நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, June 28, 2024

புதிதாக வாங்கிய வாகனத்தில் தனது குடும்பத்தை அழைத்து கொண்டு கோவில்களை தரிசிக்க சென்ற இளைஞர்- குடும்பமே பலியான துயரம்!


புதிதாக வாங்கிய வாகனத்தில் தனது குடும்பத்தை அழைத்து கொண்டு கோவில்களை தரிசிக்க சென்ற இளைஞர்- குடும்பமே பலியான துயரம்!

நின்றுகொண்டிருந்த லாரி மீது வான் மோதிய விபத்தில், 2 குழந்தைகள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

15 நாட்களுக்கு முன்பு வாங்கிய புதிய வாகனத்தில் ஆலயங்களுக்கு சுற்றுலா சென்ற குடும்பத்தினருக்கே இத் துயர் நேர்ந்துள்ளது. குறித்த வாகனத்தை வங்கிய இளைஞர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களான பாட்டி தாத்தா மாமா மாமி என அனைவரையும் குடும்பத்தோடு அழைத்து சென்றுள்ளார்.

ஜூன் 24ம் திகதி மொத்தமாக 17பேர் பயணித்துள்ளனர். இன்று காலை இவர்கள் மீண்டும் ஊர் திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது. அந்த வகையில் கோவிலில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, ​​ஹாவேரி மாவட்டம் குடேனஹள்ளி கிராஸில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது வேன் மோதியது. நள்ளிரவு சமயத்தில் நடந்த இந்த கோர விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இரண்டு பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்ததால் எம்மேஹட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

0 comments:

Post a Comment