நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, July 13, 2024

பிரித்தானியாவில் ஸ்டார்மர் அரசாங்கம் எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு | Shocking Decision Taken By The British Government


பிரித்தானியாவில் ஸ்டார்மர் அரசாங்கம் எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு
பிரித்தானியாவில் கெய்ர் ஸ்டார்மர்(Keir Starmer) அரசாங்கம் சிறையிலிருக்கும் கொடூரமான குற்றவாளிகளை விடுதலை செய்ய இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சிறைகளில் கூட்ட நெரிசலை சமாளிக்கவும் பேராபத்தைத் தவிர்க்கவும் லேபர் அராசங்கம் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

குறித்த விவகாரம் தொடர்பில் ரிஷி சுனக் அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ள நீதித்துறை செயலர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood),மொத்தமாக ஸ்தம்பித்துப் போகும் நிலையில் இருந்து சிறைகளை அவசரமாக காப்பாற்ற நடவடிக்கை எடுக்க தவறிவிட்டார்கள் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதிய விதிமுறை

மேலும்,  குற்றவாளிகள் தங்கள் தண்டனைக் காலத்தின் 40 சதவிகிதம் நிறைவு செய்திருந்தால் விடுவிக்கப்படுவார்கள் என குறிப்பிடப்படுகின்றது.

குடும்ப வன்முறையில் ஈடுபட்டவர்கள், தீவிரவாதிகள் என குறிப்பிட்ட பட்டியலில் வைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு புதிய விதிமுறை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கொடூரமான குற்றவாளிகள், மூன்றாண்டுகள் தண்டனையை நிறைவு செய்திருந்தாலும் விடுவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Shocking Decision Taken By The British Government

மேலும், குற்றவாளிகள் விடுவிக்கப்படுவதுடன், அவர்களை கண்காணிக்கும் பொருட்டு, உரிய அதிகாரிகளை புதிதாக பணிக்கு அமர்த்தவும் திட்டமிருப்பதாக நீதித்துறை செயலர்  அறிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் இந்த புதிய முடிவால், ஆயிரக்கணக்கான குற்றவாளிகள் விடுதலையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment