நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, June 19, 2024

யாழில் அதிகாலையில் இடம்பெற்ற கொடூரம் சம்பவம்: இளைஞன் ஒருவர் அடித்து கொலை | Man Beaten To Death In Neduntheevu Jaffna


யாழில் அதிகாலையில் இடம்பெற்ற கொடூரம் சம்பவம்: இளைஞன் ஒருவர் அடித்து கொலை
யாழ்ப்பாணம் (jaffna) நெடுந்தீவு பகுதியில் இளைஞன் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம் இன்று (20.6.202) அதிகாலை யாழ். நெடுந்தீவு காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட ஏழாம் வட்டார பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நெடுந்தீவு 07 வட்டாரத்தைச் சமக்கீன் தேவராஜ் அருள்ராஜ் வயது 23 என்பவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

மது போதையில் கொலை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முற்பகை காரணமாக நேற்று இரவு மது போதையில் கொலை செய்யப்பட்டவருக்கும் சந்தேக நபருக்கும் இடையே உயிரிழந்தவரின் வீட்டில் வாய்தர்க்கம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பின்னர் உயிரிழந்தவரின் வீட்டுக்கு முன்னால் உள்ள வீதியில் இருவர் கொண்ட குழுவால் குறித்த இளைஞன் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் சந்தேக நபர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கொலை செய்யப்பட்டவரின் சடலம் தற்போது நெடுந்தீவு ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுந்தீவு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment