சுவிற்சர்லாந்தில் ஈழத்தமிழர் ஒருவர் நடத்தி வரும் உணவகம் ஆரோக்கியமானதும் ஊட்டச்சத்துக்கள் மிக்கதுமான உணவை வழங்குவதாக பாராட்டப்பட்டுள்ளது.
சுவிற்சர்லாந்தின் அரச தொலைக்காட்சியின் ஊட்டச்சத்து வல்லுனர் அனிதா க்ரோலி இந்த உணவகத்தை பாராட்டியுள்ளார்.
சைவநெறிக்கூடம் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர் சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் என்பவரினால் இந்த உணவகம் நடாத்தப்படுகின்றது.
Sasikumar Tharmalingam Vanakkam Resturent
உயர்தரம் கொண்ட சிறந்த உணவு
சுவிற்சர்லாந்தின் பெருநகர் பேர்னில் அமைந்துள்ள பல்சமய இல்லத்தில் (Haus der Religionen - Dialog der Kulturen) சமைத்த உணவை ஆய்ந்து ஆரோக்கிய உணவுக்கான அளவுகோல்களின்படி உயர்தரம் கொண்ட சிறந்த உணவாக காணப்படுவதாக அறிவித்துள்ளார்.
இந்த உணவகத்தில் இஞ்சி நீர் வழங்கப்படுவதாகவும், அது ஆரோக்கியமானது எனவும் தெரிவித்துள்ளார்.
கத்திரிக்காய், வற்றாளைக் கிழங்கு, பூசணிக்காய் போன்ற மரக்கறி வகைகளைக் கொண்டு கறிகள் தயாரிக்கப்படுவதாக கூறியுள்ளார்.
ஆயுர்வேத அடிப்படையில் உருவாக்கப்பட்ட உணவு
அரிசி சோறு, பருப்பு கறி என இங்கு பரிமாறப்படும் உணவு வகைகள் மிகவும் ஆரோக்கியமானது என்பதுடன் சுவையானது என ஊட்டச்சத்து வல்லுனர் அனிதா க்ரோலி தெரிவித்துள்ளார்.
இந்த உணவு வகைகளில் அதிகளபு புரதச்சத்து காணப்படுவதாகவும் இவற்றில் விலங்குப் புரதங்கள் கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது ஓர் ஆயுர்வேத அடிப்படையில் உருவாக்கப்பட்ட சிறந்த சுவையான உணவு என அனிதா புகழாரம் சூட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment