நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, July 25, 2024

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பிளவுபடுத்தியது ரணில் தான்: நாமல் குற்றச்சாட்டு | Ranil Divided The Ltte Namal Also Pointed


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பிளவுபடுத்தியது ரணில் தான்: நாமல் குற்றச்சாட்டு
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட அமைப்புக்கள்,என பல அரசியல் கட்சிகளையும் பிளவுபடுத்தியது ரணில் விக்ரமசிங்கதான் என நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “சிறி லங்கா பொதுஜன பெரமுன கட்சி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு(Ranil Wickremesinghe) ஆதரவு வழங்கியதன் ஊடாக பிளவடைந்தது. ரணில் விக்ரமசிங்கவிற்கு நாம் முழுமையான ஆதரவை வழங்கினோம்.

அரசியல் தீர்மானம்

எமக்கு ஏற்புடையதற்ற செயற்பாடுகளை செய்தாலும், வார்த்தையில் கூட நாம் எதுவும் சொல்லவில்லை. எனினும், கட்சி என்ற விதத்தில், கட்சியை பிளவுபடுத்தியதே எமக்கு கிடைத்த ஆதரவாகும். அதனால், எதிர்காலத்தில் நாம் அரசியல் தீர்மானமொன்றை எடுப்போம்.

நாம் ரணில் விக்ரமசிங்கவிற்கு உண்மையாகவே உதவி புரிந்தோம். அவர் மொட்டு கட்சிக்கு அவ்வாறு செய்யவில்லை. அவரது பழக்கத்திற்கு அதனை செய்தார்.

அவரை கொண்டு வரும் போது, நாம் அதனை அறிந்திருந்தோம். ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, நல்லாட்சி அரசாங்கம், மக்கள் விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஆகியவற்றையும் அவர் பிளவுபடுத்தினார்.

ஜனாதிபதித் தேர்தல் 

at ரணில் விக்ரமசிங்கவுடன் நாம் இன்றும் கலந்துரையாடுகின்றோம். சரியான இடத்திற்கு வருவாரேயானால், அரசாங்கம் தொடர்பில் கலந்துரையாடுவோம்.

Ranil Divided The Ltte Namal Also Pointed

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைவருடனும் கலந்துரையாடுவோம். அதன் பின்னர் இறுதி தீர்மானத்தை எடுப்போம்” என குறிப்பிட்டுள்ளார்

0 comments:

Post a Comment