நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, July 27, 2024

யாழில் காசு மோசடியில் சிறை சென்ற கணவன் பெண் சட்டத்தரணியுடன் சல்லாபம்!! மனைவியின் பரபரப்பு வாக்குமூலம்!!


யாழில் காசு மோசடி வழக்கில் சிறைக்குச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் தற்போது பெண் சட்டத்தரணி ஒருவரின் அந்தரங்க நாயகனாக இருப்பதாக கூறி குடும்பஸ்தரின் மனைவி பெண் சட்டத்தரணியுடன் சண்டையிட்டுள்ளார். அத்துடன் யாழில் உள்ள நீதிமன்றம் ஒன்றின் முன் தான் தீ மூட்டி தற்கொலை செய்யப்போவதாகவும் கத்திக் குளறியுள்ளார். 7 மாத குழந்தைக்கு தந்தையான 29 வயதான இளம் குடும்பஸ்தரின் மனைவியே இவ்வாறு கண்ணகி வேசம் இட்டு தற்கொலைக்கு ஆயத்தமாகியுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக அறிந்து விசாரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவருக்கு குறித்த குடும்பஸ்தரின் மனைவி தெரியப்படுத்திய தகவல்கள் இங்கு தரப்பட்டுள்ளன.

எனது கணவர் 2021ம் ஆண்டு தன்னைக் காதலித்து திருமணம் செய்தார். திருமணம் செய்யும் போது அவரிடம் நெல் அறுவடை செய்யும் இயந்திரம் உட்பட, கல் உடைக்கும் இயந்திரம் உட்பட பல கனரக வாகனங்கள் சொந்தமாக இருந்தன. அத்துடன் கார் ஒன்றையும் வைத்திருந்தார். கோயில் செயலாளராகவும் அவர் இருந்தார். கோயிலுக்கு சென்று வந்த போதே அவர் என்னை காதலித்தார். பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம். திருமணத்தின் பின்னரே அவர் வைத்திருந்த வாகனங்கள் எல்லாம் லீசிங் வாகனங்கள் என தெரியவந்தது. கொரோன மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கணவரின் வியாபாரம் படுத்துவிட்டது. அத்துடன் வட்டியும் அதிகரித்தது. அத்துடன் அவர் சிலரிடம் காசோலை கொடுத்து 40 லட்சத்திற்கு மேல் வட்டிக்கும் பணம் வாங்கியுள்ளது தெரியவந்தது. வட்டி கட்ட முடியாது எனது நகைகள் மற்றும் தாலிக்கொடியை அடகு வைத்தே வட்டியும் கொஞ்ச முதலும் கட்டினார். இருந்தாலும் கடன் முடியவில்லை. அந் நிலையில் வட்டிக்கு கொடுத்த ஒருவன் பொலிசாரிடம் முறையிட்டு நீதிமன்ற வழக்காகியது. பொலிஸ் விசாரணைகளின் போதே பெண் சட்டத்தரணி ஒருவருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. நீதிமன்றில் குறித்த பெண் சட்டத்தரணியே அவருக்கு சார்பாக வாதாடியிருந்தாள். இருப்பினும் கணவன் காசு கட்ட முடியாது 2 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அதன் பின்னர் எனக்கு தந்தை சீதனமாகத் தந்த காணி ஒன்றை விற்று எனது கணவனை சிறையில் இருந்து வெளியே எடுத்தேன்.

கணவன் சிறையில் இருந்து வந்த பின்னர் அவரது நடத்தையில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டது. அவர் போதைப்பொருள் பாவிக்கும் கும்பலுடன் தொடர்பில் இருக்கின்றார் என சந்தேகிக்கின்றேன். சில வேளைகளில் இரவில் மூர்க்கமாக செயற்படுவார். 7 மாதக் குழந்தையின் தாய் என்பதைக் கருதாது கடுமையாக இயற்கைக்கு மாறாக செயற்படுவார். அத்துடன் அவரை வாதாடி வெளியே எடுத்த குறித்த பெண் சட்டத்தரணியின் வீட்டுக்கு தொடர்ச்சியாக செல்லத் தொடங்கினார். கேஸ் விசயமாக செல்வதாகவே நான் நினைத்தேன். குறித்த பெண் சட்டத்தரணி தனது கணவனை பிரிந்து வாழ்பவர். எனது கணவனிலும் விட பல வயது கூடியவர். பெண் சட்டத்தரணி தொலைபேசியில் கோல் எடுத்தவுடனேயே கணவர் எந்த வேலையில் இருந்தாலும் விட்டுவிட்டு அவளது இடத்திற்குச் சென்றுவிடுவார். அவர் இரவில் நீண்ட நேரத்தின் பின் வருவார். ஒரு தடவை அவர் இரவு வந்த போது அவரது நெஞ்சுப் பகுதியில் பற்களால் ஏற்பட்ட கண்டல் காயம் ஒன்றைக் கண்டேன். இது தொடர்பாக நான் கேள்வி கேட்ட போது குழந்தை ஒன்று கடித்துவிட்டது என சமாளித்தார். அதன் பின்னர் தனது தொலைபேசியில் குறித்த பெண் சட்டத்தரணியின் இலக்கத்தை எனக்கு சந்தேகம் வராதவாறு ஒரு ஆணின் பெயரில் குறித்து வைத்திருந்தார்.அத்துடன் தொலைபேசியின் பாஸ்வேட்டையும் நான் ஆராய்ந்து பார்க்காதவாறு மாற்றிவிட்டார். அதற்கும் சண்டையிட்டு தோல்வியடைந்தேன்.

குறித்த பெண் சட்டத்தரணி தனது வீட்டிலும் இன்னொரு தனியான வீட்டிலும் பெயர்ப்பலகையிட்டு தொழில் செய்கின்றார். அண்மையிலேயே அந்த வீட்டில் பெயர்ப்பலகையிட்டுள்ளார். எனது உறவினர் ஒருவர் காணி பிணக்கு ஒன்றிற்காக சட்டத்தரணியின் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு எனது கணவனின் மோட்டார் சைக்கிள் நின்றதை கண்டுள்ளார். ஆனால் அவர் அங்கு கணவரைக் காணவில்லை. இது தொடர்பாக அவர் எனக்கு தெரியப்படுத்தி கணவனின் கேஸ் இன்னும் முடியவில்லையா? என கேட்ட போதே நான் உசாரானேன்.அவரிடம் சட்டத்தரணியின் அலுவலக இடத்தை கேட்டு அறிந்தேன். கணவன் ஒரு நாள் மாலை 6 மணியளவில் வீட்டில் இருந்து வெளியேறிய பின் நான் குறித்த சட்டத்தரணியின் அலுவலக வீட்டுக்கு திடீரென சென்றேன். அங்கு கணவனின் மோட்டார் சைக்கிள் மாமரம் ஒன்றின் பின்னால் மறைக்கப்பட்டபடி நின்றிருந்தது. வீட்டு கேற் மூடப்பட்டிருந்தது. குறித்த வீட்டின் சட்டத்தரணிக்கான அலுவலக அறையும் மூடப்பட்டிருந்தது. கேற்றை ஒருவாறு திறந்து அறை ஜன்னலை திறந்து பார்த்தேன். அங்கு யாரையும் காணவில்லை. அதன் பின்னர் வீட்டின் பின்பக்கம் சென்று சாத்தியிருந்த வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்றேன். சட்டத்தரணி செற்றியில் இருந்து ரீவி பார்த்துக் கொண்டிருக்க எனது வீட்டில் இருந்து ரிப்ரொப்பாக வெளியேறிய கணவன் அங்கு சாரமும் உள் பெனியனுடனும் சட்டத்தரியின் அருகே இருந்தார். நான் அங்கு சண்டையிட்டேன். எனது தலை முடியைப் பிடித்து என்னை வெளியே தள்ளினாள் சட்டத்தரணி. அத்துடன் கணவனையும் வெளியே போகச் சொன்னாள். கணவன் அதற்கிடையில் மீண்டும் ரிப்ரொப்பாக வெளிக்கிட்டு கத்திக் கொண்டிருந்த என்னை இழுத்துக் கொண்டு வெளியே வந்தார்.

அயலவர்கள் எட்டிப் பார்க்கத் தொடங்கினார்கள். அப்போது குறித்த சட்டத்தரணி உடனடியாக கதையை திசை திருப்பினாள். உங்களின் குடும்ப விசயத்தை இங்கு வந்து சொல்லி சண்டை பிடிக்க வேண்டாம். உனது கணவனை பிடிக்காது விட்டால் நீ விவாகரத்துக்கு விண்ணப்பம் செய் நான் வாதாடி கணவனை விவாகரத்து செய்ய வைக்கின்றேன் என கூறி எனக்கும் கணவருக்குமான குடும்ப பிரச்சனை என அங்கு நின்றவர்களை ஏமாற்ற நினைத்தாள். நான் கத்தியபடி உண்மையை சொன்ன போது கணவரே எனக்கு மனநிலை சரியில்லை என அங்கிருந்தவர்களுக்கு கூறத் தொடங்கினார்….

அதன் பின்னர் தற்போது நான் உண்மையில் மனநிலை சரியில்லாத நிலையில் இருக்கின்றேன். தன்னை சட்டத்தரணி அச்சுறுத்தி வைத்திருப்பதாக கணவர் கூறுகின்றார். சட்டத்தரணி சொல்வது போல் நடக்காவிட்டால் மீண்டும் ஜெயிலுக்கு போகவேண்டி வரும் என அவரை சட்டத்தரணி அச்சுறுத்துவதாகவும் அதனாலேயே சட்டத்தரணி சொல்வதற்கு எல்லாம் உடன்படுவதாகவும் கணவன் கூறுகின்றார். தனக்கான வழக்குச் செலவு 3 லட்சம் சட்டத்தரணிக்கு கொடுக்க வேண்டும் எனவும் அதைவிட காசோலை மோசடிக்கான பணத்தில் சட்டத்தரணியும் பண உதவி செய்துள்ளதாகவும் கூறுகின்றார். இவற்றை எல்லாம் நான் பொலிசாருக்கு கூறி முறையிட்ட போது பொலிசார் குறித்த சட்டத்தரணியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பின்னர் என்னையே மீண்டும் அச்சுறுத்தி திருப்பி அனுப்புகின்றார்கள். சட்டத்தரிணியுடன் கணவன் தொடர்பு கொள்வது அவரது தனிப்பட்ட விருப்பம். அதற்கெல்லாம் நாங்கள் முறைப்பாடு பதிவு செய்ய இயலாது என கூறுகின்றார்கள். அத்துடன் இனிமேல் அத்துமீறி சட்டத்தரணியின் வீட்டுக்குள் புகுந்தால் உன்னைக் கைது செய்து சிறைக்குள் அடைப்போம் என பொலிசார் அச்சுறுத்துகின்றார்கள்.

எனது நண்பியின் அறிவுறுத்தலுக்கு அமைய இன்னொரு ஆண் சட்டத்தரணியிடம் சென்று எனது நிலையைச் சொன்ன போது குறித்த சட்டத்தரணி அவற்றை எல்லாம் கேட்டு விட்டு ” அந்த சட்டத்தரணி அப்படித்தான். இது தொடர்பாக சட்டநடவடிக்கை எடுக்க இயலாது. நீரும் அழகாக இருக்கிறீர். உமது கணவர் தப்புச் செய்தால் நீரும் தப்பு செய்யலாம்.. இவை எல்லாம் இப்ப சாதாரணமாக நடக்குது..” என்றவாறு மிகக் கேவலமாக எனக்கு கூறினார். அத்துடன் எனது தொலைபேசி இலக்கத்தை வாங்கி இரவில் பலதடவைகள் எனக்கு மெசேஜ் மற்றும் கோல் எடுத்தார். நான் பதிலளிக்கவில்லை. அவரது இலக்கத்தை தடை செய்துவிட்டேன்… எனக்கு இவற்றை எல்லாம் எண்ணிப் பார்த்த போது பெரும் அதிர்ச்சியாக இருக்கின்றது.

ஒரு மாதத்துக்கு மேலாக கணவன் என்னைத் தொடுவதற்கு நான் அனுமதிப்பதில்லை. அவரிடம் தற்போது பணம் புரள்கின்றது தெரிகிறது. ஏனோதானோ என வீட்டுக்கு வந்து செல்கின்றார். குழந்தையை கண்டு கொள்வதுமில்லை. சட்டத்தரணியுடனான தொடர்புகளை முற்றாக முறிக்குமாறு எச்சரித்துள்ளேன். அவ்வாறு செய்யாதுவிடின் சட்டத்தரணி வாதாடும் நீதிமன்றத்தின் முன் தீக்குளிப்பேன். அதற்கு முன் எனது தற்கொலைக்கு காரணம் யார் என்பதை அங்கு தெரிவித்து விட்டே தீக்குளிப்பேன். இவ்வாறு குறித்த பட்டதாரிப் பெண் ஊடகவியலாளருக்கு வீடியோவாகவே வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

குறித்த பெண் சட்டத்தரணியை ஊடகவியலாளர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பட்டதாரிப் பெண்ணின் முறைப்பாடு தொடர்பாக கேட்ட போது சட்டத்தரணி ஊடகவியலாளரை அச்சுறுத்தினார். சிறைக்குள் ஊடகவியலாளரை அடைப்பேன் என பயமுறுத்தியுள்ளார். அத்துடன் சட்டத்தரணியுடன் தொடர்பு கொண்டு சில மணி நேரங்களில் குறித்த ஒரு பொலிஸ் நிலையத்திலிருந்து ஊடகவியலாளருக்கு அந்த பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அங்கு சென்ற போது தனிப்பட்ட பிரச்சனைகளை ஊடகங்கங்களில் பதிவு செய்தால் கைது செய்வோம் என அச்சுறுத்தி அனுப்பியுள்ளார்கள் பொலிசார்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job