நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, June 21, 2024

மன்னாரில் ஹயஸ் வாகன விபத்தில் பெண் பலி!!


மன்னாரில் ஹயஸ் வாகன விபத்தில் பெண் பலி!!

மன்னார் பகுதியில் ஹயஸ் ரக வாகனம் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியதில் பெண்ணொருவர் உயிரிழந்த நிலையில் 13 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இந்த விபத்து சம்பவம் மதவாச்சி பிரதான வீதி, முருங்கன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இசைமாலைத் தாழ்வு பகுதியில் இன்று (21-06-2024) மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கல்முனையில் இருந்து மன்னார் மறிச்சுக்கட்டி பிரதேசத்திற்கு குறித்த வாகனத்தில் வருகை தந்தவர்களின் வாகனம் முருங்கன், இசைமாலை தாழ்வு, நரிக்காடு வளைவு பகுதியில் உள்ள மின் கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.விபத்தில் காயமடைந்தவர்கள் முருங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக 7 பேர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவர்களில் வயோதிப பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வாகனத்தில் பயணித்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சார்ந்த உறவினர்கள் என தெரிய வந்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment