யாழில் யூரியூப்பர் ஒருவரின் திருவிளையாடலால் புறோக்கர் ஒருவர் பெண்ணின் உறவுகளால் நையப்புடைக்கப்பட்டுள்ளார். அத்துடன் யூரியூப்பரும் தொலைபேசி மற்றும் சில பொருட்கள் அடித்து உடைக்கப்பட்டு யுவதியின் உறவுகளால் கவனிக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.
யாழ் தொழில்நுட்பக் கல்லுாரியில் படிக்கும் போது, 21 வயதான இளைஞனுக்கு அங்கு கற்க வந்த அதே வயது யுவதி மீது காதல் வந்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் சமூக முடக்கம் காரணமாக சில மாதங்கள் தொழில்நுட்பக் கல்லுாரி செயற்படாது இருந்துள்ளது. அந் நேரம் குறித்த இளைஞன் யூரியூப் சனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். பொழுது போக்காக ஆரம்பித்த சனல் மளமளவென பிரபலமாகத் தொடங்கியது. கொரோனா காலத்தில் யாழில் மரக்கறி வியாபாரம் எவ்வாறு நடக்கின்றது என அவர் போட்ட ஒரு வீடியோவை 10 லட்சத்திற்கு மேல் பார்வையாளர்கள் பார்த்துள்ளார்கள். அந்த வீடியோ பதிவு மூலமாக குறித்த இளைஞனின் யூரியூப் சனலுக்கு 15 ஆயிரத்துக்கும் மேலான அங்கத்தவர்கள் சேர்ந்துள்ளார்கள். அதன் பின் உசாரான குறித்த இளைஞன் தொடர்ச்சியாக பல வீடியோக்களை பதிவு செய்து தற்போது 60 ஆயிரத்துக்கும் மேலான அங்கத்தவர்களை சேர்த்துள்ளார். அத்துடன் அந்த சனல் மூலமாக குறித்த இளைஞனுக்கு மாதாமாதம் 30 ஆயிரம் தொடங்கி 50 ஆயிரத்துக்குள்ளான ரூபாய் வருமானமும் வந்துள்ளதாகத் தெரியவருகின்றது. இதனையடுத்து யூரியூப்பையே பிரதான தொழிலாக குறித்த இளைஞன் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளார். தொடக்கத்தில் வந்த வருமானம் அதன் பின்னர் படிப்படியாக குறையத் தொடங்கி தற்போது இரு மாதங்களுக்கு ஒரு முறையே 40 ஆயிரம் தொடங்கி 50 ஆயிரம் வரையான ரூபாக்கள் வருமானமே பெற்றுக் கொள்ளவதாக அவரை பிடித்து கவனித்தவர்கள் கூறுகின்றார்கள்.
தனது காதலியுடன் தனது யூரியூப் சனல் தொடர்பாக தொடர்ச்சியாக விவாதித்து வந்துள்ளார். தான் வெளிநாடு போகாமலே டொலர்களில் மாதம் லட்சக்கணக்கில் உழைத்து வருவதாக காதலியிடம் கூறியதுடன் தனது திருமணம் தொடர்பாக காதலியின் பெற்றோருக்கு தெரிவிக்குமாறும் காதலியிடம் கூறியுள்ளார். இருப்பினும் காதலி அதற்கு சம்மதிக்கவில்லை என தெரியவருகின்றது. அப்பா, அம்மாவை ஏதாவது முறையில் கேட்டு உடன்படச் செய்தால் தான் திருமணத்திற்கு தயார் எனவும் காதலி கூறியுள்ளாள். இதனால் யூரியூப்பர் சற்று அதிர்ச்சி அடைந்தாலும் அதனை சமாளித்துக் கொண்டு உனது பெற்றோருக்கு தெரியாது திருமணம் செய்தால் வாழ்க்கை சரியான முறையில் நடக்காது என காதலிக்குக் கூறி தான் காதலியின் பெற்றோரை சமாளித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
காதலியின் 3 சகோதரங்கள் புலம்பெயர் தேசத்தில் இருப்பதும் காதலி வசதி படைத்தவர் என்பதும் யூரியூப்பர் அறிந்து வைத்திருந்தார். இந் நிலையில் காதலியின் வீட்டுக்கு அவளது 25வது பிறந்த தினமான கடந்த 14ம் திகதி யூரியூப்பர் காதலிக்கு சப்ரைஸ் கொடுக்கும் விதத்தில் சில ஆயத்தங்களை செய்துள்ளார். காதலியின் பெற்றோருக்கு தானும் காதலியும் காதலிக்கும் விடயத்தை கூறுவதற்கும் அதனை வீடியோவாக எடுத்து யூரியூப்பில் அப்டேட் செய்வதற்கும் முயன்றுள்ளார்.
காதலியின் வீட்டுக்கு தனக்கு நெருக்கமான கல்யாணப் புறோக்கர் ஒருவருடன் 14ம் திகதி மாலை சென்றுள்ளார் யூரியூப்பர். அவர் காதலியின் வீட்டுக்கு செல்வதைக் கூட காதலிக்கு தெரிவிக்கவில்லை. அங்கு சென்ற போது காதலியும் அவளது தாயாரும் பிறந்தநாளுக்காக அண்மையில் உள்ள கோவில் ஒன்றுக்கு சென்றுள்ளார்கள். வீட்டில் காதலியின் தந்தையும் காதலியின் பிறந்த தினத்திற்கு வாழ்த்துக் கூற வந்திருந்த உறவுகள் சிலரும் நின்றுள்ளார்கள். வீட்டுக்குள் புகுந்து யூரியூப்பர் தனது வழக்கமான பாணியில் கைத் தொலைபேசி மூலம் காட்சிகளை படமாக்கிக் கொண்டும் வசனங்கள் பேசிக் கொண்டும் இருப்பதைக் கண்ட காதலியின் தந்தை, தனது வீட்டுக்குள் புகுந்த இனந்தெரியாத இருவர் செய்யும் செயற்பாடுகளை அவதானிக்கத் தொடங்கினார். அதன் பின்னர் அவர்களை விசாரிக்கத் தொடங்கினார். அவற்றையும் யூரியூப்பர் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். அதன் பின்னர் யூரியூப்பருடன் சென்ற அப்பாவி கலியாணத்தரகு வேலை செய்யும் புகையிலை தோட்டக்காரர் யூரியூப்பரின் லவ் தொடர்பாக காதலியின் தந்தைக்கு கூறியதுடன் இருவரும் உயிருக்குயிராக காதலிப்பதையும் கூறியுள்ளார்.
அத்துடன் தற்போது குறித்த யூரியூப்பர் வெளிநாட்டு மாப்பிளைகளை விட அதிகமாக டொலர்களில் சம்பாதிப்பதாகவும் மாதம் 5 லட்சம் வருமானம் வருவதாகவும் இவன் உங்கள் மகளைக் காதலிக்காவிட்டால் வீடு, வளவுகளுடன் 60 லட்சம் சீதனமும் தான் வேறு பெண்ணிடம் வாங்கிக் கொடுத்திருப்பேன் எனவும் ஆனால் காதலுக்காக அவன் அவ்வாறு செய்யாமல் உங்களிடம் வந்துள்ளான் எனவும் காதலியின் தந்தைக்கு பீலா விடத் தொடங்கினார். அயலவர்கள் மற்றும் உறவுகள் முன்னாடி அடையாளம் தெரியாத இருவர் வந்து தனது மகளின் காதல் தொடர்பாக கதைத்ததால் கடும் கோபம் கொண்ட தந்தை வீட்டில் நின்றவர்களை கொண்டு அவர்களை நன்றாக கவனித்துள்ளார். புறோக்கர் மீதும் யூரியூப்பர் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. தமது அயல் வீட்டில் இனந்தெரியாத இருவர் வந்து முரண்படுகின்றார்கள் என கேள்விப்பட்ட அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் அங்கு திடீரென கூடியுள்ளார்கள். அதன் பின் அவர்களும் இருவரையும் நையப்புடைத்துள்ளார்கள். தனது வீட்டில் பெரும் பிரளயம் நடக்கின்றது என்பதையறிந்து இளைஞனைக் காதலித்த யுவதி ஓடி வந்துள்ளார். அங்கு தனது காதலன் துவண்டு போய் இருப்பதை கண்டு ஏங்கியுள்ளார். தனது தந்தை மற்றும் தாய் மற்றும் அயலவர்கள் அனைவருக்கும் முன் அவர் தன்னை காதலித்ததாக கூறியுள்ளார். ஆனால் தான் காதலிக்கவில்லை என்றும் தனது பெற்றோரிடம் கேட்குமாறு தானே கூறியதாகவும் அங்கு உள்ளவர்களுக்கு கூறியுள்ளார். இதனையடுத்து யூரியூப்பர் மீது தாக்குதல் நடாத்தப்படவில்லை. அவர் கொண்டு சென்ற ஒரு தொலைபேசியும் இன்னொரு உபகரணமும் அடித்து நொருக்கப்பட்டிருந்தது. அத்துடன் குறித்த இளைஞனை அங்கு வந்த சில இளைஞர்கள் யூரியூப்பர் என அடையாளம் கண்டுள்ளார்கள்.
அதன் பின்னர் இளைஞர்களால் குறித்த யூரியூப்பருக்கு எவ்வளவு வருமானம் வருகின்றது என கட்டாயப்படுத்தி யூரியூப் கணக்கை திறந்து பார்த்துள்ளார்கள். அப்போதே அவர் லட்சக்கணக்காக சம்பாதிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. அத்துடன் யூரியூப்பரை தான் காதலிக்கவில்லை எனவும் அவனே தன்னை காதலிக்க சொல்லி வற்புறுத்தி வந்தான் எனவும் காதலி தொடர்ச்சியாக கூறியுள்ளாள். இதன் பின்னர் கடும் எச்சரிக்கை செய்து யூரிப்பரும் அவருடன் வந்த புறோக்கரும் திருப்பி அனுப்பபட்டுள்ளார்கள்.
தான் எந்தவித வன்முறையும் செய்யாது காதலியின் வீட்டில் சென்ற காட்சிகளை பிரபல சட்டத்தரணி ஒருவரிடம் கொடுத்து குறித்த யூரியூப்பர் தன்னையும் புறோக்கரையும் தாக்கியவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுப்பதற்கும் பொலிசில் முறையிடுவதற்கும் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரியவருகின்றது. இருப்பினும் யூரியூப்பர் மற்றும் புறோக்கர் தாக்கப்பட்ட காட்சிகள் எமக்கு அனுப்பபட்டுள்ளன.
குறித்த யூரியூப்பர் தனது தளத்தில் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாது பயனுள்ள பல வீடியோக்களை பதிவு செய்து வெளியிட்டுள்ளதாலும் அவரது சில தனிப்பட்ட நல்ல செயற்பாடுகளுக்காகவும் நாம் அவரை இங்கு அடையாளப்படுத்தவில்லை. ஆனால் யூரியூப்பர் காதலி தன்னை ஏமாற்றி விட்டாள் என்ற வெப்பிராயத்தில் வீடியோக்கள் வெளியிட முற்பட்டால் அவர் தாக்கப்பட்ட காட்சிகள் மற்றும் அவரை நாம் அடையாளப்படுத்தி பதிவிடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம்.
0 comments:
Post a Comment