நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, July 22, 2024

காத்தான்குடியில் மீட்கப்பட்டுள்ள கைக்குண்டு: மேலதிக விசாரணையில் காவல்துறையினர் | Hand Grenade Recovery Blast Place In Kattankudy


காத்தான்குடியில் மீட்கப்பட்டுள்ள கைக்குண்டு: மேலதிக விசாரணையில் காவல்துறையினர்
Sri Lanka Police Batticaloa Sri Lanka Police Investigation

காத்தான்குடியில்(Kattankudy) பூநொச்சிமுனையில் குண்டு தாக்குதலுக்கு இலக்கான வீடு ஒன்றிற்கு அருகிலுள்ள வீடு ஒன்றின் முன்னாள் உள்ள வடிகான் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்றை நேற்று (21) இரவு மீட்டுள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்தனர்.

பூநொச்சிமுனையில் பச்சை வீட்டுத்திட்டம் என அழைக்கப்படும் முகைதீன் ஜூம்ஆஹ பள்ளி வீதியில் வீடு ஒன்றின் முன்னாள் உள்ள வடிகானுக்கு அருகில் கைவிடப்பட்ட கைக்குண்டு ஒன்று கிடப்பதை சம்பவதினமான நேற்று இரவு அவதானித்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு அறிவித்தனர்.

குண்டு வீச்சு தாக்குதல்

இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று கைவிடப்பட்டிருந்த கைக்குண்டை மீட்பதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துவருவதுடன் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் அழைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை இந்த கைக்குண்டு மீட்கப்பட்ட வீட்டிற்கு அருகிலுள்ள வீட்டின் மீது கடந்த 15 ம் திகதி திங்கட்கிழமை இரவு இனம் தெரியாதோரால் தயாரிக்கப்பட்ட புதியவகையான குண்டு வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment