நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Sunday, July 21, 2024

கனடாவில் அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவம்… சூட்கேஸில் இருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்பு!


கனடாவில் அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவம்… சூட்கேஸில் இருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்பு!

கனடாவில் உள்ள பகுதியொன்றில் சூட்கேஸில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நியூபவுண்ட்லான்டின் சென் ஜோன்ஸ் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பெண்ணின் சடலம் மீட்கப்படுவதற்கு முதல் நாள் குறித்த பெண்ணின் கணவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் இந்தப் பெண்ணை கொலை செய்து, தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
33 வயதான ஈரானிய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இந்தப் பெண்ணின் கணவர் 34 வயதான ஈரானியர் எனவும் அவரது சடலம் அவர்களது வீட்டில் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இது கொலையா? தற்கொலையா? போன்ற எந்தவொரு விபரங்களையும் பொலிஸார் இதுவரையில் வெளியிடவில்லை.

இச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment