நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Sunday, July 21, 2024

வெளிநாட்டில் இருந்து வந்த சகோதரனுக்கு திருமணம் - ஹோட்டலில் உயிரிழந்த தங்கை | Young Girl Died In Hikkaduwa Swimming Pool Today


வெளிநாட்டில் இருந்து வந்த சகோதரனுக்கு திருமணம் - ஹோட்டலில் உயிரிழந்த தங்கை
ஹிக்கடுவ பிரதேசத்தில் திருமணம் செய்த நபர் ஒருவரின் தேனிலவு நடந்த ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்த மாப்பிள்ளையின் தங்கை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

அம்பலாங்கொடை, துயலையில் வசித்து வந்த மணீஷா செவ்வந்தி என்ற திருமணமாகாத யுவதியே உயிரிழந்துள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டில் இருந்து வந்த சகோதரரின் திருமண நிகழ்வு ஹிக்கடுவ, பின்னதுவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. தேனிலவை கழிப்பதற்காக கடந்த 18ஆம் திகதி அஹுங்கல்லை ஹோட்டலுக்கு வந்துள்ளார்.

புதுமண தம்பதி

மறுநாள் காலை ஒன்பது மணியளவில் தாயும், தங்கையும், தங்கையின் காதலனுடன் புதுமண தம்பதிகளிடம் நலன் விசாரிப்பதற்காக ஹோட்டலுக்கு வந்துள்ளனர்.

இதன்போது, குறித்த யுவதி மற்றும் அவரது காதலன் நீச்சல் குளத்தில் குளிப்பதற்கு அனுமதி பெற்ற நிலையில், யுவதி நீரில் மூழ்கியுள்ளார்.

உடனடியாக நீச்சல் குளத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

0 comments:

Post a Comment