நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, July 31, 2024

ஐரோப்பிய நாடொன்றில் கஞ்சிபானி இம்ரான் கைது! | Kanjipani Imran Arrested In Belarus


ஐரோப்பிய நாடொன்றில் கஞ்சிபானி இம்ரான் கைது!
கிளப் வசந்த என்ற  வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலையின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் பாதாள உலக தலைவர் கஞ்சிபானி இம்ரான் மற்றும் பாதாள உலக உறுப்பினர் லொக்கு பட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கஞ்சிபானி இம்ரான் ஐரோப்பிய நாடான பெலரஸிலும் (Belaurs) , லோகு பட்டி துபாயிலும் (Dubai) கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்படுகிறது.

கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலை பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிபானி இம்ரானால் திட்டமிடப்பட்டதாகவும், டுபாயைச் சேர்ந்த பாதாள உலகக் குழு உறுப்பினர் லொகு பட்டி என்பவரால் நடத்தப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது நடவடிக்கை

ஆதாரங்களின்படி, பிரான்சில் பதுங்கியிருந்த கஞ்சிபானி இம்ரான், பெலாரஸுக்குத் தப்பிச் செல்ல முயன்றதாகவும், பிரான்ஸ் எல்லையில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிபானி இம்ரான், கிளப் வசந்தவைக் கொலை செய்ய ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் செலவிட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment