தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனுக்கு எதிராக, சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாராதன தேரர் இலங்கை பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.
13 ஆம் திருத்த சட்டம் மூலம் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது தொடர்பில் நாடாளுமன்றில் சிறீதரன் உரையாற்றியமையானது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை உருவாக்கும் செயற்பாடு என்பதை வலியுறுத்தியே இந்த முறைபாட்டை பதிவுசெய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
சர்வதேச விசாரணை
நாட்டிற்கு பாதுகாப்பை இல்லாது செய்யும் ஒரு செயற்பாட்டை நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் மேற்கொண்டு வருகிறார்.
அண்மையில் ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதாகவும், காணாமலாக்கப்பட்டோர் தொடர்பிலும் நாடாளுமன்றில் கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.
இது இலங்கையின் சட்டத்திற்கு முரணானது. இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில் முதலில் பொலிஸ் நிலையத்தில் முறைபாடொன்றை பதிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதை தவிர்த்து நாடாளுமன்றில் சென்று நேரடியாக கருத்துக்களை முன்வைக்கின்றார். சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுகின்றார்.
மேலும், வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற கோருகிறார். இவை அனைத்துமே நாட்டிற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.
இவ்வாறான விடயங்களை எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கவில்லை. இதன் காரணமாகவே இந்த முறைபாட்டை பதிவு செய்துள்ளேன்" என்றார்.
0 comments:
Post a Comment