சாவகச்சேரி வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியாக இருந்த வைத்தியர் அர்ச்சுனா அங்கு நடைபெற்று வந்த முறைகேடுகள், ஊழல்கள், துஸ்பிரயோங்களை தனது பேஸ்புக் ஊடக வெளிப்படுத்திய விதம் யாழ்ப்பாண மக்கள் மட்டுமல்லாது ஈழத்தமிழர்கள் மற்றும் தென்னிலங்கை தரப்புக்களிடத்தில் பெரும் வருவேற்பைப் பெற்றது. சினிமாப்பாணியிலான அதிரடி நடவடிக்கைகளை, சாவகச்சேரி வைத்தியசாலையில் நடாத்திய அர்ச்சுனாவை, வைத்தியத்துறையைச் சேர்ந்த எதிர்த்தரப்பினர் அரசவைத்திய அதிகாரிகள் சங்கம் என்ற தங்களது ஆயுதத்தை கையில் எடுத்து வைத்தியசாலையை விட்டு துரத்தியுள்ளனர். அவர் மீண்டும் அதே வைத்தியசாலைக்கு வருவாரா, வரமாட்டாரா என்பதற்கு அப்பால் அவருக்கான மக்கள் ஆதரவு அலை சுனாமி போல அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் குறித்த அலையில் நீந்தி விளையாட அரசியல்தரப்புக்கள் பெரும் முயற்சிகளை எடுத்து வருகின்றன.
யாழ்ப்பாணத்தில் குறிப்பிடத்தக்க மருத்துவர்களின் ஆதரவு பெற்ற கட்சி சைக்கிள் கட்சியாகும். அந்த கட்சியின் ஆதரவாளர்களான வைத்தியர்களால் துாண்டப்பட்ட அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கடந்த 5ம் திகதி நடைபெற்ற யாழ் மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் அருச்சுனாவை சாவசக்சேரி வைத்தியசாலையிலிருந்து அகற்றுமாறு கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அந்தக் கோரிக்கைக்கு எதிராக தென்மராட்சி உட்பட்ட பிரதேச மக்களும் அப்பகுதி சைக்கிள் கட்சி ஆதரவாளர்களும் கடும் எதிர்ப்பை சமூகவலைத்தளங்களின் ஊடாகத் தெரிவித்திருந்தனர். இதே வேளை அர்ச்சுனா அமைச்சர் டக்ளஸ்தேவானந்தாவிடம் நேரடியாகத் தொடர்பு கொண்டு தமக்கு பக்கபலமாக இருக்குமாறு கேட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. அர்ச்சுனாவுக்கான மக்கள் ஆதரவு அலையை தனக்குச் சாதகமாக பாவிக்க டக்ளஸ் ஆயத்தமாகினாா். அருச்சுனாவுக்கு பக்கபலமாக இருப்பேன் என டக்ளஸ் அருச்சுனாவுக்கு தெரிவித்ததாகவும் டக்ளஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே வேளை அர்ச்சுனாவுக்கு ஆதரவாக மக்கள் போராட்டம் ஒன்று கடந்த 8ம் திகதி திங்கள் கிழமை ஆரம்பமானது. அந்த ஆர்ப்பாட்டத்திற்கு திரண்டிருந்த பொதுமக்களின் எண்ணிக்கையைப் பார்த்த சைக்கிள் கட்சி மற்றும் சிறிதரன் தரப்பு போன்றவர்கள் அர்ச்சுனாவுக்கு எதிராக எடுத்திருந்த நிலையை மாற்றி பாராளுமன்றத்திலும் அர்ச்சுனாவின் நடவடிக்கைக்கு ஆதரவாக பொங்கினார்கள். பாராளுமன்றத்தில் மதில் மேல் பூனை போல சிறிதரன் பட்டும்படாமலும் அருச்சுனாவுக்கு ஆதரவானது போல் கதைக்காது பொதுவானதாக தனது கருத்தைத் தெரிவித்திருந்தார். ஆனால் கஜேந்திரன் அர்ச்சுனாவின் நடவடிக்கைக்கு ஆதரவாக பாராளுமன்றில் பாய்ந்திருந்தார்.
மக்கள் ஆதரவு இருந்தும் அருச்சுனா சாவகச்சேரி வைத்தியசாலையிலிருந்து தந்திரமாக வெளியேற்றப்பட்டார். அருச்சுனா வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டது அருச்சுனாவுக்கு எதிரான தரப்புக்களின் இராஜதந்திர வெற்றியாக கருதப்படுகின்றது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் அரச வைத்திய உயரதிகாரிகளின் மௌனமான அதே வேளை ஆழமான ஊடுருவி நடாத்தப்பட்ட தாக்குதல் செயற்பாட்டால் அருச்சுனா வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டார். அருச்சுனா கொழும்புக்கு அழைக்கப்பட்டார். இனிவரும் காலம் அருச்சுனா சாவகச்சேரி வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியாக வருவது என்பது முடியாத காரியம் என அருச்சுனாவுக்கு எதிர்த்தரப்பானவர்கள் கூறுகின்றார்கள். இது உண்மையாகவும் இருக்கலாம்.
அருச்சுனா தனது பேஸ்புக் பதிவுகளில் டக்ளஸ் தனக்கு உதவி புரிவதாக பகிரங்கமாக கருத்து தெரிவித்து வருகின்றார். அருச்சுனா தற்போதுள்ள நிலையில அரசாங்கத்தின் ஏதாவது ஒரு தரப்புடன் ஆதரவுப் போக்கைக் கடைப்பிடித்தால் மாத்திரமே தனது செயற்பாடுகளில் வெற்றியை நோக்கி முன்னேற முடியும். அது அருச்சுனாவின் இராஜதந்திரமாகவும் இருக்கலாம். சாவகச்சேரி வைத்தியசாலை முன்னேற்றத்திற்காக அருச்சுனா மேற்கொண்ட ஓயாத அலைத் தாக்குதல் நடவடிக்கை வெற்றி பெற்றதாகவே கருதப்படுகின்றது. ஆனாலும் அந்த நடவடிக்கையில் அருச்சுனா படுகாயம் அடைந்துள்ளார். காயப்பட்டுள்ள அவருக்கு சரியான மருத்துவ உதவிகள் வழங்கப்படல் வேண்டும்.
தற்போது அருச்சுனாவுடன் தான் தொடர்பில் இருப்பதாக டக்ளஸ் பகிரங்கமாக கூறி வருகின்றார். காயப்பட்டுள்ள அருச்சுனா தனது போராட்ட களமான பேஸ்புக்கில் இருந்து இன்னும் அகற்றப்பட்டு சிகிச்சை வழங்கப்படாத நிலையில் இருக்கின்றார். அவரை களத்திலிருந்து அகற்றி ஓய்வு கொடுக்க வேண்டியது அவசியம். அல்லாது விடின் அவரது போராட்டம் அர்த்தமற்றதாகிவிடும். போராட்ட களத்தில் காயங்களுடன் அருச்சுனா தொடர்ச்சியாக இருப்பது அவரது செயற்பாட்டை மழுங்கச் செய்யும்.
ஆகவே டக்கள்தேவானந்தா அவர்களே…. உங்களுக்கு தயவான விண்ணப்பம்… அருச்சுனா என்னும் ஒரு புரட்சியாளனின் போராட்ட களமாக இருந்த அந்த பேஸ்புக்கில் இருந்து அவரை வெளியே வரச் செய்யுங்கள். இல்லாது விடின் அருச்சுனா தனது களத்திலேயே பிரயோசனமற்ற ஒரு பைத்தியக்காரன் ஆக மாற்றப்படுவான். எதிரிகள் அதற்காகத்தான் காத்திருக்கின்றார்கள். நீங்கள் செய்ய வேண்டியது என்னவெனின் அருச்சுனாவிடம் இருக்கும் தொலைபேசிகளை சிறிது நாட்களுக்கு பறித்து வையுங்கள்…அதுவே நீங்கள் அருச்சுனாவுக்கு செய்யும் முதலுதவியாக இருக்கும்.
நன்றி
வம்பன்….
அருச்சுனா டொக்டரின் போனை பறித்து ஒழித்து வைப்பாரா டக்ளஸ்? தாங்க முடியவில்லை என கோரிக்கை!!

0 comments:
Post a Comment