்கு நடந்ததது போன்று யாருக்கும் நடக்கக் கூடாது என கண்ணீர் மல்க கூறுகின்றார்.விசர் நாய்க்கடி தொடர்பில் தமது பிரதேசத்தில் எந்தவொரு விழிப்புணர்வு செயற்திட்டங்களும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை எனவும் பிரதேச மக்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.மிகவும் பின்தங்கிய குறித்த கிராமம் போன்று பல கிராமங்கள் உள்ளன. விசர்நாய்க்கடி தொடர்பான விளக்கங்களையும், விழிப்புணர்வுகளையும் இனியாவது மேற்கொண்டு உயிர்களை பாதுகாக்க வேண்டும் என பிரதேச மக்கள் வினயமான கோரிக்கை முன்வைக்கின்றனர்.
Friday, June 28, 2024
வீடுகளை வாடகைக்கு விடுபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Cyber Financial Fraud As Threat National Security
இந்தியர்கள், நேபாளிகள் மற்றும் பாகிஸ்தானியர்கள் உட்பட பல்வேறு நாட்டவர்களின் சட்டவிரோத இணைய நிதி மோசடி, நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய பொருளாதாரத்தை பாதித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
Cyber Financial Fraud As Threat National Security
நிதி மோசடிகள்
இணையத்தில் மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் கணினி குற்றங்கள் என்ற பிரிவின் கீழ் வருவதாகவும் அவை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆடம்பர வீடுகளில் தங்கியிருந்து ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு நிதி மோசடியில் ஈடுபட்ட 137 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலா விசாவில் மேலும் பல இந்திய பிரஜைகள் நாட்டில் தங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட சூதாட்ட இணைய பக்கம் நாட்டில் இருந்து இயக்கப்பட்டு வருவதும், இந்திய நாட்டவர்களுடன் தொடர்பு கொண்டு கோடிக்கணக்கில் சூதாட்டம் விளையாடுவதும் தெரியவந்துள்ளது.
இணையம் ஊடாக நிதி மோசடி
இந்த இந்திய பிரஜைகள் பல மாதங்களாக இந்த மோசடியை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
இணையம் ஊடாக நிதி மோசடிகளை மேற்கொள்ளும் வர்த்தகர்களின் வலையமைப்புகளை அம்பலப்படுத்த விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒருவருக்குச் சொந்தமான வீட்டை வாடகைக்கு விடப்பட்டாலும், அந்த வீட்டை வாடகைக்கு எடுப்பவர்கள் என்ன வகையான வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்பதைக் கண்டறியும் பொறுப்பு உரிமையாளருக்கு உள்ளது என்றும் கூறியுள்ளார்.
வாடகை வீடுகளில் மோசடி
இவ்வாறு கைது செய்யப்பட்ட பலர் வீடுகளை வாடகை அடிப்படையில் வாங்கி மோசடிகளில் ஈடுபட்டுள்ளமையும், பல்வேறு குற்றத்திற்கு பயன்படுத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட இந்திய பிரஜைகள் தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் காணிகளின் விலை குறையும் நிலை : வெளியான மகிழ்ச்சித் தகவல் | Decreasing Land Prices In Sri Lanka
பூர்வீக காணிகளில் ஒரு அங்குல காணி கூட உரிமை இல்லாத 24 லட்சம் குடும்பங்களுக்கு உரிமப் பத்திரங்கள் வழங்கப்படுவதால் இலங்கையில் காணிகளின் விலை குறையும் நிலை ஏற்பட்டுள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, அரசுக்கு சொந்தமான பெருமளவிலான காணிகளை தனியாருக்கு மாற்றுவதன் ஊடாக நாட்டிலேயே மிகப்பெரிய தனியார்மயமாக்கல் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படுவதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், காணிகள் அற்ற மக்களில் பெரும் பகுதியினர் காணிகளின் உரிமையைப் பெறுவார்கள் என்பதால் காணிகளின் தேவை குறைவதற்கு நிச்சயம் வழிவகுக்கும் என்று சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகளவான காணி
நாட்டிலேயே அதிகளவான காணிகளைக் கொண்ட தொடருந்து திணைக்களத்திற்குச் சொந்தமான காணி விவசாய நடவடிக்கைகள், கைத்தொழில்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்காக நீண்டகால குத்தகை அடிப்படையில் மக்களுக்கு கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணிகளை மாற்றுவதற்கான யோசனைகள் இந்த நாட்களில் எடுக்கப்பட்டு ஜூலை 15 ஆம் திகதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன் மகாவலி மற்றும் ஏனைய அமைச்சுக்களுக்குச் சொந்தமான காணிகளை குறிப்பிட்ட திட்டங்களுக்காக நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது அத்தோடு அரச மதிப்பீட்டாளரின் மதிப்பின் கீழ் அவற்றின் வாடகை நிர்ணயிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழில் கண்ணாடி விரியன் கொத்தி சம்பவ இடத்திலேயே 3 பிள்ளைகளின் தாய் மரணம்!!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு ஆழியவளை கொடுக்குளாயில், பாம்பு தீண்டியதில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் நேற்றையதினம்(27) உயிரிழந்துள்ளார்.
கொடுக்குளாய் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான திருநாவுக்கரசு புனிதசோதி என்பவரே பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார்
சம்பவ தினமன்று காலை வீட்டின் நிலப் பகுதியை துப்பரவு செய்து கொண்டிருந்தவேளை பனை ஓலைக்குள் மறைந்திருந்த பாம்பு தீண்டியதாகவும், சம்பவ இடத்திலையே குறித்த தாய் உயிரிழந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்த குடும்ப பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இனந்தெரியாத நபர்களால் சிறீதரன் எம்.பிக்கு அச்சுறுத்தல்.! | Threat To Sritharan Mp In Jaffna
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின்(S.Sritharan), யாழ்ப்பாணத்திலுள்ள இல்லத்தின் முன்பாக இனந்தெரியாத நபர்களின் அச்சுறுத்தும் வகையிலான நடமாட்டம் அவதானிக்கப்பட்டுள்ளது.
குறித்த அச்சுறுத்தலானது இன்றையதினம் (28) அவதானிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அச்சுறுத்தல்
இலக்கத்தகடுகள் மறைக்கப்பட்ட நான்கு மோட்டார்சைக்கிள்களில், முகமூடிகள் அணிந்தவாறு வருகைதந்த இனந்தெரியாத நபர்களின் நடமாட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனையும், அவரது குடும்பத்தினரையும் அச்சுறுத்தும் வகையிலான திட்டமிட்ட செயல் என கூறப்படுகின்றது.
இதனை கண்காணிப்புக் கமராக்களில் பதிவாகியுள்ள காணொளிக் காட்சிகள் உறுதிப்படுத்துகின்றன.
மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: வங்கி கணக்குகளுக்கு விடுவிக்கப்பட்ட பணம் | 11 Billion Special Allowance For People Sri Lanka
2024 அஸ்வசும நலன்புரி திட்டத்தின் கீழ், ஜூன் மாதத்திற்கான இடைநிலை மற்றும் பாதிக்கப்படக்கூடிய வகைகளைச் சேர்ந்த பயனாளிகளுக்கு சிறப்பு கொடுப்பனவுகளை செலுத்துவதற்காக மொத்தம் 622,495 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நலன்புரி நன்மைகள் சபையினால் 11.6 பில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை அதிபர் செயலகம் தெரிவித்துள்ளது.
திட்டத்தின் முதல் கட்டமாக, 2023 ஜூலை முதல் 31.03.2024 வரை பாதிக்கப்படக்கூடிய பிரிவின் தகுதியான பயனாளிகளுக்கு தலா 5000 ரூபாயும், இடைநிலை பிரிவின் கீழ் தகுதியானவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
விசேட கொடுப்பனவு
இந்த நிலையில், தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, அஸ்வசும நலன்புரி கொடுப்பனவு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு விசேட கொடுப்பனவுகளை செலுத்தும் காலத்தை இந்த வருடம் டிசம்பர் மாதம் வரை நீடிக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க நலன்புரி நன்மைகள் சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அதன் கீழ், ஜூன் 2024 மாதத்திற்கான இடைநிலை மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு சிறப்பு கொடுப்பனவு வழங்கவும், ஜூலை 2024 முதல் டிசம்பர் 2024 வரை மட்டுமே அந்த இரண்டு பிரிவினருக்கும் மாதந்தோறும் 5000 ரூபாய் செலுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மிகவும் வறிய மற்றும் ஏழ்மையான பிரிவினருக்கு தற்போதுள்ள பணம் செலுத்தும் முறை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என நலன்புரி நன்மைகள் சபையின் தலைவரும் ஆணையாளருமான ஜெயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
புதிதாக வாங்கிய வாகனத்தில் தனது குடும்பத்தை அழைத்து கொண்டு கோவில்களை தரிசிக்க சென்ற இளைஞர்- குடும்பமே பலியான துயரம்!
புதிதாக வாங்கிய வாகனத்தில் தனது குடும்பத்தை அழைத்து கொண்டு கோவில்களை தரிசிக்க சென்ற இளைஞர்- குடும்பமே பலியான துயரம்!
நின்றுகொண்டிருந்த லாரி மீது வான் மோதிய விபத்தில், 2 குழந்தைகள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
15 நாட்களுக்கு முன்பு வாங்கிய புதிய வாகனத்தில் ஆலயங்களுக்கு சுற்றுலா சென்ற குடும்பத்தினருக்கே இத் துயர் நேர்ந்துள்ளது. குறித்த வாகனத்தை வங்கிய இளைஞர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களான பாட்டி தாத்தா மாமா மாமி என அனைவரையும் குடும்பத்தோடு அழைத்து சென்றுள்ளார்.
ஜூன் 24ம் திகதி மொத்தமாக 17பேர் பயணித்துள்ளனர். இன்று காலை இவர்கள் மீண்டும் ஊர் திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது. அந்த வகையில் கோவிலில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, ஹாவேரி மாவட்டம் குடேனஹள்ளி கிராஸில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது வேன் மோதியது. நள்ளிரவு சமயத்தில் நடந்த இந்த கோர விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இரண்டு பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்ததால் எம்மேஹட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
அம்பாறை - வங்களாவடி பிரதான வீதியில் விபத்து..!
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டி ஒன்று பயணிகளுடன் அம்பாறை செல்லும் வீதியில் விபத்துக்குள்ளானது.
விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் பச்சை மிளகாய் ஐஸ்கிரீம் உற்பத்தி | Production Of Green Chilli Ice Cream In Sri Lanka
இலங்கையில் (Sri Lanka) வெலிமட பிரதேசத்தில் பச்சை மிளகாயை கொண்டு ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஓரளவு பழுத்த பச்சை மிளகாய்களை கொண்டு இவ்வாறு ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப உதவியை பெற்றுக்கொண்டு இவ்வாறு பச்சை மிளகாய் ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கலப்பு பச்சை மிளகாய்
வெலிமட பிரதேசத்தைச் சேர்ந்த ருவான் லங்காதிலக்க (Ruan Lankatilaka) என்ற நபர் இவ்வாறு ஐஸ்கிரீம் உற்பத்தி செய்துள்ளார்.
கொழும்பு 7 ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய விவகார மற்றும் ஆய்வு பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ருவான் லங்காதிலக்க, தனது இந்த ஐஸ் கிறீம் உற்பத்தியை விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் (Mahinda Amaraweera) அறிமுகம் செய்துள்ளார்.
அத்தோடு, கல்கிரியாகம மற்றும் வருணியா ஆகிய பச்சை மிளகாய் வகைகள் இரண்டையும் ஒன்றிணைத்து கலப்பு பச்சை மிளகாய் வகை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிளகாய் வகை
குறித்த பச்சை மிளகாய் வகையை பயன்படுத்தி ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Production Of Green Chilli Ice Cream In Sri Lanka
மாட்டுப் பால், சீனி மற்றும் பச்சை மிளகாய் ஆகியனவற்றை பயன்படுத்தி இந்த ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த புதிய உற்பத்திக்கான காப்புரிமையை பெற்றுக்கொள்ள விண்ணப்பம் செய்துள்ளதாகவும் சிறிய யோகட் கப் அளவிலான ஐஸ் கிரீம் ஒன்றை 100 ரூபாய்க்கு விற்பனை செய்ய எதிர்பார்ப்பதாகவும் ரூவான் லங்காதிலக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழில் மிக்ஸருக்குள் பொரித்த பல்லியை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றில் நடந்தது என்ன?
யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்கப்பட்ட மிக்ஸருக்கு பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டமை தொடர்பில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் , மிக்ஸரை விற்பனை செய்த நபருக்கு 15ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
சந்நிதி ஆலயத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு , ஆனிப்பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
அந்நிலையில் ஆலயத்திற்கு வருகை தந்த ஒருவர் , ஆலய சூழலில் உள்ள இனிப்பு கடை ஒன்றில் மிக்ஸரை வாங்கிய போது , அதனுள் பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது.
அது தொடர்பில் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , பல்லியுடன் காணப்பட்ட மிக்ஸரை சான்று பொருளாக பெற்றுக்கொண்ட பொது சுகாதார பரிசோதகர் குறித்த இனிப்பு கடைக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
குறித்த வழக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை , மிக்ஸரை விற்பனை செய்த நபரை கடுமையாக எச்சரித்த மன்று அவருக்கு 15ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.
யாழ்ப்பாணத்தில் வெடிகுண்டுடன் கைதான காவாலியால் பரபரப்பு!!
வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவர் வெடிகுண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.இதன்போது கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து , சொகுசு கார், மோட்டார் சைக்கிள், 2 வாள்கள் மற்றும் உள்ளூர் தயாரிப்பு வெடிகுண்டு என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் ஐவரை தேடுகின்றது பொலிஸ்
யாழில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்டமை , வாகனங்களுக்கு தீ வைத்தமை ,
நெல்லியடி பகுதியில் புடவைக்கடை ஒன்றிற்கு பெற்றோல் குண்டு வீசியமை உள்ளிட்ட வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சந்தேகநபரின் வன்முறை கும்பலை சேர்ந்த மேலும் ஐந்து சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ளனர் எனவும், அவர்களைக் கைதுசெய்யும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்ப சுமையை தாங்கும் சிறுவன் - பிரமிக்கும் இலங்கையர்கள் | Small Boy Take Caring A Whole Family In Sri Lanka
காலி, இமதுவ பிரதேச செயலகப் பிரிவின் ஹட்டங்கல கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் 11 வயதுடைய மாணவனின் செயல் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
நிம்சர ரவிந்து பிரபாத் என்ற 11 வயது சிறுவன் தொரபே மேல் நிலைப் பாடசாலையில் 6ஆம் வகுப்பில் கற்று வருகிறார்.
பாடசாலை படிப்பு அல்லாமல் அவருக்கு நிறைய வேலை இருப்பதாக கூறப்படுகின்றது. நிம்சரவின் தந்தை சில வருடங்களுக்கு முன்பு மரத்தில் இருந்து விழுந்தமையினால் ஒரே இடத்தில் முடங்க நேரிட்ட நிலையில் குடும்ப சுமைகளை அம்மா ஏற்றுக்கொண்டார்.
நீரழிவு நோய்
துரதிஷ்டவசமாக, சில மாதங்களுக்கு முன்பு, அவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு அவரது காலை இழக்க வேண்டியிருந்தது. இப்போது நிம்சரவின் அப்பா மட்டுமின்றி அம்மாவும் ஒரே இடத்தில் முடங்கியுள்ளனர்.
தற்போது 11 வயதான நிம்சர அப்பா, அம்மாவின் அனைத்து வேலைகளையும் செய்து, சமையல் செய்து அதனை ஊட்டவும் நேரிட்டுள்ளது.
மேலும், நிம்சரவின் பெற்றோர் இருவரும் ஊனமுற்றோர் உதவித்தொகையை பெற்று வருகின்றனர்.
குடும்ப சுமை
அந்த பணத்தில் நிம்சர குடும்பச் சுமைகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு குடும்பத்தை தாங்கி வருகின்றார்.
அதேவேளை, நிம்சர, எத்தனை தடைகள் வந்தாலும் பாடசாலை செல்வதை நிறுத்துவதில்லை. அதிகாலையில் எழுந்து அப்பா, அம்மா செய்யும் வேலைகள் அனைத்தையும் செய்து, உணவு சமைத்து விட்டு பாடசாலைக்கு சென்று வருகின்றார். இந்த சிறுவன் பலருக்கும் முன்மாதிரியாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையி்ல நிம்சரவின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு காலி மாவட்ட செயலாளர் தர்மசிறி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம் | Reduced Fuel Prices
எரிபொருள் சலுகை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதியின் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலைத் திருத்தம் இன்னும் சில நாட்களில் (30ஆம் திகதி நள்ளிரவு) மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த விலைத் திருத்தத்தில் எரிபொருள் விலையில் கணிசமான அளவு குறையும் என அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எரிபொருள் விலை
நாடு பொருளாதார ரீதியில் குறிப்பிட்ட மட்டத்தை எட்டியுள்ள நிலையில் எரிபொருள் விலைக்கு சில விசேட நிவாரணங்களை மக்களுக்கு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், வழக்கமான பெட்ரோல் விலை லிட்டருக்கு 20-30 ரூபாயும், வழக்கமான ஒயிட் டீசல் விலை லிட்டருக்கு 15-20 ரூபாயும் குறைக்கப்படும் என்று அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.
Thursday, June 27, 2024
ஹிருணிக்காவுக்கு 3 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Hirunika Jailed Today
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவுக்கு 3 வருட சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
2015 ல் தமது டிபெண்டர் வாகனத்தின் மூலம் இளைஞர்கள் சிலரை கடத்தி தாக்குதல் நடாத்திய குற்ற வழக்கிலேயே இந்த தீர்ப்பு ஹிருணிகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான 18 குற்றச்சாட்டுகள் கீழ் ஹிருணிக்கா குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
இளைஞர்கள் கடத்தல்
2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தெமட்டகொட பிரதேசத்தில் தமது டிபென்டர் காரில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்றதாக ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட சந்தேகநபர்கள் குழுவிற்கு எதிராக பொலிஸார் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் மேல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 8 பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். அதற்கமைய, அவருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவில் ஈ.பி.டி.பி கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதயன் மரணம்!!
ஈ.பி.டி.பி அமைப்பின் கட்சி உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சில்வேஸ்ரர் அலன்ரின் (உதயன்) மரணமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் மாரடைப்பு காரணமாக நெடுந்தீவு பகுதியில் காலமாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் நிறைவேறியுள்ள வாழும் நாஸ்ட்ரடாமஸின் கணிப்பு | Living Nostradamus Predictions List World Astrolog
பிரேசில்(Brazil) நாட்டவரான எதிர்காலத்தைக் கணிக்கும் வாழும் நாஸ்ட்ரடாமஸ் இதுவரை கணித்துள்ள விடயங்கள் நடந்துள்ள நிலையில் அவரின் மற்றுமொரு கணிப்பும் தற்போது நடந்துள்ளது.
பிரேசில் நாட்டவரான ஏதோஸ் (Athos Salomé,) , எலிசபெத் மகாராணியின் மரணம், கோவிட் முதல், எலான் மஸ்க்(Elon Musk) ட்விட்டரில் செய்ய இருக்கும் மாற்றங்கள் வரை துல்லியமாக கணித்தவர், சார்லஸ் மன்னராக முடிசூடப்படும் முன்பே, அவரது உடல் நலம் குறித்து எச்சரித்திருந்தார்.
எனவே, அவர் இதுவரை கணித்திருந்த பல கணிப்புகள் நிறைவேறியுள்ள நிலையில், விண்வெளியில் நடக்கவிருக்கும் சில விடயங்கள் குறித்தும் கணித்திருந்தார்.
நாஸ்ட்ரடாமஸின் கணிப்பு
இந்தவகையில் தற்போது அந்த கணிப்பும் நிறைவேறியுள்ளது.
Athos Salomé,
அதாவது, கடந்த ஆண்டு, அதாவது, 2023ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், இதுவரை இல்லாத வகையில் விண்வெளியில் சில பொருட்கள் பூமிக்கருகில் பறந்துவரும் என கணித்திருந்தார்.
ஆனால், அதனால் பூமிக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்றும் தெரிவித்திருந்தார்.தற்போது, அவரது கணிப்பு துல்லியமாக நிறைவேறியுள்ளது.
பெரிய கோள்
Asteroid 2024 Mk என்னும் சிறுகோள் இந்த ஆண்டு, அதாவது, 2024ஆம் ஆண்டு, ஜூன் மாதம், 16ஆம் திகதி கண்டறியப்பட்டது, அது 29ஆம் திகதி பூமிக்கருகில் கடந்து செல்ல உள்ளது என நாசா தெரிவித்துள்ளது.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 99 சதவிகித சிறுகோள்களையும் விட இந்த கோள் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று அனைத்து அரச பாடசாலைகளும் வழமைக்கு திரும்பும்: கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்
Ministry of Education Sri Lankan Schools Education
அனைத்து அரச பாடசாலைகளும் இன்று (28) வழமை போன்று திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளின் ஆசிரியர்களும் அதிபர்களும் சுகயீன விடுமுறையை இரண்டாவது நாளாக நேற்றைய தினமும் (27) முன்னெடுத்திருந்தனர்.
எவ்வாறாயினும், பாடசாலை கல்வி நடவடிக்கைகளை இன்று (28) வழமை போன்று முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin)நேற்று (27) குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அடுத்த கட்டநடவடிக்கைகளை தீர்மானித்து கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கனடா பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறாரா ஜஸ்டின் ட்ரூடோ? | Ustin Trudeau Resigning Prime Minister Of Canada
கனடாவில் செவ்வாயன்று நடந்து முடிந்த இடைத்தேர்தலில், ஆளும் ட்ரூடோவின் கட்சி முக்கிய இருக்கையை இழந்துள்ள விடயம் ட்ரூடோவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
கனடா பிரதமருக்கு பெரும் பின்னடைவு
Ustin Trudeau Resigning Prime Minister Of Canada
செவ்வாய்க்கிழமையன்று, கனடாவின் Toronto-St. Paul's தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில், ஆளும் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி தோல்வியை சந்தித்துள்ளது.
கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளரான Don Stewart, லிபரல் கட்சியின் கோட்டை என கருதப்படும் அத்தொகுதியிலேயே, லிபரல் கட்சி வேட்பாளரான Leslie Church என்பவரை 590 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்துள்ளார்.
Don Stewartஇன் வெற்றி, லிபரல் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
காரணம், 30 ஆண்டுகளாக அத்தொகுதி லிபரல் வசம் இருந்த நிலையில், தற்போது, கன்சர்வேட்டிவ் கட்சியினர் Toronto-St. Paul's தொகுதியக் கைப்பற்றியுள்ளார்கள்.
பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறாரா ட்ரூடோ?
30 ஆண்டுகளாக லிபரல் கட்சியின் கோட்டையாக கருதப்பட்ட Toronto-St. Paul's தொகுதியை கன்சர்வேட்டிவ் கட்சியினர் கைப்பற்றியுள்ளதைத் தொடர்ந்து, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வாரா என கேள்விகள் எழுந்துள்ளன.
ஆனால், தான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என்று கூறியுள்ளார் ட்ரூடோ.
Ustin Trudeau Resigning Prime Minister Of Canada
நானும் எனது குழுவினரும், கனேடியர்கள் காணவும் உணரவும் தக்க வகையில் உண்மையான முன்னேற்றத்தை கொடுப்பதற்காக இன்னமும் அதிக அளவில் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார் அவர்.
ஆனால், கட்சியின் தலைமையில் மாற்றம் வேண்டும், ட்ரூடோ பிரதமர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என அவரது கட்சிக்குள்ளேயே குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளதாக பெயர் வெளியிட விரும்பாத லிபரல் கட்சியினர் சிலர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவில் பெண்ணுடன் இறந்து கிடந்த பாராமெடிக்கல் பணியாளர்: என்ன நடந்தது?
பிரித்தானியாவில் "999: On The Front Line” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த பாராமெடிக்கல் பணியாளர் ஒருவர், பெண் ஒருவருடன் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை பிரித்தானியாவில் Hednesford பகுதியில் உள்ள வீட்டில் சேனல் 4 தொலைக்காட்சியின் "999: ஆன் தி ஃப்ரண்ட் லைன்" என்ற ஆவணப்படத் தொடரில் பங்கேற்ற பாராமெடிக்கல் பணியாளர், பெண் ஒருவருடன் இறந்து நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
இறந்த பாராமெடிக்கல் பணியாளர் 24 வயதான டேனியல் டஃபீல்ட்(Daniel Duffield) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் பாராமெடிக்கல் பணியாளர்கள் சந்திக்கும் அன்றாட சவால்களையும், அவர்களின் சேவையின் முக்கியத்துவத்தையும் படம் பிடித்துக் காட்டிய "999: On The Front Line” என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பரவலாக அறியப்பட்டவர்.
முறையான அடையாளம் இன்னும் நடைபெற வேண்டியுள்ள நிலையில், 24 வயதான டேனியல் டஃபீல்ட் உடன் இறந்து கிடந்த பெண், அதே தொடரில் நடித்த Bridgend பகுதியை சேர்ந்த லாரன் எவன்ஸ்(Lauren Evans,22) என நம்பப்படுகிறது.
கொலை விசாரணை
இறந்து கிடந்த இருவரின் உடல்களும் முதலில் டஃபீல்ட்-டின் சகாக்களால் கண்டறியப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அவசர சேவைகள் மற்றும் காவல்துறையினர் கொலை விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இறப்புக்கான காரணம் அல்லது சந்தேக நபர்கள் குறித்த எந்த தகவலையும் காவல்துறை இதுவரை வெளியிடவில்லை.
அதே சமயம் இந்த துயர சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் உள்ளவர்கள் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ள முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
வவுனியா வைத்தியசாலை விடுதியிலிருந்து ஜீவராசா துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!
வவுனியா வைத்தியசாலையின் 12ம் நோயாளர் விடுதியில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா வைத்தியசாலையில் நீண்ட நாட்களாக நுழைவாயில் காப்பாளராக கடமையாற்றிய இளைஞன் ஒருவர் மன அழுத்தம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
குறித்த இளைஞன் வைத்தியசாலையின் 12 ஆம் விடுதியில் அனுமதிக்கபட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலை நோயாளர் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நொச்சிமோட்டைப் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஜீவராஜா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். குறித்த மரணம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்.போதான நுழைவாயிலில் நிறுத்தி வைக்கப்பட்ட சந்தேகத்திற்கு இடமான காரை மீட்டு சென்ற பொலிஸார்!!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 13ஆம் இலக்க நுழைவாயில் முன்பாக சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரினை யாழ்ப்பாண பொலிஸார் மீட்டு சென்றுள்ளனர்.
யாழ்.போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சியத்திற்கு செல்லும் நுழைவாயிலான 13ஆம் இலக்க நுழைவாயிலை முற்றாக மறித்தவாறான நிலையில் நபர் ஒருவர் காரினை நிறுத்தி சென்றுள்ளார்.
அதனால் மருந்து களஞ்சியத்தில் இருந்து வைத்தியசாலை வாகனம் வெளியே செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டமையால் , வைத்தியசாலை ஊழியர்கள் , காரின் சாரதியை தேடி உள்ளனர்.
நீண்ட நேரமாகியும் காரின் சாரதி அவ்விடத்திற்கு வராதமையால் , வைத்தியசாலை பணிப்பாளர் ஊடாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து , விசாரணைகளை மேற்கொண்டதுடன் , அயலில் உள்ள கடைகளில் விசாரித்த போதிலும் காரின் சாரதியை கண்டறிய முடியாததால் , காரினை அவ்விடத்தில் இருந்து கனரக வாகனத்தின் உதவியுடன் மீட்டு , பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
காரின் இலக்க தகட்டின் ஊடாக அதன் உரிமையாளரை கண்டறிவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job