நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, June 21, 2024

கனடாவில் வீடொன்றில் இருந்து சடலங்கள் மீட்பு: தீவிர விசாரணையில் காவல்துறையினர் | 4 Dead Bodies Recovered From A House In Ontario


கனடாவில் வீடொன்றில் இருந்து சடலங்கள் மீட்பு: தீவிர விசாரணையில் காவல்துறையினர்
கனடாவின் (Canada) ஒன்றாரியோ (Ontario) மாகாணத்தின் நகரமொன்றில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து  4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது ஒன்றாரியோவின் ஹரோவ் பகுதியில்  இடம்பெற்றுள்ளது.

இந்த மரணங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத துயரச் சம்பவம் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

நால்வர் மரணம்

இந்தநிலையில், நான்கு உயிரிழப்புக்களும் சந்தேகத்திற்கிடமானவையா அல்லது விபத்தா என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

4 Dead Bodies Recovered From A House In Ontario

இந்த சம்பவத்தினால் பொதுமக்களது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்கள் கிடையாது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினர் விசாரணை

இதேவேளை, இந்த சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பாரியளவிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

0 comments:

Post a Comment