17 வயதுடைய பாடசாலை மாணவியை கடத்திச் சென்று தவறான முறைக்குட்படுத்தியதாக கூறப்படும் ஐந்து இளைஞர்களை கண்டுபிடிப்பதற்காக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தவறான முறைக்குட்படுத்தப்பட்ட மாணவி, தனது காதலனைச் சந்தித்து விட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐந்து பேர் மாணவியை கடத்திச் சென்றுள்ளனர்.
அதனை தொடர்ந்து, ஜல்தர பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்று தவறான முறைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக மாணவி அளித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
தனது சித்தியிடம் புத்தக கடைக்கு செல்வதாக கூறிவிட்டு காதலனை பார்க்க சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மாணவியை தவறான முறைக்குட்படுத்தியவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.







0 comments:
Post a Comment