நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, July 19, 2024

மென்பொருள் முடக்கம்... சில மணி நேரத்தில் பல பில்லியன் பவுண்டுகளை இழந்த அந்த நிறுவனம் | Tech Boss Apologises Shares Dropped


மென்பொருள் முடக்கம்... சில மணி நேரத்தில் பல பில்லியன் பவுண்டுகளை இழந்த அந்த நிறுவனம்
வரலாற்றிலேயே மிகப்பெரிய மென்பொருள் முடக்கத்திற்கு காரணமான CrowdStrike நிறுவனத்தின் பங்குகள் சரிவை சந்திக்க, சில மணி நேரத்தில் 9 பில்லியன் பவுண்டுகள் தொகையை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மொத்தமாக ஸ்தம்பிக்க வைத்த

உலக நாடுகளை மொத்தமாக ஸ்தம்பிக்க வைத்த அமெரிக்க நிறுவனமான CrowdStrike-ன் தலைவர் George Kurtz பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார்.

Tech Boss Apologises Shares Dropped

உலகம் முழுக்க விமான நிலையங்கள், ரயில் போக்குவரத்து, வங்கிகள், செய்தி நிறுவனங்கள் மற்றும் பெரு நிறுவனங்கள் அனைத்தும் திடீரென்று ஏற்பட்ட மென்பொருள் முடக்கத்தால் ஸ்தம்பித்துப் போயுள்ளது.

இந்த நிலையில், CrowdStrike நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 15 சதவிகித சரிவை சந்திக்க, அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பில் 9 பில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமாக இழப்பை எதிர்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தவறு நடந்ததை கண்டறிந்து, உறுதி செய்யப்பட்டு, சரிசெய்யும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கும் George Kurtz, ஆனால் சிக்கல்களில் இருந்து மீள சில நாட்களாகலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

விமான நிலையங்களில் குழப்பங்கள்

மென்பொருள் முடக்கத்தால், விமானங்கள் மொத்தமாக தரையிறக்கப்பட்டுள்ளது அல்லது தரையிறங்க வேண்டாம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், உலகின் முதன்மையான விமான நிலையங்களில் கூச்சல் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.

Tech Boss Apologises Shares Dropped

மருத்துவமனைகளில் நோயாளிகளின் தரவுகளை மருத்துவர்களால் அணுக முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சைகள் தாமதமாகியுள்ளது. அல்லது சூழ்நிலை சீராகும் வரையில், அறுவை சிகிச்சைகள் திகதி மாற்றப்பட்டுள்ளது.

இதனிடையே, CrowdStrike நிறுவனத்தின் இணை நிறுவனரான George Kurtz-ன் சொத்து மதிப்பும் பெரும் சரிவை சந்தித்துள்ளதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

0 comments:

Post a Comment