நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Sunday, June 23, 2024

யாழில் சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு - பிரேத பரிசோதனையில் வெளியான காரணம் | School Boy Sudden Death In Achchuveli Jaffna


யாழில் சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு - பிரேத பரிசோதனையில் வெளியான காரணம்

யாழ்ப்பாணம் (jaffna) - அச்சுவேலி பகுதியில் சிறுவன் ஒருவர் குடல் அலர்ஜி நோயினால் உயிரிழந்துள்ளார்.

அச்சுவேலி மேற்கு பகுதியைச் சேர்ந்த கபிலன் கபிசன் என்ற சிறுவனே நேற்று (22.6.2024) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுவனுக்கு நேற்றுமுன்தினத்தில் (21.06.2024) இருந்து வாந்தி ஏற்பட்டுள்ளது.

உடற்கூற்று பரிசோதனை

இதையடுத்து சிறுவன் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் நேற்று அதிகாலை நான்கு மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு (Teaching Hospital Jaffna) கொண்டு செல்லும்போது வழியில் உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனையில் குடல் அலர்ஜி நோயினால் குறித்த மரணம் சம்பவித்ததாக தெரியவந்துள்ளது.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment