நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, June 26, 2024

நாளையதினமும் மூடப்படும் அபாயத்தில் பாடசாலைகள்: ஆசிரியர் போராட்டத்தின் எதிரொலி | School Leave Tomorrow Sri Lanka


நாளையதினமும் மூடப்படும் அபாயத்தில் பாடசாலைகள்: ஆசிரியர் போராட்டத்தின் எதிரொலி
கொழும்பு லோட்டஸ் வீதியில் முன்னெடுக்கப்பட்ட ஆசிரியர் போராட்டத்தின் மீது நீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (27) ஆசிரியர் - அதிபர் சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin) அறிவித்துள்ளார்.

மூடப்பட்ட பாடசாலைகள் 

இந்த ஆசிரியர் போராட்டத்தினால் நாட்டில் இன்றையதினம் மொத்தமாக 10,026 அரச பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், நாளையதினமும் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

School Leave Tomorrow Sri Lanka

இந்த நிலையில், சுகவீன விடுமுறையை அறிவித்து ஆசிரியர் சங்கத்தினர் இன்று பிற்பகல் கொழும்பில் பாரிய ஆர்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

நீர்த்தாரை பிரயோகம்

அத்துடன், அதிபர் - ஆசிரியர்களின் போராட்டத்தின் போது கொழும்பின் பிரதான வீதிகளுக்கு தடையை ஏற்படுத்த வேண்டாம் எனவும், நிதியமைச்சு, அதிபர் செயலகம், மத்திய வங்கி, அதிபர் மாளிகை ஆகியவற்றுக்குள் அத்துமீறி நுழைய வேண்டாம் எனவும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், நீதிமன்ற தடையுத்தரவை மீறி, ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து அதிபர் செயலகத்திற்கு பேரணியாக செல்ல முற்பட்டதை தொடர்ந்து நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job