நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, July 17, 2024

பதவி விலகினார் பிரான்ஸ் பிரதமர் | Resigned Prime Minister Of France


பதவி விலகினார் பிரான்ஸ் பிரதமர்
பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சி மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டதைத் தொடர்ந்து, பிரான்ஸ் பிரதமர்  கேப்ரியல் அட்டல்(Gabriel Attal)முறைப்படி பதவி விலகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவரது பதவி விலகலை  ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் புதிய அரசு பதவியேற்கும் வரை அவரை காபந்து பிரதமராக பதவியில் நீடிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

கூட்டணிக்குள் கருத்துவேறுபாடு

பிரான்சில் நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள் அதிக வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளதோடு,மேக்ரானின் கட்சி இரண்டாவது இடத்தையே பிடித்துள்ளது.

Resigned Prime Minister Of France

ஆகவே, பிரதமராக பதவி வகித்து வந்த, மேக்ரான் கட்சியைச் சேர்ந்தவரான கேப்ரியல் அட்டாலே  பதவி விலகியுள்ளார்.

இந்நிலையில் அதிக வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் இருக்கும் இடதுசாரிக் கூட்டணிக்குள் கருத்துவேறுபாடுகளும், உரசல்களும் உருவாகியுள்ளன.

இதன் காரணமாக அக்கட்சியால் இதுவரை பிரதமர் வேட்பாளர் என ஒருவரை முன்னிறுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment