நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, July 26, 2024

காதலியை காண யாழ்ப்பாணம் சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி | A Gang Abducted Youth Tortured Him With A Sword


காதலியை காண யாழ்ப்பாணம் சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் காதலியை காண சென்ற இளைஞன் ஒருவனை கடத்திச் சென்ற கும்பல் வாளால் வெட்டி சித்திரவதை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் இன்று(26) மாலை இடம்பெற்றுள்ளது.

தாக்குதல் சம்பவம்

கிளிநொச்சியில் இருந்து தனது காதலியை பார்ப்பதற்காக யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதிக்கு குறித்த  இளைஞர் சென்றுள்ளார்.

இதன்போது, அங்கு கூடிய அடையாளம் தெரியாத நபர்கள் இளைஞனை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்று தலை முடியை வெட்டி வாளால் உடலில் வெட்டி சித்திரவதை செய்துள்ளனர்.

A Gang Abducted Youth Tortured Him With A Sword

இதன்பின்னர், அந்த இளைஞனை உடுவில் பகுதியிலுள்ள வீதியொன்றில் போட்டுவிட்டு கும்பல் தப்பிச் சென்றுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சுழல் ஏற்பட்டுள்ளது.

பூநகரி கிராஞ்சியை சேர்ந்த பிரதீபன் வினுஜன் என்ற இளைஞரே சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளதுடன் பொலிஸாருக்கு நடந்தவற்றை தெரிவித்து விட்டு மயக்கமடைந்துள்ளார்.

இதையடுத்து, படுகாயமடைந்துள்ள இளைஞனை நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வாள் வெட்டு சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment