புங்குடுதீவு வித்தியாவுக்கு செய்தது போல் செய்யுங்கள்!! வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளரின் அதிர்ச்சி ஓடியோ முழுவிபரம்
வட மாகாண கல்வித் திணைக்களத்தின் மீது பல்வேறு தரப்பினரலாம் ஊழல் நிர்வாக முறை வீடு தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் பாடசாலைகளை மூடி போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு மாகாண கல்வி பணிப்பாளர் குயின்ரஸ் அழுத்தம் வழங்கும் இரகசிய திட்டம் தீட்டும் ஒளிநாடா வெளியாகி உள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் நிர்வாகம் மற்றும் ஊழல் முறைகேடுகள் தொடர்பாக வடமாகாண கல்வித் திணைக்களம் உரிய முறையில் விசாரணைகள் மேற்கொள்வது இல்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் உட்பட பல்வேறு தரப்பினர்களும் குற்றச்சாட்டுக்கள் முன்வைத்து வருகின்றனர்.
குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னணி சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் சமூக வலைத்தளங்கள் என்பவற்றில் செய்திகள் பரவ ஆரம்பித்தன
இவ்வாறான நிலையில் தம்மீது உள்ள குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காகவும் அது தொடர்பில் எழுதுபவர்கள் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதற்காக பாடசாலை மாணவர்களை பகடைக்காய்களாக பயன்படுத்தும் இரகசிய திட்டம் மாகாண கல்வி பணிப்பாளரின் குரல் பதிவி அடங்கிய ஒலிநாடாவுடன் வெளியாகி சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. வித்தியா கொலைச் சம்பவத்தில் பாடசாலைகளை முடக்கியது போல் முடக்குங்கள் என மாகாணக் கல்விப் பணிப்பாளர் மிகக் கீழ்த்தரமான செயற்பாட்டை மேற்கொள்ள ஆயத்தமானது அம்பலமாகியுள்ளது.
அரச உயர் அதிகாரியாக இருந்து கொண்டு அரசு நிர்வாகத்தை குழப்பம் வகையில் பாடசாலைகளை மூடி மாணவர்களை போராட்டத்துக்கு கட்டாயப்படுத்தும் செயற்பாடு அம்பலமாகியுள்ளமை பல்வேறு தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment