நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Sunday, July 28, 2024

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நால்வர் கைது | Chines Girl Arrested Katunayaka Airport


கட்டுநாயக்க விமான நிலையத்தில் நால்வர் கைது!
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளுடன் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் நுழைய முற்பட்ட வெளிநாட்டு பெண் உட்பட நான்கு பயணிகள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில், 29,200 சிகரெட்டுகள் அடங்கிய 146 சிகரெட் பெட்டிகளை மறைத்து வைத்திருந்த 37 வயதுடைய சீனப்பெண் ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நான்கு பேர் கைது

மேலும், கொழும்பில் கிளப் ஒன்றில் பணிபுரியும் பெண் ஒருவரும், பாணந்துறை பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய நபரும், மத்துகம பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய சாரதி ஒருவரும் சட்டவிரோதமான முறையில் 39,000 சிகரெட்டுகள் அடங்கிய 195 அட்டைப்பெட்டி சிகரெட்டுகளை தமது பயணப் பொதிகளில் மறைத்து வைத்திருந்த போது சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment