நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, June 27, 2024

பிரித்தானியாவில் பெண்ணுடன் இறந்து கிடந்த பாராமெடிக்கல் பணியாளர்: என்ன நடந்தது?


பிரித்தானியாவில் பெண்ணுடன் இறந்து கிடந்த பாராமெடிக்கல் பணியாளர்: என்ன நடந்தது?
பிரித்தானியாவில் "999: On The Front Line” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த பாராமெடிக்கல் பணியாளர் ஒருவர், பெண் ஒருவருடன் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய்க்கிழமை பிரித்தானியாவில் Hednesford பகுதியில் உள்ள வீட்டில்  சேனல் 4 தொலைக்காட்சியின் "999: ஆன் தி ஃப்ரண்ட் லைன்" என்ற ஆவணப்படத் தொடரில் பங்கேற்ற பாராமெடிக்கல் பணியாளர், பெண் ஒருவருடன் இறந்து நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

இறந்த பாராமெடிக்கல் பணியாளர்  24 வயதான டேனியல் டஃபீல்ட்(Daniel Duffield) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் பாராமெடிக்கல் பணியாளர்கள் சந்திக்கும் அன்றாட சவால்களையும், அவர்களின் சேவையின் முக்கியத்துவத்தையும் படம் பிடித்துக் காட்டிய  "999: On The Front Line” என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பரவலாக அறியப்பட்டவர்.

முறையான அடையாளம் இன்னும் நடைபெற வேண்டியுள்ள நிலையில்,  24 வயதான டேனியல் டஃபீல்ட் உடன் இறந்து கிடந்த பெண், அதே தொடரில் நடித்த Bridgend பகுதியை சேர்ந்த லாரன் எவன்ஸ்(Lauren Evans,22) என நம்பப்படுகிறது.

கொலை விசாரணை

இறந்து கிடந்த இருவரின் உடல்களும் முதலில் டஃபீல்ட்-டின் சகாக்களால் கண்டறியப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அவசர சேவைகள் மற்றும் காவல்துறையினர்  கொலை விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இறப்புக்கான காரணம் அல்லது சந்தேக நபர்கள் குறித்த எந்த தகவலையும் காவல்துறை இதுவரை வெளியிடவில்லை.

அதே சமயம் இந்த துயர சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் உள்ளவர்கள் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ள முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job