பூர்வீக காணிகளில் ஒரு அங்குல காணி கூட உரிமை இல்லாத 24 லட்சம் குடும்பங்களுக்கு உரிமப் பத்திரங்கள் வழங்கப்படுவதால் இலங்கையில் காணிகளின் விலை குறையும் நிலை ஏற்பட்டுள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, அரசுக்கு சொந்தமான பெருமளவிலான காணிகளை தனியாருக்கு மாற்றுவதன் ஊடாக நாட்டிலேயே மிகப்பெரிய தனியார்மயமாக்கல் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படுவதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், காணிகள் அற்ற மக்களில் பெரும் பகுதியினர் காணிகளின் உரிமையைப் பெறுவார்கள் என்பதால் காணிகளின் தேவை குறைவதற்கு நிச்சயம் வழிவகுக்கும் என்று சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகளவான காணி
நாட்டிலேயே அதிகளவான காணிகளைக் கொண்ட தொடருந்து திணைக்களத்திற்குச் சொந்தமான காணி விவசாய நடவடிக்கைகள், கைத்தொழில்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்காக நீண்டகால குத்தகை அடிப்படையில் மக்களுக்கு கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணிகளை மாற்றுவதற்கான யோசனைகள் இந்த நாட்களில் எடுக்கப்பட்டு ஜூலை 15 ஆம் திகதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன் மகாவலி மற்றும் ஏனைய அமைச்சுக்களுக்குச் சொந்தமான காணிகளை குறிப்பிட்ட திட்டங்களுக்காக நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது அத்தோடு அரச மதிப்பீட்டாளரின் மதிப்பின் கீழ் அவற்றின் வாடகை நிர்ணயிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment